நான் இந்தப்படம் பார்த்ததில்லை. இந்தப்படம் குறித்து நான் சொல்லவும் தேவையில்லை. பாடல்கள் எல்லோரும் அறிந்த ஒன்று. இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது, இந்த படத்தின் ஆன்மாவை ஒரு பெண்ணின் குரலில் பொத்திவைத்த ராஜாவின் அதிசிறந்த இசைமொழியை. உங்களுக்காக, அந்த 10நிமிட நீள இசைத்துணுக்கை சத்தமேகத்தில் ஏற்றியிருக்கிறேன்.
எத்தனை
உணர்வுகள் பொங்கி வழிகிறது அந்தக் குரலில்!! காதல், ஏக்கம், பிரிவு, தனிமை, வலி, கையறு
நிலை, காத்திருத்தல் இன்னும் பெயரிடப்படாத எத்தனையோ உணர்வுகளை உள்ளடக்கி வெளிப்படும்
அந்தக்குரலிசை, அவளை மடியில் கிடத்தி ஆறுதல்படுத்த நமை தூண்டுகிறது. அதுதான் இசையமைப்பாளனின்
வெற்றி, ஒரு தேர்ந்த கலைஞனின் வித்தை.
கோவில்மணி ஓசை
|
Malaysia Vasudevan / S.Janaki
|
Kannadasan
|
மலர்களே
|
Malaysia Vasudevan / S.Janaki
|
Sirpy
|
மாஞ்சோலை கிளிதானோ
|
P.Jayachandran
|
Muthulingam
|
பூவரசம் பூ
|
S.Janaki
|
Gangai Amaran
|
நீயும் நானும்
|
Malaysia Vasudevan
|
Kannadasan
|
ஏதோ பாட்டு ஏதோ ராகம்
|
ilaiyaRaaja
|
Gangai Amaran
|
கோவில் மணி
https://www.youtube.com/watch?v=TlLDvNqV_gs
அனைத்து பாடல்களும், மலர்களே தவிர்த்து- காணொளி.
மலர்களே | Malargale – MVD, SJ
பாடல்
படத்தில் இடம்பெறவில்லை, அதனால் தற்போதைய தலைமுறை கேட்டிருக்க, பார்த்திருக்க வாய்ப்பில்லை.
கல்யாண பாடல். நாயகனும் நாயகியும் மணம் புரிந்துகொள்வது போன்ற கனவுப் பாடலாக கேட்டு
வாங்கியிருப்பார் பா.ரா. படத்தில் இல்லையென்றாலும், நமக்கு ஒரு அழகான இணைப்பாடல் கிடத்துவிட்டது.
என்ன ஒரு அழகான பாடல். துவக்க இசை முதல் கல்யாண களை பாடல் முழுவதும். வாசு சானகி இணை
எப்போதும் விருப்பமான ஒன்று. முதல் சரணம் முழுவதும் சானகியின் குரலிசை, வாசுவிற்கு
துணையாக ஒலிக்க, இரண்டாம் சரணத்தில் இருவரும் இணைந்து பாட.. என்றென்றைக்குமான ஒரு பாடல்.
In love with Janaki’s humming.
மாஞ்சோலை கிளிதானோ | Manjolai Kilithano Jeyachandran
படைப்பாளி
தன்னையே வெற்றிகண்டு வெற்றிகண்டு முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். தன்னுடன் மட்டுமே
அவன் போட்டி, தன்னை புதுப்பித்து ஓடிக்கொண்டே இருப்பது தான் அவனை முன்னெடுத்துக்கொண்டே
இருக்கும். காதலியின் வனப்புகளை புகழ்ந்து பாடும் ஒரு கவிஞன், அந்த சூழலுக்கு ஒரு பாடல்
என்று தான் பாரா சொல்லியிருப்பார். அதற்கு ராஜாவின் மனவோட்டம் அளித்த மெட்டு, மிரட்சியளிக்கிறது.
ஒரு
கவிஞன் பலவித வடிவங்களில்( வெண்பா, புதுக்கவிதை, வசனகவிதை, etc) கவிதை இயற்றுவதை மனதில்
வைத்து தான் ராஜா இந்தப்பாடலை மெட்டமைத்திருக்க வேண்டும். கவனித்து கேட்டால், முதல்
சரணத்திற்கு பிறகு பாடல் வேறு பாதையில் செல்கிறது. பல்லவி-சரணம்-பல்லவி-சரணம் என செல்வதில்லை.
உணர்ச்சிவசப்பட்ட ஒரு கவிஞன் தன் கவிதைவரிகளை வெறிகொண்டு படிப்பதை போல, மின்னல் வெட்டுவதை
போல.. அத்தனை வேகமான ஒரு இரண்டாம் சரணம், அதை சரணம் என்பதா என்றே தெரியவில்லை. முதல்
சரணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட மெட்டு, நடை, வேகம்.. ராஜா சொன்னதை போல, எத்தகைய
மெட்டு கொடுத்தாலும், I like to challenge myself J
பூவரசம் பூ | Poovarasam Poo SJ
ரயில்
இந்தப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரமாக வருவதால், அதன் இயக்கத்தை ஒத்தே அமைந்திருக்கிறது
இந்தப்பாடல். ரயில் எப்படி மெதுவாக ஆரம்பித்து வேகம் பிடிக்கிறதோ, அதுபோலவே பாடலும்
ஆரம்பித்து வேகம் பிடித்து, சரணத்தில் சென்று நிற்கிறது. பாடல் முழுதும் வரும் ரயிலின்
ஓசை மிகவும் அருமை மேலும் ரயில் ஓடுவது போன்றே பாடகி பாடிகாட்டுவது நம்மை நம் சிறுவயதிற்கே
அழைத்துச்செல்கிறது. J பட்டிதொட்டி hit.
https://www.youtube.com/watch?v=5GdEfZGHW9w
https://www.youtube.com/watch?v=5GdEfZGHW9w
கோவில்மணி | KovilMani MVD
படத்தில்
வரும் ஒரே இணைப்பாடல். அழகாக, அமைதியாக, தேவையான இடங்களில் மேலேறி கீழிறங்கி ஒரு நதியின்
நடைபோல செல்கிறது பாடல். இடையிசையிலும் நதியின் நடை. https://soundcloud.com/sivakumar-sivaraj/koilmani-osai-kizhake-pogum
நீயும் நானும் | Neeyum Naanum
கவிஞனின்
மனம், சமத்துவ உலகையே நாடும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் அடிப்படையில் செல்கிறது
பாடல். காவலுக்கு சென்ற இடத்திலும் மனம் சத்துவத்தை நாடி படும் பாடல். வரிகளின் கூர்மையில்
செல்கிறது பாடல்.
https://www.youtube.com/watch?v=NtWJb3SzCDg
https://www.youtube.com/watch?v=NtWJb3SzCDg
ஏதோ பாட்டு ஏதோ ராகம் | Etho Pattu Etho Ragam
படத்தின்
சூழலுக்கு தேவையான நேரங்களில் அமையும் சோகப்பாடலுக்கு ராஜா பாடும் பாடல் சரியாக அமைந்துவிடும்.
இதுவும் அவ்வகை.
https://www.youtube.com/watch?v=19uLr-v5Pkw
https://www.youtube.com/watch?v=19uLr-v5Pkw
படம் ஆக 02, 1978 அன்று வெளியாகி அடுத்த ஆண்டு வரை வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபோட்டிருக்கு. ராதிகா நாயகியாக அறிமுகம். மீண்டும் அந்த பிண்ணனி இசையை ஓடவிட்டு அந்த குரலின் மாய உலகில் கரைகிறேன். என்றென்றும் ராஜாவுக்கு கடன்பட்டிருக்கு தமிழ்கூறு நல்லுலகம். :)
இந்த படத்துல வர "மாஞ்சோலை கிளிதானோ... " பாட்டைப் பற்றிய என் சிந்தனை கீழுள்ள சுட்டியில்.
பதிலளிநீக்கு" http://t.co/LbdInOHwO5 "
Link போக இயலாதவர்களுக்கு
"நா இதுவரை எந்த பாட்டையும் 2 தடவைக்கு மேலயோ repeated modeலயோ கேட்டதேயில்ல..ஏன்னா அப்படி தோணினது கிடையாது சில பாட்டுக கேட்டதுக்கப்புறம் தானா மனசுல ஓடும் அவ்வளவுதான், ஆனா "மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ... " பாட்ட தொடர்ந்து பல தடவ கேட்டுட்டன்..எப்ப கேட்டாலும் குறைஞ்சது 4,5 தடவ கேக்கறன். எனக்கு அந்த பாட்ட ஒரு தடவ கேட்டுட்டு மனசுல நிக்க வைக்கவே முடியல..ஒவ்வொரு தடவ கேக்க குள்ள புதுசா எதுவோ கேக்குது, அத பதிய வைக்கறதுகுள்ள பாட்டு வரி இழுத்துட்டு போயிடுது.. பாட்டு வரிய கூட ஆழ்ந்து ரசிச்சு ருசிக்க விடல பாட்டோட ஆளும..
ஒரு நீர்வீழ்ச்சி எப்படி தன்னுள்ள அடங்கன எல்லாத்தையும் இழுத்து போட்டு கொட்டுமோ அப்படியே தான் நா இந்தப் பாட்ட உணர்ந்தன்.
முதல்ல வர இசை, வரிகள விட உயர்ந்தது போலவும் அதாவது ஒரு முழு ஆளுமை போலவும், பின் வர வரிகள் யாவும் இசைய அடக்கி ஆள்வது போல வடிவமைக்கப்பட்ருக்குனு தோணுது.. அங்கங்க வர நிறுத்தமும் பின் எழுச்சியும் விவரிக்க என்கிட்ட வார்த்தையேயில்ல.
இந்த பாட்டுல பெண் குரலேயில்ல அதுக்கு ஈடா தான் கொலுசு ஒளி போல என்ன அழகா பாட்டு தோறும் பயணிக்குது..
"நீரோடை போலவே... " ஆமா நீரோடையபோல தான் இந்த பாட்டு வரியும் ஆரம்பிக்குது. " பளிங்குச்சிலையே பவழக்கொடியே
குலுங்கிவரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி..." ஆஹா என்ன அருமையான வரி,இதுல வர ஒவ்வொரு எழுத்தையும் உணர்த்தர மாதிரியான தெளிவான குரல்..
" மின்னல் ஒளியென..."னு ஆரம்பிக்ககுள்ள வேகமா ஓடுற அழகான தமிழ் மான், தன்னை வர்ணிக்கற தலைவன் வரிகள்ல ( அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் ..)வெட்கம் தாளாம அயர்ந்த நடையாதான் "மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில் ...."இந்த வரிகள நா பாக்கறன்.
எத்தன தடவ கேட்டாலும் புதுசு புதுசா தோணுது எனக்கு மட்டும் தான் னு சொன்னா, அது முட்டாள் தனம்.. ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய திருவிழாவ பாக்கும் சிறு குழந்தையுடைய சிறிய கண்களாதான் நான் இருக்கன், இந்த வியப்பு இன்னும் எத்தனை வருசம் இருக்குமோ தெரியாது.. இந்த வியப்ப கொடுத்த அந்த இசையமைப்பாளருக்கு, பாடலாசிரியருக்கு, வாசிச்சவங்களுக்கு, பாடினவருக்கு என் உயிர் எப்பொழுதுமே நன்றி சொல்லும்!"
அன்புடன்
வந்தித்தன்.