ராஜா இசையமைத்த படங்கள் அனைத்தையும் பார்ப்பது இயலாத ஒன்று. வாழ்க்கை மொத்தமும் தேவைப்படும் பெருந்திட்டம் அது, மேலும், பாடல்களைத்தவிர எவ்விதமும் நம்மைக்கவராத படங்கள் பாதிக்கும் மேலே இருக்கும். அதனால் இங்கு, இசைத்தொகுப்பின் மீதான சிறு விவரணையுடன் பாடல் சுட்டிகளை பகிர்வது மட்டுமே பதிவுகளின் அடிப்படை. மேலும் ஒரே தளத்தில், பாடல்கள் தொகுக்கப்படுவது, பொதுவெளியில் அதிகம் கேட்கப்படாத பாடல்களை அறிமுகம் செய்வதையும் எளிதாக்குகிறது.
திருக்கல்யானம், ஏப் 14, 1978, தமிழ் புத்தாண்டு படமாக வெளிவந்திருக்கிறது. K சந்திரபோஸ் இயக்குநர். பாடல்கள்- கவியரசர், கங்கை அமரன், இளையபாரதி. விஜய்குமார், ஸ்ரீவித்யா நடித்திருக்கும் படம்.
நீ
மோகினியா
|
MVD, LR
Easwari
|
Gangai Amaran
|
அலையே
கடல்
|
Jeyachandran, S Janaki
|
IlayaBharathi
|
தேவதைகள்
|
P Suseela, SJ
|
Kannadasan
|
தாலி
ஒன்று
|
Vani Jayaram
|
Kannadasan
|
அலையே கடல் அலையே | Alaiye Kadal Alaiye – Jeyachandran, SJ
அருமையான
இணைப்பாடல். சானகி செயச்சந்திரன் இணை அழகாக பொருந்திப்போகிறது. துவக்கயிசையின்றி
துவங்கி, மெட்டின் உதவியில் அலையடிக்கிறது பாடல். அனுபல்லவியின் முடிவில்
செயச்சந்திரன் சேர்ந்துகொள்ள, பாடல் கேட்க மிகவும் இனிமை. கேட்க கேட்க இனிமை
கூடுகிறது. https://www.youtube.com/watch?v=FLBQvbnmkoY
நீ மோகினியா | Nee Moghiniya – MVD, LR Easwari
ஆண்
பெண் இருவரையும் மாறி மாறி கிண்டல் செய்யும் பாடல். கங்கை இப்பாடல்களில் அருமையாக எழுதுவார்,
அதன் முதல் பாடல் இதுதான். L R Easwari மிகவும் அருமையாக பாடியிருக்கிறார். MVD தன்
குரலை மாற்றிப்பாடி, இருவரும் கச்சிதமாக முன்னெடுக்கிறார்கள். இசையும் trumpet,
guitar என விளையாடுகிறது. நல்ல பாடல். J
https://soundcloud.com/balaji-sankara-saravanan-v/nee-mohiniyaa
http://www.paadalgal.com/2013/05/thiru-kalyanam-tamil-mp3-songs-download.html
https://soundcloud.com/balaji-sankara-saravanan-v/nee-mohiniyaa
http://www.paadalgal.com/2013/05/thiru-kalyanam-tamil-mp3-songs-download.html
தாலி ஒரு தேவையென்ன | Thali oru Thevaienna – Vani Jayaram
எழுதியது
கவியரசர் தான். தாலி- உறவின் அடையாளம், அது இன்றியும் உறவுகள் அமைந்துவிடுகிறது. அத்தகைய
உறவின் புனிதத்தை, அதன் ஆழத்தை அப்பெண்ணின் பார்வையிலிருந்து விவரிக்கிறது பாடல். விழுமியங்களை
கட்டமைத்த சமூகத்தின் பார்வையில் தவறென்றாலும், அவரவர் விழுமியங்கள் அவரவர்க்கு மேலும்
அதை நிறுவ, அவர்களுக்கென நியாயங்களும் இருக்கும். இப்பாடல் அதைத்தான் சொல்கிறது. மனமொத்து
வாழும்போது தாலியின் தேவையென்ன. தர்மம் எனும் சந்நிதியில் காதல் ஒன்று போதுமடி என கங்கை,
வள்ளி, மாதவி வரை காரணம் காட்டுகிறது. இத்தொகுப்பின் மிகச்சிறந்த பாடல் இதுதான். கவியரசரின்
வரிகள் ரசிக்கவைக்கிறது. உண்மைக்கு சாட்சியென்ன.. J
http://www.paadalgal.com/2013/05/thiru-kalyanam-tamil-mp3-songs-download.html
https://soundcloud.com/balaji-sankara-saravanan-v/thaali-ondru
https://soundcloud.com/balaji-sankara-saravanan-v/thaali-ondru
தேவதைகள் | Devathaigal P Suseela SJ
இதுவும்
திருமணம் சார்ந்த ஒரு பாடல். தன் திருமண வாழ்வின் சிறப்புகளை எண்ணி, வியந்து மணமான
ஒரு பெண் பாடும் பாடல். அதே நேரம், இன்னொரு பெண் சோகமாக பாடுகிறார்- சானகி. ஒன்று மனைவி,
இன்னொன்று துணைவியாக இருக்கலாம், கேட்க நன்றாக இருக்கிறது, குழல் வீணை வயலின் என வீட்டுச்சூழலை அதன் தீவிரங்களை அருமையாக உணர்த்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக