ஆத்தாடி ஆத்தா | Aathaadi Aathaa – P Suseela / S Janaki
இது
திருமணப்பாடல். சுசிலம்மா மற்றும் சானகி இணையின் முதல் பாடல், ராஜா இசையில். திருமண
சத்தங்கள் ஒலிக்க, மாப்பிள்ளை பெண்னை வாழ்த்திப் பாடும் பாடல். போட்டி, கிண்டல் எனவும்
ஒலிக்கிறது.
தங்கக்குடத்துக்கு | Thangakudathukku P Suseela www.youtube.com/watch?v=q4oeYOBffNM
தொகுப்பின் சிறந்த பாடல். பல நாட்களுக்கு இது உங்கள்
நினைவில் வந்துக்கொண்டே இருக்கும். தாலாட்டு பாடல், கவியரசர் செதுக்கியிருக்கிறார்.
தாயின் மடியில் படுத்துறங்குவது போல அவ்வளவு அமைதியை அளிக்கிறது பாடல். அவரவர்க்கு
தன் அம்மாவின் குரலை நினைவுபடுத்தும் விதமாக சிறப்பாக பாடியிருக்கிறார் சுசிலம்மா.
சிரித்தால் சிரிப்பேன் | Sirithaal Sirippen TMS
படத்தில் யாருக்கான பாடல் என்று தெரியவில்லை. பெண்ணை
ரசித்துப் பாடுகிறார், TMSக்கு இது இயல்பான பாடல். காற்றும் நானே பாடலைப்போன்ற களம்.
கேட்டுப்பாருங்கள்.
பொழுது எப்ப புலரும் | Pozuthu Eppo Pularum Malaysia Vasudevan – S Janaki
கிராமிய மணம் கமழும் பாடல், பொன்னைய்யா, கண்ணம்மா,
சின்ன ராசா, பொன்னுராசா, சின்ன ராணி, பொண்ணுராணி என்று முடியும் பாடல்கள் வரிகள். இயல்பாகவே மெட்டின் துணையால் நகரும் பாடல். தேவைதான தாளக்கட்டு
மெட்டிலேயே அமைந்து அதற்கேற்ற பாடல் வரிகளும் ஒரு துள்ளலை இயல்பாக கொடுக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக