பிப் 04, 1978 அன்று வெளியான படம். மாரியம்மன் திருவிழாவும் இந்தப்படமும் ஒரே நாளில் வெளியானது. காரைக்குடி நாராயணன் இயக்கம். பாடல்கள் வாலி. முத்துராமன், லட்சுமி இணை.
மாதா
உன் கோவிலில்
|
S
Janaki
|
Vaali
|
தாலாட்டு
பிள்ளைக்கொரு
|
SPB
P Suseela
|
Vaali
|
நான்
அழைக்கிறேன்
|
P
Suseela
|
Vaali
|
அதுமாத்ரம்
இப்போ
|
Manorama,
MVD
|
Valli
|
மாதா உன் கோவிலில் | Maatha Un Kovilil S Janaki
90களின்
மத்தியில் SPB, என்றென்றும் ராஜா என தூர்தர்சனில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அதில்
ராஜா’வை பேட்டி கண்டு, முடிவில் அவரை ஒரு பாடல் பாடச்சொல்லி கேட்பார். அதற்கு ராஜா,
நீயும் உடன் சேர்ந்து பாடு எனச்சொல்லி, இந்தப்பாடலை பாடுவார். 20 ஆண்டுகள் கழிந்த பின்பும்
ராஜாவிற்கு மிகவும் பிடித்த பாடலாக இந்தப்பாடல் இருந்தது மிகவும் வியப்பான ஒன்று.
அந்த
வியப்புடனே பாடலை கேட்டேன், நீங்களும் கேளுங்கள். மிகவும் பிரபலமான பாடல்.
Orchestration அதில் வரும் ஆர்கன் இசை, வழுவமைதி, பாடலின் உணர்வு முழுமை என அனைத்து வகையிலும் ஒரு முக்கியமான பாடல்.
தாலாட்டு பிள்ளைக்கொரு | Thaalaattu Pillaikkoru – SPB P Suseela
பெற்றோர்,
பிள்ளைக்கு பாடும் தாலாட்டுப் பாடல். அமைதியான கருவியிசை, மணிகள், வீணை, குழல் என மென்மையான
கருவிகள் மட்டும் ஒலிக்க, பிள்ளை மீதான கனவுகளை அடுக்குகின்றனர். தாலாட்டு வகைப்பாடல்களில்
மிகவும் பிரபலமான பாடல்.
நான் அழைக்கிறேன் | Naan Azhaikiren P Suseela
Club
Disco வகைப்பாடல். இன்னும் 1000 பாடல் இந்த சூழலில் வந்தாலும் அதை இனிமையாக்கி தருவார்
ராஜா. இங்கு தான் அவர் அதிக விடுதலையுடன் கருவியிசையின் வீச்சை நமக்கு உணரத்தருகிறார்.
சுசிலம்மா நன்றாக பாடி, கருவியிசை அதை மேலும் உயர்த்த, எப்பொழுதும் கேட்கத்தகுந்த பாடல்.
அதுமாத்ரம் இப்ப | Athu Mathram Manorama MVD
குரல்
வித்தகர் மலேசியா பல குரல்களில் பாடும் திறன் கொண்டவர். இது ஒரு சான்று. புதிய வானம்
பாடலை பகடி செய்யும் துவக்கம், நகைச்சுவை பாடல் என்பதை நமக்கு சொல்கிறது. ஆச்சியின்
குரல் அருமை. அவர் இன்னும் நிறைய பாடுவதற்கு உண்டான தெளிவும் திறனும் குரலில் இருக்கு.
ராஜாவுக்கு எத்தனை பாடல்கள் பாடுகிறார் என பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக