வியாழன், 2 ஏப்ரல், 2015

17 - காற்றினிலே வரும் கீதம் | Katrinile Varum Geetham - 1978

 

















இயற்கையின் தாக்கம் அளப்பரியது, நம் வாழ்வின் மீது. பிறப்பு, வளர்ப்பு, எண்ணம், செயல், பருவம் முதிர்ச்சி, எல்லாம் இயற்கையின் சாட்டை சுழற்றும் பம்பரச்சுழல். வெயிலடித்தால் காய்கிறோம், மழைபொழிந்தால் ரசிக்கிறோம், கவிஞனாகிறோம். கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே என அடிகளாரும் பாடிவைக்க, சங்கமோ இயற்கையின் வனப்புகளை அப்படியே பதிந்து வைத்திருக்கும் அற்புதக் களஞ்சியங்கள். அதனாலே நாம் காடுகளை தேடி ஓடுகிறோம், கடலைக் கண்டு மனம் விரிகிறோம். நதியில் தொப்பமாகிறேம்.

படைப்புகள் இற்கைகையை போற்றுகிறது, படைப்பாளியின் மனதில் குடிபுகுந்து, அவன் படைப்புகள் வழி, வெளியேறுகிறது, படைப்பாகிறது, இயற்கை. மலை என இயக்குநர் சொன்ன நொடி ராஜா, மேகமாகி நம் நாசியில் பரவுகிறார். கடல் என சொன்னதும் அலையாக மாறி நம் கால்களை நனைக்கிறார், இருக்கிறார். இயற்கையின் கூறுகளை நம் கண்முன் நிறுத்துவது தான், ஒரு கலையின், கலைஞனின் வெற்றி. ராஜா அந்த வகையில் பெருங்கலைஞன்.


காற்றினிலே வரும் கீதம்:

சன 14, 1978 அன்று வெளியான படம். SP முத்துராமன், நடிகர் முத்துராமன் கூட்டணியுடன் ராஜாவின் இரண்டாவது படம். அதிசயமாக வரும் வண்ணப்படங்களில் இதுவும் ஒன்று. மூன்றே பாடல்கள். பாடல்கள் அனைத்தும் பஞ்சு. 

காற்றினிலே வரும் கீதம்
SJ
PAC
காற்றினிலே வரும் கீதம்
Vani Jayaram
PAC
சித்திரச்செவ்வானம்
Jeyachandran
PAC
ஒரு வானவில் போலே
Jeyachandran
PAC

காற்றினிலே வரும் கீதம் | Kaatrinile Varum Geetham SJ

படத்தின் பெயரோ கவிதை. பாடலிலும் அந்த வரிகள் வருகிறது. நான் பாடலை எந்த அலைவரிசையிலும் பார்த்ததில்லை. ஆனாலும், கேட்ட நொடி அப்படியே மலைத்துப்போனேன். லூப்பில் போட்டு, திரும்பத்திரும்ப கேட்டேன். எத்தனை முறை, எவ்வளவு நேரம் என தெரியவில்லை. இப்பொழுதும் கேட்டுக்கொண்டிருக்கிறேன், விழிகசிந்தபடி. சொந்தூரப்பூவே கேட்டிருக்கிறேன்.. இது அதையும் மிஞ்சிய ஒரு படைப்பு என்றே சொல்வேன்.

ஏகாந்தமாய் ஒரு குரல், ராகமெடுக்கிறது. என்ன சூழல்? எதற்காக பாடுகிறாள் தெரியவில்லை. அடுத்து வரும் இழைகள், குழல், சொற்கள், பல்லவி அனைத்தும் நமை ஒரு பூங்காவிற்கு கடத்துகிறது. அடுத்து வரும் இசையில் ஒரு மானின் துள்ளல், ஒரு தென்றலின் பயணம், அலையலையாய் இலைகளை, மரங்களை தழுவும் உணர்வு, தாலாட்டும் வயலின், குழல். அவள் பல்லவியை இரண்டாம் முறை பாடும்போது அது மலையாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது, ஏனெனில், காற்றினிலே வரும் கீதம் என சானகி முடிக்கும் போது, அது எதிரொலிக்கிறது.. இங்கு தான் இயற்கை குறிப்பை ராஜா அழகாக நமக்கு உணர்த்துகிறார், ஆம் இது மலைதான்.

அடுத்த 5 நிமிடம், நாம் இந்த உலகில் இல்லை. காற்று வீசுகிறது, தென்றல் வருடுகிறது, அங்கு புள்ளிமானென ஒரு பெண் ஆடிப்பாடுகிறாள். அவள் பாட்டும் அந்தச்சூழலை குறித்தே, அச்சூழல் அவளுள் கிளர்த்தும் பருவ உணர்வுகள், காதலின் தேடல்..தனிமை..
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே…வரும் கீதம்..
காற்றினிலே வரும் கீதம்..
நேற்றிலிருந்து இப்பாடல் மூளையில் ஒரு இன்பநிலையை நிலைநிறுத்தி வைத்திருக்கிறது, பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் எரிச்சல் மூட்டவில்லை.

சரணத்தின் முடிவில் பிணைந்து தழுவி கொடிபோல் ஏறும் பல்லவியை கவனியுங்கள். பல்லவியின் நீட்சி சரணம், சரணத்தின் முடிவில் மீண்டும் கிளம்பும் தென்றலென பல்லவி.. அந்த சுழற்சி, முழுமை உருக்கொண்ட கலைஞனின் திறனை வியக்காமல் ஒரு நொடியும் இப்பாடலை கேட்கமுடியாது. ராஜா.. வணங்குகிறேன். இதுதான் முழுமை. கலையின் வெற்றி. ராசாவின் இசைவெளியை சானகி பாடித்திரியும் குயிலாகிப்போனது இப்பாடலுக்கு பிறகாகத்தான் இருக்க வேண்டும். :) 

பாடலின் இனிமை ராஜாவை மூன்றாம் சரணத்துக்கும் கூட்டிப்போகிறது, இந்த மொட்டில் 100 சரணம் வைத்தாலும் அலுக்காது. கலைஞன் அனுமதித்தால் மட்டுமே அவன் உலகிலிருந்து வெளியேற முடியும். இதோ முடித்துவிட்டர்ர். அடுத்த பாடல்களையும் கேட்க வேண்டும். இப்போது வெளியேறுகிறேன், மறுபடி வருவேன், அந்த காற்றையும் கீதத்தையும் உணர்ந்து மகிழ. J




வாணி செயராம் பாடிய, இந்தப்பாடலின் சோக வடிவம் அடுத்த பாடல். அதே வரிகள், சற்றே மாறுபட்ட கருவியிசை.
https://soundcloud.com/isai-s-d/katrinile-varum-geetham-1

சித்திரச்செவ்வானம் | Chithira Sevvaanam - Jeyachandran

இது பிரபலமான பாடல், இங்கும் இயற்கைக் கூறுகளை அள்ளி வீசுகிறார். பாடுவது ஒரு மீனவர் என எவரும் உணரும் வகையிலான தய்யரத்தய்யா.. தய்யரத்தைய்யா.. அலையில் மிதக்கும் படகெனவே முன்னும் பின்னும் அசையும் மெட்டு, அதை தள்ளும் துடுப்பென தய்யரத்தய்யா தய்யரத்தய்யா.. செயச்சந்திரன் குரல் மிகவும் அருமை. இடையிசைகள் நம்மை கவனமாக சரணத்துக்குள் எடுத்துச்செல்கிறது. சரணத்தின் முடிவில் உச்சத்தில் பாடி அப்படியே தய்யரத்தய்யாவுக்குள் நுழைய ஆகா ஆகா என சேர்ந்திசைக்குரல் நமக்கு மொத்த landscape, இயங்குவெளியை தெளிவாக காட்டுகிறது.


ஒரு வானவில் போலே : Oru Vanavil Pole Jeyachandran - Janaki

முதல் கிடாரே, நாணம் கொண்ட பெண்ணென தயங்கி தயங்கி நடக்கிறது.. நாணித்தயங்கி, ஒரு அமைதியான தனிவெளியில் நாயகனும் நாயகியும் பாடும், laidback duet, இண்டர்லூடும் அந்த மென்மையை, அவசரமின்மையை அழுத்திச்சொல்கிறது. மிகவும் அருமையான டூயட். இரண்டாம் இண்டர்லூடும் இழைந்து ஓடுகிறது. சரணங்கள் சற்றே வேகமெடுக்க, அதை தபேலாவின் நடை தெளிவாகச் சொல்கிறது. பல்லவியில் வரும் ம்ம்ம்ம்கும் ம்ம்ம்ம்கும் ஆகாஆகா.. ஆகாஆகா  பின்னொட்டு குரலிசை மிகவும் அருமை.



இது என் மனதிற்கு மிகவும் பிடித்த தொகுப்பானதன் அடிப்படை, காற்றினிலே வரும் கீதம் பாடல் தான். அந்த serenity, innocence, the beauty of nature and human bonding, absolute Magic. அடுத்த இரண்டு பாடல்களும் மிகவும் பிரபலமான காதல் பாடல்கள். இது ஒரு செவ்வியல் இசை என்றே சொல்லி முடிக்கிறேன். J

www.youtube.com/watch?v=ETkFhUWasUU

4 கருத்துகள்:

  1. Khayyam's Kabhi Kabhi Mere Dil Mein was the inspiration for Oru Vaanavil Pole. ReNdaiyin kELunga. First few words similarity irukkum. But being a true composer, he takes Oru Vaanavil on its own journey. The final hum of S Janaki in the final pallavi is a delight.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. The final hum is the icing on the cake. Same idea he fused in chittira sevvaanam closing pallavi.. the chorus mildly utters ahaa ahaa like the waves rocking the boat :))

      நீக்கு
  2. வாணி ஜெயராம் பாடியது நெட்ல இல்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைக்கவில்லை. அதே மெட்டு, Orchestration change to suit the horror/pathos mood. I can upload in the SoundCloud. :)

      நீக்கு