சூன் 9, 1978 அன்று வெளியான படம். விஜயகுமார், பவானி நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆகச்சிறந்த சிறப்பென்னவென்றால்,
ஒரு மிகப்பெரும் கலைக்குடும்பம் இந்தப்படத்தில் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறது. மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை
ஆதலால், இதுதான் இவர்களின் முதல் படம் என இப்போதைக்கு எழுதி வைக்கிறேன். அந்தக்குடும்பம், நடிகர் விஜய் அவர்களின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் சோபா. மாமன் சுரேந்தர்.
படத்தில் இரண்டே பாடல்கள் தான்.
மாலை
இளமனதில்
|
Shoba,
Surendar
|
Gangai
Amaran
|
பொண்ணு
பார்க்க
|
Manorama
|
Aalangudi
Somu
|
மாலை இளமனதில் | Maalai Ilamanathil – Shoba, Surendar
மிகவும்
அருமையான பாடல். ஒரு relaxed, laidback இணைப்பாடல். உடன்பிறப்புகள் பாடிய இணைபாடல்களில்
இதுதான் முதல் பாடலாக இருக்ககூடும். இனி மீண்டும் மீண்டும் உங்கள் நினைவுகளில் துள்ளும்
இந்தப்பாடல். மாலையின் குளிர்காற்றைப்போலே அழகான பாடல். நல்ல குரல்வளம் சோபா அவர்களுக்கு,
இனி என்னவோ எனுமிடத்தில் உச்சத்தில் ஏறி, கீழிறங்க சற்று பிசிறுகிறது. .
பொண்ணு பார்க்க | Ponnu Parka Manorama
காமெடி
பாடல்கள் வகையில், பெண் பார்க்கும் படலத்து பகடிச்சூழலில் ஒரு பாடல். கேட்கநன்றாக இருக்கிறது.
http://tamilmusiica.com/A/Aval%20Oru%20Pachai%20Kuzhanthai/1132/
https://soundcloud.com/balaji-sankara-saravanan-v/ponnu-paarkka-vanthaaru
https://soundcloud.com/balaji-sankara-saravanan-v/ponnu-paarkka-vanthaaru
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக