சில படங்களை தேடும் போது வரும் ஏமாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இப்படத்தை தேடி யூடியூப் போனால் வேறுபடத்தை இந்த படத்தின் பெயரில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். படத்தலைப்பு காட்சிகளும் இல்லை.
இந்தப்படம், ஏப் 21, 1978 அன்று வெளியாகியிருக்கு,
ஜெய்சங்கர் ஸ்ரீதேவி இணை. இயக்குநர் R
Pattabiraman. பாடல்கள் பஞ்சு. 4 பாடல்களில் என்னிடம் 3 பாடல்கள் மட்டும் தான் இருக்கிறது. இணையத்தில் தேடி ஒன்றை பிடித்தேன்.
எங்கும்
நிறைந்த
|
KJY
SJ
|
PAC
|
கை
ரேகை
|
Kovai
Murali
|
PAC
|
தினம்
தினம்
|
P
Suseela
|
PAC
|
ஓ
மை லவ்
|
S
Janaki
|
PAC
|
எங்கும் நிறைந்த | Engum Niraintha KJY – SJ
துவக்கமே
சொல்கிறது, அருமையான டூயட்டாக இருக்குமென்று. சானகி அந்த குரல் தளத்தில் பாடுவதில்
தேர்ந்தவர். அனுபல்லவியில் KJY சேர்கிறார். குகுக்கூ குக்கூ இடையிசை முதன் முதலாக வருகிறது
ராஜா இசையில். இரண்டாம் இடையிசையில் வீணையும் வயலினும் டிரம்களும் குழலும் என்ன ஒரு
கலவை! கேட்க கேட்க தெவிட்டத பாடல். லலல லலல என இருவரும் துணைசேரும் விதமான மெட்டு என்னை
முதன்முறை கேட்டபொழுதே கொள்ளை கொண்டு விட்டது.
கை ரேகை | KaiRegai – Kovai Murali
நாயகன்
மாறுவேடத்தில் போகும் பொழுது பாடும் பாடலாக இருக்கவேண்டும். எனக்கு அந்த பிண்ணனி குரலிசை
மிகவும் பிடித்தது. இதெல்லாம் வித்யாசமான இசைக்குறிப்புகள் (sound profiles for a
MD)
தினம் தினம் | Thinam Thinam – P Suseela
6
நொடி தான், என்ன ஒரு prelude, Wow.
Interlude is absolute treat. படத்தில் என்ன மாதிரியான சூழல் எனத்தெரியவில்லை.
நாயகியின் ஒருவித சவாலாகவே/கடந்த காலத்தை நினைத்து வருந்தும் சூழலாகவோ இருக்க வேண்டும்.
இம்மாதிரியான உயிர்ப்புள்ள, சூழலின், பாடுபவரின் உணர்வை அப்படியே மெட்டில் வடிப்பது
எளிதாக கைவருவது இசையமைப்பாளருக்கு மிகவும் முக்கியம். ராஜா, எளிதாக கவர்கிறார்.
ஒ
மை லவ் | O my love SJ
சிறிது
இடைவெளிக்கு பின்பு, ராஜாவின் விருப்பமான களத்தில் விளையாடி இருக்கிறார். நீங்களே கேட்டுப்பாருங்கள்.
இந்த பாடல், இந்த தரத்தில், ஒரே ஒரு பதிவேற்றம் தான் இருக்கு. இணையம் முழுவதும் தேடியும்
கிடைக்கவில்லை. L ரம் ரம் ரம் ரம் ரம் நல்ல ரம் ரம் J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக