செவ்வாய், 7 ஏப்ரல், 2015

25 - பைரவி | Bairavi - 1978



சூன் 02, 1978 அன்று வெளியான, நாயகனாக ரஜினியின் முதல் படம். எம்.பாஸ்கர் இயக்கம். பாடல்கள் கண்ணதாசன். ஸ்ரீபிரியா நாயகி. http://en.wikipedia.org/wiki/Bairavi ரஜினி நாயகன் ஆன கதை. :) 

ஏத்தம் எறச்சு
SJ
Kannadasan
நண்டூருது
 TMS
Kannadasan
கட்டபுள்ள குட்டபுள்ள
 TMS - SJ
Chidambaranathan
ஏழுகடல் நாயகியே
 SJ
Kannadasan

 ஏத்தம் எறச்சு | Yeththam Erachchu - SJ https://youtu.be/3OJoDUFk_JA

விவசாயப் பெண்மணி ஏத்தம் இறைத்துக்கொண்டே, தன் காதலை/காதலனை நினைத்துப்பாடும் பாடல், பாடலின் படிமங்களும் அந்த விவசாய களத்தை, ஆற்றை சுற்றியே அமைந்திருக்கிறது. பாடலின் முடிவில் நாயகன் வருமாறு அமைந்த பாடல். நாட்டர்வழக்கிசையில் அருமையான பாடல்.
   

கட்டபுள்ள குட்டபுள்ள | Kattapulla Kuttapulla TMS /SJ - https://www.youtube.com/watch?v=CegbLPI_TrI

படத்தின் மிகவும் பிரபலமான பாடல் இதுவாகத்தான் இருக்க வேண்டும் அந்த காலத்தில். கிராமப்புற கொண்டாட்டத்தை இணை பாட்டின் வழி சொல்கிறார் பாடலாசிரியர். அதற்கேற்ற வாத்திய இசை.

நண்டூருது | Naddoruthu TMS https://www.youtube.com/watch?v=U2XtrFowBSQ

பாடல் வரிகளின் பலத்தில் நிற்கும் பாடல், எளிமையான மெட்டு, இழப்பின் வலியில் பாடும் ஒருவரின் குரல். அதற்கேற்ப மெதுவாகச்செல்லும் நடையில் குழலும், வயலினும், சுடுகாட்டு சூழலும் என சாவின் சுவடுகள் பாடலில். அந்த சாவின் வலி, குரலில். தாய் மீது ஆணை

ஏழுகடல் நாயகி | YezhuKadal Nayagi SJ https://youtu.be/wshqBwEldY8

இந்தத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்தது இந்தப்பாடல் தான். எப்பொழுது கேட்டாலும் அந்த கிராமத்தின் துள்ளல், கொண்டாட்டம் மனதில் இறங்குகிறது. இந்தச்சூழலுக்கு வரும் நூற்றுக்கணக்கான பாடல்களில் இது தனித்து தெரிவதற்கு, முதல் காரணம் அந்த செனாய் இசை, தாளக்கட்டு. இன்றுவரை இந்த பாடலின் பாதிப்பு பல இசையமைப்பாளர்களின் பாடல்களில் நாம் பார்த்திருக்கலாம். உறுமி, உடுக்கை, குழல், வயலின் இன்னும் என்னென்ன கருவிகள், மேலும் நடைமாறும் அந்த சரணங்கள்…

தொகுப்பை கேட்டு முடித்தாலும் எனக்கு இந்த பாடல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. என் கிராமத்து திருவிழா நினைவில் வருகிறது. மண்ணின் இசை. அந்த பல்லவியில் ஏதோ ஒரு விவரிக்கவியலாத அழகு. .ஈசுவரே தேவேய்.. என இழுத்து பாடும் பாங்கா? என் ஊர்பெண்கள், பாட்டி அத்தை பெரியம்மா பாடிச்செல்வதை போன்ற ஒரு மனக்காட்சி விரிகிறது.. சானகி ஒரு கிராமத்து பெண்ணின் குரல்நுட்பத்தை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார். J

ரஜினியின் முதல் படம் நாயகனாக, ராஜா தான் இசை.  
www.youtube.com/watch?v=bjJNKq1UfL4 முழுபட சுட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக