தேவராஜ்-மோகன் , ராஜா கூட்டணியின் நாலாவது படம், சிவக்குமார்-ராஜா-5வது படம். ஸ்ரீதேவி-ராஜா-4வது படம். :) கருப்பு வெள்ளை திரைப்படம். வண்ணப்படங்கள், பெரிய நடிகர்களுக்கானது,
தீபம், ஆளுக்கொரு ஆசை படங்களைப்போல. பாடல்கள் அனைத்தும் வாலி, இது புதிய முயற்சி, ஏனென்றால், தேவராஜ்-மோகன் படங்களில் இதுவரை பஞ்சு தான் எழுதியிருக்கிறார். இந்தக் கூட்டணியின் வெற்றியை பார்க்கலாம்.
ஒரு காதல் தேவதை
|
SPB / PS
|
Vaali
|
உலகில் எனக்குதான்
|
PS
|
Vaali
|
கண்ணன் என்ன சொன்னான்
| PS |
Vaali
|
அத்தை மகன்
| PS |
Vaali
|
ஒரு காதல் தேவதை: Oru
Kadhal Devathai: SPB/PS
இந்த prelude, படத்தின் தலைப்பிசையாகவும் வருகிறது, ஏதோ ஒரு சோகத்தை உள்ளே புதைத்து வைத்திருக்கும், வலி தெரிகிறது அந்த தனனா தன்னனா மணி ஒலிகளில். SPB, PS இணை குரலிலேயே காதலையும், அதனூடான் மென்சோகத்தையும் வெளிக்காட்டுகிறார்கள். ஒருவித தயக்கம், withheld emotion is the signature of this song. (till here I just watched the titel music of that movie and stopped)
I couldn’t understand
why Raja sound so sad and kind of non-approval of the closeness in the duet,
then I jumped in to the movie. Here is the surprise, ஓ!!, படத்தை பார்த்ததில்,
ஸ்ரீதேவி மனநிலை வளர்ச்சியுறாத பெண். பணக்கார ஸ்ரீதேவியை மணந்த சிவக்குமார், அவரைவிட்டு,
தன் அலுவலக உதவியாளருடன் கனவில் பாடுகிறார். அதான் ராஜா, அந்த வலியை யாருக்கும்
தெரியாமல் பாடலில் வைத்திருக்கிறார்!! வாவ்!! ஒரு காதல் இணைக்கான நெருக்கமே இல்லை
இந்தப்பாடலில். அந்த வலியை அறிவிக்கும் மணி ஒலி, (Chimes, Chimbles or a piano
mimicking that sound, the prelude) ஸ்ரீதேவியின் அறிமுகக்காட்சியில் வருகிறது.
இதுதான் ராஜா, படத்தின் மொத்த உணர்வையும் ஒரு சிறு ஒலியில் ஒளித்துவைக்கும் சாகசக்காரர்.
L https://www.youtube.com/watch?v=wnNZdUyeLlg
அத்தை மகன் | Aththai
Magan: P Suseela
தன்னை பெண் பார்க்க வரும் சிவக்குமாரை, ஸ்ரீதேவி கேலி செய்து (பயமுறுத்தி J) பாடும் பாடல். முழுப்படத்தையும் பார்க்கும் துணிவில்லை. இந்தப்பாடல், Sax, செனாய், நாகசுரம் என கலந்து ஒலித்து ஒரு கேலியான சூழலை எளிதாக நமக்கு அறிவிக்கிறார். சுசிலம்மா குரலே குதியாட்டம் போடுகிறது. J
கண்ணன் என்ன சொன்னான் |
Kannan Enna Sonnaan: P Suseela
நாயகனின் தங்கை பாடும்
பாடல். அண்ணி- ஸ்ரீதேவியை குழந்தையாக நினைத்து, அவரை ஆறுதல் படுத்தி பாடுகிறார். தாய்மை பொங்கும்
உணர்வு இந்தப்பாடலில். மிகவும் இதமாக இருக்கிறது கேட்க. J அருமையான தாலாட்டு.
உலகில் எனக்குதான் |
Ulagil Enakkuthaan P Suseela
ClubDisco பாடல்,
கிடாரின் மற்றும் Sax, Trumpet என பட்டாசு வெடிக்கிறார் ராஜா. இடையிசைகளில்
ராக்கிடார், அடேங்கப்பா.. சொன்னால் நம்ப மாட்டீர்கள், Jimi Hendrix மனதில்
தோன்றுமளவுக்கு, கிடாரில் பின்னுகிறார் ராஜா. அவர் அடிப்படையில் ஒரு கிடார்
ரசிகர், தேர்ச்சிபெற்ற கிடார் இசைப்பாளர் என்பது பாடலில் தெரிகிறது. https://www.youtube.com/watch?v=6goaX6_ICyw
இரண்டு
பாடல்கள், இணையத்தில் கிடைக்கவில்லை, சத்தமேகத்தில் ஏற்றி, உங்களுக்காக சுட்டி தந்திருக்கிறேன்.
J
"கண்ணன் என்ன சொன்னான்" பாடல் "ஓலக் குடிசயில" பாடலை நினைவுப்படுத்துகிறது.
பதிலளிநீக்கு