செவ்வாய், 31 மார்ச், 2015

15 - ஆளுக்கொரு ஆசை | Aalukkoru Aasai - 1977



S P முத்துராமன், ராஜா கூட்டணியின் அடுத்த படம். முத்துராமன் நாயகனாக நடிக்க, பாடல்கள் பஞ்சு மற்றும் கண்ணதாசன். ராஜாவின் தொகுப்புகள் இப்படித்தான் இருக்கும் என்ற வரையறைக்குள்  அடங்காது. இயக்குநரின் களத்திற்கேற்ப, வடிவங்கொள்வது என்பதை கடந்த 14 மாறுபட்ட படங்களின் மூலம் அறிந்தோம். அதனால், இந்த தொகுப்பை ஒரு திறந்த புத்தகமாக அணுகவேண்டியுள்ளது. உங்களைப்போன்றே நானும் ஆவலாக உள்நுழைகிறேன்

இதய மழையில்
KJY + PSuseela
PAC
மஞ்சள் அரைக்கும்போது
Vani Jayaram
PAC
கணக்கு பார்த்து காதல்
TMS
PAC
வாழ்வென்னும் சொர்கத்தில்
SJ
Kannadasan

இதய மழையில்: 

அசந்துபோனேன். வேறென்ன சொல்ல. KJYன் குரலின் அடர்த்தி, சூழலை ராஜா அமைத்த விதம், படபடத்து துடிக்கும் இதயத்துடிப்பை ஒத்திருக்கும் தாளம், துவக்க இசையிலேயே இழையும் குரல்கள், அனைத்தும் கவிதை. Sax, Percussion, Violin and PS’s பாவங்கள்.. அடடா.. Very Romantic Duet, yet.

மஞ்சள் அரைக்கும்போது: 

முதன்முறை கேட்டபொழுதே புரிந்தது, மிகவும் பிடித்த பாடல். பெண்ணின் மன ஆழத்தில் இருக்கும் உணர்வுகளை ராஜாவைப்போல் வெளிக்கொணர்ந்தவர் எவருமில்லை. துவக்க குரலிசை முடியும் நொடி அந்த கிடார், டிரம் பிணைப்பை கவனித்தீர்களா? Very Rustic. J 1ST prelude is more beautiful. ஏக்கம் குரலில் வழிகிறது, அதற்கேற்ற ஒருவிதமான சத்தக்குறிப்புகள், நரம்பிசை, குழல் என அருமையான பாடல். இணையத்தில் தேடினால் கிடைக்கவில்லை. சத்தமேகம் தான் ஒரே வழி. https://soundcloud.com/isai-s-d/manjal-aaraikkum
https://www.youtube.com/watch?v=Qs7A0RlAjbI&list=PLviYSX9LX22bTGDjkBxfLgmshVMQLK5Qw&index=3 பாதிப்பாடல் தான் இருக்கிறது இந்தப்பட்டியலில்.

கணக்கு பார்த்து காதல்: 

நாயகன் நாயகிக்கு காதல் வந்த விதத்தை நனவோடை (montage) உத்தியில் TMS பாடியிருக்கிறார். Orchestration – TMS குரலுக்கு ஒரு ஒத்திசைவு இருக்கிறது.

வாழ்வென்னும் சொர்கத்தில்: 

Rock and Roll, Rockabilly கிடார் அமைப்புகளுடன் rythms and blues வகையிலான Jazzy song. முதல் பாடல், இந்த வடிவத்தில். கேட்டவுடன் காதல் கொண்டேன் இந்தப்பாடலின் மீது. அந்த Preludeஐ கேளுங்கள், Chuck Berryன் திறன், rythem pattern and choral notes are அப்படியே பறக்கும் உணர்வை தருகிறது. ராஜா’வின் தீவிர Western Fusion இங்கு ஆரம்பித்தது. 2nd Prelude அப்படியே WCM Violinக்கு தாவுகிறார். ஆழமான குறிப்பு, அடுத்து குரலிசை, அதை அப்படியே எட்டிப்பிடிக்கும் R&R guitar எத்தனை காலகட்ட இசைக்குறிப்புகள்?! அதுவும் 77ல் இப்படி ஒரு பாடல்!!  


மனதிற்கு மிகவும் இதமளித்த தொகுப்பு. இதயமழையில், வாழ்வென்னும் இரண்டும் இரண்டு genre என்றால், மஞ்சள் அரைக்கும்போது கொடுக்கும் rustic feel is awesome. மூன்று பாடலுமே என் evergreen classic’s பட்டியலுக்கு சென்றுவிட்டது. நீங்களும் கேட்டு மகிழுங்கள். இதுதான் ராஜா. Variety, Fusion and yet rooted in melody. 

14 - துர்கா தேவி | Durga Devi - 1977

டிச 09, 1977 அன்று வெளியான படம், பக்திப் படம். பாடல்களும் அதற்கேற்றார் போலவே அமைந்திருக்கிறது. டிசம்பர் - மார்கழி- மாரியம்மன் பருவத்தை மனதில் வைத்து எடுத்திருப்பார் இயக்குநர், ரா.சங்கரன். பாடல்கள் கண்ணதாசன், வாலி. 

தேவி செந்தூரக் கோலம்  
ஜெயச்சந்திரன் + ஜானகி இணை பாடிய பாடல். தெய்வப்பெண்ணை காதலிக்கும் இளைஞனின் மனக்கவலை, அந்த உணர்வுகளின் பிண்ணனியில் வரும் பாடல் போல. காணொளி கிடைக்கவில்லை. இருந்தாலும் பாடல் அருமையாக இருக்கிறது. இதே பாடல், இன்பம் துன்பம் என இரு வடிவில் இருக்கிறது. தெய்வீகக்காதல், காதலில் ஒடுங்குதல் வகையான பாடல். ஜெயச்சந்திரனின் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. 

கேட்டா தெரியாது கேடு கொட்ட மானிடனே: 
மாரியம்மனே வந்து பாடும் அறிவுரை பாடல். கோபமாக ஒலிக்கிறது, சுசிலம்மா பாடியிருக்கிறார். வரிகள் சற்றே அடிப்படையாக இருக்கிறது, அந்த உணர்வை எடுத்துச்சொல்லத்தான் கவியரசர் விரும்பினார் போலும். இந்தப்பாடல் இணையத்தில் இல்லை. சத்தமேகத்தில் ஏற்றிவைக்கிறேன். 

கேட்டால் கேட்ட வரம்:
துர்கையம்மன் பாடல், உறுமி, துடி, எக்காளம் ஒலிக்க, உருகி பாடுகிறார், வாணி செயராம். பக்தியற்றவர்களும் கேட்கும் வலையிலான இசைக்குறிப்புகள், பாடல் கட்டமைப்பு, உணர்வுநிலை என நல்ல பாடல். இப்பாடலும் இணையத்தில் இல்லை. சத்தமேகத்தில் ஏற்றிவைக்கிறேன். 


செந்தூர தேவி, பாடல் மிகவும் அருமை. நாயகன் நாயகி பிரிவாற்றாமை வகையில் பாடும் முதல் பாடல் இதுதான். இங்கிருந்து தான், காதலர்களின் சோகப்பாடல் என்ற வகையிலான genre துவங்குகிறது ராஜா இசையில். அவ்வகையில் இது மிகவும் முக்கியமான பாடல். பல்வேறு காரணங்களால் வாழ்வில் சேரமுடியாத நாயகன் நாயகியின் துயரத்தை ராஜா முதன்முதலில் தொட்ட படம் இது. உங்களையும் கவரும் என நினைக்கிறேன். ஜெயச்சந்திரன் மிகவும் கவர்கிறார். :) 

படமோ, சுவரொட்டிகளே,  LP அட்டைகளோ கிடைக்கவில்லை. :( 

13 - பதினாறு வயதினிலே | 16 Vayathinile - 1977



முன்முடிவுகளற்று ஒரு தொகுப்பை அணுகுவது தான், நிகழ்நின்று பின்னோக்கும் பார்வைக்கான முதல் தேவை. இப்படி ஒரு தொகுப்பை கேட்டாதான என் நினைவடுக்குகளை காலத்தின் கரையில் கரைத்துவிட்டு தான், இவ்வரிகளை எழுதப்புகுந்தேன். இதற்கு முன்பான காலத்து பாடல்கள் ஒரு உரைகல்லாக அமையலாம், அது சார்ந்து நம்/ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை கட்டமைக்கலாம். என்னளவில், 16 வயதினிலே, ராஜாவின் 13வது தமிழ்ப்படம். பாரதிராஜா என்ற புது இயக்குநர், கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்ற இளமைப்பட்டாளம், கவிதையான தலைப்பு. என்னவிதமான பாடல்கள் என்ற 77ன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எனக்கும் இப்போது, கேட்டுப்பார்போம். :)

16 வயதினிலே, நவ 15, 1977 அன்று வெளியனது. இசைத்தொகுப்பை அதற்கு முன்பே கேட்டவர்கள், அதை திரையில் கண்டடைந்த வியப்பு, சரிநிகராக, முதன்முறை அரங்கில் இப்பட பாடல்களை கேட்டவர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒருசேர கட்டிப்போட்டார் ராஜா. அன்னக்கிளிக்கு அடுத்து, கிராமிய பண்பாட்டு கூறுகள், வாழ்வியல் படிமங்கள் நிறைந்த பாடல்களை வழங்கி, படைப்புவெளியில் நாட்டார் வாழ்வியலின் அதிமுக்கியமான மைல்கல்லை நட்டது இப்படம் மற்றும் பாடல்கள்

இருத்தலியல் நோக்கில், ஒரு படைப்பின், படைப்பாளியின் வெற்றி, தொடர் வெற்றி, அவனது வரலாற்றை கட்டமைக்கிறது. ஒரே படத்திற்காக நினைக்கப்படும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். தொடர்வெற்றிப் படைப்புகளை தந்த கலைஞர்களும்  இருக்கிறார்கள். அனைவரால ஆனதும் தான் இந்த கலைவெளி. வென்றவர்களை விட, வீழ்ந்தவர்கள் அதிகம். பாரதிராஜா, இன்றளவும் போற்றப்படும் இயக்குநர். அவரின் முதல் படைப்பிற்கு ராஜாவின் பங்களிப்பு அசாத்தியமானது. தன் மண்ணின் கதையை மக்களுக்கு சொல்லும் பெருமிதம், அச்சூழலின் ஒலிகளை இசைவெளியில் பதியும் ஆர்வம் என ராஜா ஒரு இணைகோட்டு(parallel) இயக்குநராக இப்படத்தை முன்னெடுத்து நம்மனதில் விதைத்தார், குறிப்பாக சோளம் விதைத்தார்


சோளம் வெதக்கயிலே
Ilayaraja
Gangai Amaran
செந்தூரப்பூவே
S Janaki
Gangai Amaran
செவ்வந்திப்பூமுடிச்ச
S Janaki
Kannadasan
ஆட்டுகுட்டி முட்டயிட்டு
MVD, PSuseela
Kannadasan
மஞ்சகுளிச்சு
S Janaki
Aalangudi Somu
செந்தூரப்பூவே
S Janaki
Gangai Amaran

சோளம் வெதக்கயிலே: 

ராஜா பாடிய முதல் பாடல். கேட்ட நொடி, எங்கோ இருக்கும் கிராமத்து சோளக்காட்டிற்கு நம்மை கடத்துகிறது. சோளம் வெளஞ்சவனுக்கு அந்த கதிர்வாசமும் கூடவே செவிவழி நாசியை கிள்ளும். துவக்கயிசை முடிந்து ராஜா பாட ஆரம்பிக்கும் முன், பறவைகள் சிறகடித்து பறக்க அந்த பறவையின் சிறகடிப்பில் நாமும் பறக்கும் கணம் சோளம் வெதக்கயிலே என ஒரு குரல் ஓங்கி உயர்ந்து ஒலிக்கிறது. பாடகனுக்கான எந்த எத்தனிப்பும், கவனமுமின்றி, உணர்வின்வழி உந்தப்பட்ட நாமெல்லோரும் பாடும் ஒரு கணமெனவே இப்பாடல் அமைகிறது. நாம் கேட்ட அத்தனை பாடல்களும் முதன்முதலில் இந்தக்குரலின் வழிதான் படைக்கப்பட்டது என்பது ஒரு சிலிர்ப்பூட்டும் உண்மை. தந்தனத்தானா  இடையிசை, நாமே பாடுவது போன்ற குரல், அதில் பெருகும் உணர்வுகள், நாட்டார் படிமங்கள்.. இது நமக்கான இசை என நாட்டுப்புற தமிழகம் கண்டுகொண்ட படம். 

செந்தூரப்பூவே: 

அதிகாலைப் பரிதியின் ஒளியில் வெட்கங்கொண்டு மெல்லக் கலையும் பனிமேகத்தின் அசைவை ஒத்த Prelude, மேகத்தினும் மெல்லிய ஈரெட்டு வயதினள், தன் மனவெளியில் திளைக்கும் வகையிலான பாடல். மேகத்தின் அசைவுகளை ஒத்த மனக்காட்சி தான் இயக்குநரின் மனதில் விரிந்திருக்கிம், இப்பாடலை கேட்ட நெடி, அந்த படிமத்தை, நாயகியின் உடைவண்ணத்திலும் ஏற்றி, அவளை ஒரு மேகமெனவே மிதக்க விட்டிருக்கிறார். யாரிவள் தேவதையென மயக்குறும் நாயகி, அவளுடன் போட்டியிடும் கிராமிய அழகியல், அதை காதலும் அணைக்கும் ராஜாவின் இசை. ராஜாவின் பதின்மக்காதலி அவர் மனதில் வந்து போயிருப்பார், இந்தப்பாடலை மனதில் உருவாக்கிய கணம். அவருக்கு நம் நன்றி, அவரால் ஒரு காலத்தை வென்ற பாடல் நமக்கு. J

Musically, Raja progressed from Kuyile Kavikuyile, Kalaipaniyil and he is here. A complete female dream song. More poetic, structurally complete and aesthetically proud. J

புலரும் காலையின் கதிரை தெறிக்கும் கிடார், காற்றின் இசையென குழல், அதை தாலாட்டும் வயலின், இப்படியும் ஒரு இசை சாத்தியாமா எனும் கேள்வி வளர்ந்து பயமுறுத்துகிறது. எத்தனை அடுக்கு? கிடார் strumming பாதியில் ஆரம்பிக்கும் வயலின் அப்புறம் chimes மறுபடி ஊஞ்சலாட்டும் வயலின், பின்பு குழல்.. பின்னே ஒலித்துக்கொண்டே இருக்கும் கிடார், சொற்களால் அதை விவரிக்க முற்படும் என் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்ல, எனக்கு கண்ணீர்தான் மிஞ்சுகிறது, இது மோனநிலையில் கசியும் விழி!
இப்பொழுது தான் காணெளியை பார்க்கிறேன், அந்த தாரத்ததா தாரத்ததா வயலின் ஊஞ்சலாடும் காட்சியுடன் அப்படியே பொருந்துகிறது. அதுதான் ராஜா!! https://www.youtube.com/watch?v=xq2RodtGTY4

மஞ்சக்குளிச்சு: 

 தெற்கின் பண்பாட்டு கூறான ஒரு நிகழ்வை இப்பாடல் பதிவு செய்திருக்கிறது. ஊர் மக்களின் கொண்டாட்டம், பல்வேறு வகையினரான மக்கள், அவர்களின் சிரிப்பு, கொண்டாட்டம், ஆர்பாட்டமான துவக்கயிசை, சானகியம்மாவின் குரல், துணைவரும் கூட்டத்தின் சிரிப்பொலி, செனாய் இசை, வயலின், கிடார், வீணை, உறுமி, இன்னும் பல கருவிகள் கலந்து பலவித எண்ணவோட்டங்களை பாடல்வெளியில் பதியும் இப்பாடல், பெண்களின் சிரிப்பொலியை, சேர்ந்திசையை, இரண்டாம் இடையிசையை ஆரம்பிக்கும் கிடாரை.. முடியவில்லை.. நீங்களே கேட்டு ரசியுங்களேன். https://www.youtube.com/watch?v=6Kl0SHs9hPM



செவ்வந்திப்பூ முடிச்ச: 
இந்த இசைத்தொகுப்பின், படத்தின் வெற்றி இந்தப்பாடல் தான் என்பேன். கிராமத்தின் ஆன்மாவை நமக்கு படம்பிடித்து காட்டுகிறது பாடல். செந்தூரப்பூவே’வில் அவ்வளவு ஆழமான துவக்கயிசையை அமைத்த ராஜா, இங்கு ஒரு பெண் குரலின் ஏஏஏஏ’வை கொண்டு பாடலின் எல்லையை நமக்கு அறிவித்துவிடுகிறார். தன்னான்ன தந்தன்னே தானேன்னே என  ஆணும் ஓய் ஓய் என பெண்களும், மெட்டு பெண்ணுக்கு மாறும்போது ஆண்கள் ஓய் ஓய் எனவும் பாடி, கிராமச் சமநிலையை பாட்டில் நிறுவுகின்றனர். இடையிசை தாளமும், குழலும், கூட்டமாக மக்கள் ஆடிப்பாடும் சூழலுக்கு அப்படியே பொருந்துகிறது. நான் வளர்ந்த பின்பும், அதாவதும் படம் வந்து 10 ஆண்டுகள் கழிந்த பின்பும், திருவிழாக்கள் இந்த பாட்டில்லாமல் களைகட்டாது.  ஆத்துல காத்தடிச்சா அலையோடும் அலையோடும் அலையோடும் கெண்ட வெளையாடும் இப்ப மனசுல துடிக்குதம்மா… சூழலின் துடிப்பு, ஆண் பெண் ஈர்ப்பின் இயங்கியல், கூடவே ஆடும் குழுவின் பங்கு.. இது ஊர்கூடிதேரிழுக்கும் பாடல். ஊரை ஆடவைத்த பாடல். இதில் குழு ஆடும் நடனம் எங்க ஊர் மாரியம்மன் திருவிழாவில் மிகவும் பிரபலம். ஊரை ஏய்க்கும் ஒருவனை அடித்த மகிழ்ச்சியை அந்த ஊரே பகிர்ந்துக்கொள்கிறது, நாயகன் நாயகியுடன். ராஜாவின் மனவோட்டம் அதுதான் என அவதானிக்கிறேன். பாடலே அந்த அறை’யுடன் தான் ஆரம்பிக்கிறது. கமலும் ஸ்ரீதேவியும் சிரிக்கும்போது வரும் பிண்ணனி இசை அருமை, அங்கிருந்து அறை, அப்புறம் பெண் ஏஏஏ என விளிக்கும் குரல்.. என்ன ஒரு பாடல்!!

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு: 


 அங்கதப் பாடல்களை இதற்கு முன்பே ராஜா பதிவு செய்திருந்தாலும், இதுதான் அவ்வகையின் முதிர்ந்த முதல் படைப்பு. கவியரசரின் வரிகள் முரண்பாட்டின் நகைச்சுவையை அழகாக முன்னிறுத்துகிறது. மலேசியா ராஜா’வின் பாடகர்களில் நிரந்தமாக இடம்பிடித்துவிட்டார். சந்தைக்கு போவது, கிராமங்களின் கொண்டாட்டமான ஒரு நிகழ்வு, கொள்முதலும் ஒரு வாரத்துக்கு தேவையான அளவுக்கு தான் வாங்குவோம். கூடை, நார்பை, இதனுள்ளே ஒரு வாரத்திற்கான செலவுகள் அடங்கிவிடும். ஒவ்வொரு வாரமும் செல்வதும் சாத்தியமில்லை. அதற்கொன குழு அமைந்து, விருப்பக்குழுக்களுடன் சந்தைக்கு செல்வோம். நடை, பின்பு சைக்கிள், இப்பொழுதும் சந்தைகள் இருக்கு. ஞாயிறு சந்தை, செவ்வாய் சந்தை, புதன்சந்தை, வெள்ளிசந்தை, பாலக்கோடு பக்கத்தில் வெள்ளிச்சந்தை என்ற ஊரே காரணப்பெயர் கொண்டு நிற்கிறது. 


இதுவரை வந்த ராஜா படங்களின் பாடல்கள் கட்டமைத்த எதிர்பார்ப்பு வெளியை தனது அற்புதமான இசையின் மூலம் நிரப்பி, தமிழ்சினிமா’வின் ஒரு புதிய இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறார் ராஜா. இது ராஜாவின் காலம். ராஜாவின் பதினாறு வயதினிலே.. நம் மண்ணின் இளமை புதுமை என்றும் நிலைத்து நிற்கும் தன்மையது. ராஜா-கமல் இணையின் முதல் படம். பாரதிராஜா-கமல், பாரதிராஜா-ரஜினி- பாரதிராஜா-ஸ்ரீதேவி - முதல்படம். 

முழுப்படச்சுட்டி: https://www.youtube.com/watch?v=njEKoSMcJCI 

திங்கள், 30 மார்ச், 2015

12 - ஓடி விளையாடு தாத்தா | Oodi Vilayaadu Thaatha - 1977

இப்படி ஒரு படம் வந்ததற்கான எந்த குறிப்புகளும் இணையத்தில் இல்லை, இந்தப்பாடல்களைத் தவிர. ராஜாவின் பாடல்களில் மட்டுமே இப்படம் உயிர்த்திருப்பது, நினைக்கவே சிலிர்க்கிறது. இப்படியான பல படங்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். காயத்ரி வெளியான அன்றே வெளியான படம். அது ரஜினி படம் என்பதால் இன்றும் நிலைத்து நிற்கிறது. இம்மாதிரியான படங்கள், மக்களின் நினைவில் இருந்தும் மறைந்திருக்கும், அந்த இயக்குநர் உட்பட, ஆனாலும் பாடல்களின் வழி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அவ்வகையில் இப்படம் ஒரு கலைஞருக்கு இன்றும் மறக்கமுடியாத படம், அவர் யாரென்பது பாடல் பகுதியில்.  

அக் 07, 1977 அன்று வெளியான திரைப்படம். T.N.Balu என்பவர் இயக்கம். பாடல்கள் கண்ணதாசன், காமகோடியன் மற்றும் வாலி. ஸ்ரீப்ரியா, மனோரமா, VK ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர்காமெடிப்படமாக இருக்கலாம்.

ஓல்டெல்லாம் கோல்டு
P Suseela
Kannadasan
ஒரு கோடி
L.R Anajali, IR, AL Ragavan
Kamakodiyan
காதல் மலர் தோட்டம் பார்
L R Easwari
Vaali
சின்ன நாக்கு
TMS
Kamakodiyan

ஓல்டெல்லாம் கோல்டு:   
www.youtube.com/watch?v=ueLtSzWiTMY
சுசிலம்மா பாடிய பாடல்.  கிண்டல் பாடல், நன்றாக இருக்கிறது. நல்ல பதிவில் கிடைத்தால் கேட்க நன்றாக இருக்கும். Percussion and Sax interludes நன்றாக இருக்கு.

ஒரு கோடி
 இது மனோரமா ஆச்சி பாடி ஆடுவதாக அமைந்துள்லது படத்தில். பாடியவர் L.R.Anjali (L R Easwari’s sister?!) and MVDevan. இரு கூட்டம், தங்கள் கட்சியின் பெருமையை பேசிவதாக அமைந்த பாடல். கிடார் இடையிசையை கேளுங்கள், அருமை.  www.youtube.com/watch?v=gtr0REcvdq4  

காதல் மலர் தோட்டம் பார்:  
இந்தப்பாடல் ஒரு கலைஞருக்கு மிகவும் மறக்கமுடியாத பாடலாக இருக்கும் என்றேன்.  L.R Easwari, அவர்களின் முதல் பாடல், ராஜாவுக்குஅவருக்கு ஏற்றப்பாடல், மெதுவாக அழுத்தமாக, க்ளப் குயின் வகையான பாடல். சரணம் சமீபத்தில் கேட்ட பாடலைப்போல இருக்கிறது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். www.youtube.com/watch?v=2aao_EN9udM  Club Disco Genre'க்கு தேவையான அத்தனை கருவிகளும் ஒலிக்க இனிமையான பாடல். 


சின்ன நாக்கு சிமிழி மூக்கு: 
TMS, SPB, MVD பாடியிருக்கிறார்கள், ஆண்கள் குழந்தையை கையாளும் விதத்தை கேலியும் கிண்டலுமா சொல்கிறது பாடல். கேட்க நகைச்சுவையாக இருக்கிறது. ஆராரோ தாலேலோ வகை பாடல். www.youtube.com/watch?v=ZF6y5hInK94 

11- காயத்ரி | Gayathri - 1977

படங்களை அறிமுகப்படுத்துவது எளிது, படம் அறிமுகமான வரிசையில் இசைத்தொகுப்பை அறிமுகப்படுத்தினால், வெளியான ஆண்டு ஒன்றெனில், படம் வெளியான ஆண்டு வேறாக இருக்கிறது. அவ்வகையில் இப்படப் பாடலில் சிறுகுழப்பம். சுஜாதா மேனன் பாடிய முதல் பாடல் இந்தப்படத்தில் தான், படம் திரைக்கு வர தாமதம். இப்படம் வெளியான போது ஸ்ரீதேவிக்கு வயது 14, பாடிய சுஜாதாவுக்கு 12 வயது என விக்கி சொல்கிறது. பாடல்களை பார்ப்போம்

பட்டாபிராமன், இயக்குநர், முதன் முறையாக ராஜாவுடன் கைகோர்க்க, நான்கு பாடல்கள்-எழுதியது பஞ்சு.  இசைத்தொகுப்பின் சிறப்பு என்னவென்றால், தலைப்பிற்கேற்ப, இது நாயகியை முன்னிறுத்திய படம், அனைத்து பாட்களும் பெண்கள் பாடுவது.  :) 

காலைப் பனியில்
Sujatha M
PAC
ஆட்டம் கொண்டாட்டம்
P Suseela
PAC
உன்னத்தான் அழைக்கிறேன்
S Janaki / A.L Raghavan
PAC
வாழ்வே மாயமா
BS Sasireka
PAC

காலைப் பனியில்: Sujatha M


காலைத் பனிபோன்று குளுமையான, இளமையான, புதுமையான குரல். துவக்க குரலிசை (இதை கேட்கும்போது ஒரு பாடல் உங்கள் மனதில் அலைமோதும், என்னவென்று கருத்துரையில் சொல்லவும்)  மெதுவாக ஆரம்பித்து, சட்டென நனநனநனநன்னா.. என ஒரு பெண்ணின் குறும்பை அருமையாக பதிவு செய்கிறது. நாயகியின் அறிமுக பாடல், பாடகிக்கு முதல் பாடல், அழகாக பாடியிருக்கிறார். குரலில் குழந்தைத்தனம் தெரிகிறது, நாயகியின் வயதை மனதில் கொண்டு இப்பாடலை பதிவுசெய்திருக்கலாம். வயலின் அருமையாக குரலை மேலுயர்த்தி, விரையும் குரலுக்கு வலுசேர்க்கிறது. இடையிசை வீணையும் வயலினும் அருமை.

ஆட்டம் கொண்டாட்டம்: 
 https://www.youtube.com/watch?v=Al0KU8at0GE
வீட்டில நடக்கும் பார்ட்டியில் பாடப்படும் பாடல், வாழ்வின் இன்பங்களை ஒரு பெண் மகிழ்ந்து பாடுவதான பாடல். Saxaphone மிகவும் அருமையாக ஒலிக்கும் முதல் இடையிசை. சுசிலம்மா பாடியிருக்கிறார். இவ்வகையான பாடல்களுக்கென ராஜா தனிமுத்திரை சேர்த்தார் பின்னாட்களில். இரண்டாவது இடையிசையும் அருமையாக அமைய, இப்பாடல் நன்றாக இருக்கிறது.

உன்னைத்தான் அழைக்கிறேன்: 
https://www.youtube.com/watch?v=MhHxgjjVmXI
இதுதான் பார்ட்டி பாடலின் அனைத்து முத்திரைகளுடன் அமைந்திருக்கிறது. ஏன் ராஜா, ஜானகியம்மாவுக்கு இவ்வகை பாடல்களை ஒதுக்கிவைத்தார் என்பதற்கு, இந்த பாடல்களையும் ஒருசோறு பதம். ஓட்டலில் பாடப்படும் பாடல், மொத்த Jazz கருவிகளும் அலறியடித்து குத்தாட்டம் போடுகிறது. முதல் இடையிசையை கேட்டு ஆடாமல் இருப்பது கடினம். மெட்டு நம்மை கொத்தாக கவர்ந்திழுக்க, சானகியும், ராஜாவும் நம்மை ஒரு குத்தாட்டும் போடும் வரை விடமாட்டார்கள் போல.

வாழ்வே மாயமா:  
https://www.youtube.com/watch?v=98P1X-OIaug
இங்கிருந்து தான் அந்த படத்தின் பெயர் சென்றிருக்க வேண்டும். பாடல் சோகமான, ஏமாற்றப்பட்ட நாயகி, மனமுடைந்து பாடும் பாடல். அம்மம்மா பசிக்குதம்மாவிற்கு அடுத்து சசிரேகவுக்கு இந்த சோகப்பாடல். நன்றாக பாடியிருக்கிறார். சட்டென நாவில் நிற்கும் சொற்கள், ஆழமான குரல் என சோகப்பாடலின் தேவைகள் அச்சொட்டாக பொருந்திவந்திருக்கிறது இந்தப்பாடலில். அவளின் தனித்த மனவோட்டம், குறைவான இசைக்கருவிகளின் மூலம் வெளிப்படுகிறது.


சுஜாதாவின் முதல் பாடல், அருமையான ஒரு Club Disco, ஒரு Pathos and நாயகியின் Solo Intro Song என மாறுபட்ட சூழல் அமைந்த பாடல்கள், ராஜாவுக்கு வெற்றித்தொகுப்பாக அமைந்துவிட்டது. இந்தப்படத்தின் கதை சுஜாதா ரங்கராஜன்.

முழுப்பட சுட்டி: www.youtube.com/watch?v=wvRtaOoRm2o