ஞாயிறு, 29 மார்ச், 2015

10 - புவனா ஒரு கேள்விக்குறி | Bhuvana Oru Kelvikkuri - 1977

ராஜா மீது ஒருவித எதிர்பார்ப்பு படிய ஆரம்பித்துவிட்டது. என்ன படம், எந்த மாதிரியான பாடல்கள், யார் நாயகன் என ஆர்வமிக்க கேள்விகள், அதேவேளையில் ஒரு தலைமுறை மெல்ல மெல்ல சலிக்கத் துவங்கிய நேரம், புதுப்புது நாயகர்கள், துடிப்பான திறமைகள் துளிர்விட்டது. தமிழ் திரையுலகம், அரசியல் என எதுவும் எப்பொழுதும் இருண்மையில் உழல்வது. அந்த இருண்மையின் உச்சத்திற்கு எவர் தன்னை முனைப்புடன் முன்னெடுக்கிறாரோ, அவர்கள் வரலாற்றை படைக்கின்றனர். புவனா ஒரு கேள்விக்குறி வெளியான காலத்தில் அது ஒரு முக்கியமான படம் என்று யார் நினைத்திருப்பார்கள்

படம், செப் 09, 1977ல் வெளியானது, SP முத்துராமன், ராஜா அவர்களின் முதல் படம். SPM+Rajni+Raja முதல் படம். மூன்றே பாடல்கள் தான். மூன்றும் இன்றுவரை கேட்கப்படும் பாடல்கள், பஞ்சு பாடல்களை எழுத, ராஜாவை நோக்கி முன்வைத்த கேள்விகளுக்கு விடையாக அமைந்தது இந்தப் படத்தின் பாடல்கள்.  

பூந்தென்றலே
Jayachandran,  
Vani Jayaram
PAC
விழியிலே மலர்ந்தது
SPB
PAC
ராஜா என்பார்
SPB, SJ
PAC

பூந்தென்றலே: P Jayachandran, Vani Jayaram
இந்தப்பாடல் ராஜாவின் முதல் breezy romantic song எனலாம். ஆரம்பிக்கும்போதே அவ்வளவு கொண்டாட்டம். இந்த tempoவும் முதன்முதலாக பயன்படுத்துகிறார். மனதின் ஆழத்தில் அழுத்திக்கிடக்கும் உணர்வுகள் பீறிட்டுக்கிளம்பும் வேகம் அந்த பாடலின் துவக்கத்திலேயே பிடிபடுகிறது. ஒரு அலையின் மென்மை, அதே நேரம் அலைமீது பரவி வீசும் காற்றின் வேகம் என பறத்தல் நிலையை நமக்களிக்கிறார் ராஜா. காதல், ராஜாவுக்கு பிடிபடுகிறது, நமக்கு ராஜாவின் மீதான காதலும் மெல்லத்துளிர்விடுகிறது. நீங்களே கேளுங்களேன்.. Vani Jayaram அவர்களின் முதல்பாடல், ராஜா இசையில். 


விழியிலே மலர்ந்தது: SPB


ராஜா இசையில், ரஜினியின் முதல் பாடல். அழகான வரிகள், மென்மையான மெட்டு, குழலிசை, வயலின், SPBயின் தேன்குரல் என இந்தப்பாடல், கேட்டநொடியில் மனதில் இறங்கும் தன்மையது
                                        விழியிலே மலர்ந்தது.. 
                                         உயிரிலே கலந்தது...
                                        பெண்ணென்னும் பொன்னழகே
                                        அடடா எங்கேங்கும் உன்னழகே 
என்ன ஒரு எளிமையான சொற்கள்.. மனதை எப்படி கொள்ளையடிக்கிறது! இங்கிருந்துதான் வைரமுத்து.. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவேன்னு சொற்களை எடுத்திருக்க வேண்டும். பெண்மையின் சிறப்பை, காதலியின் மாண்பை பாடும் காதலனின் மனப்போக்கு, நமக்கும் பலநேரங்களில் பொருந்திப்போகிறது. நாமும் இவ்வரிகளை வாய்விட்டு பாடி அதிசயத்திருக்கிறேம். மனங்குளிர்ந்த நேரங்களில் இப்பொழுதும் பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கேங்கும் உன்னழகே என உரக்க பாடுவதில் ஒரு இன்பம்SPB, Rajini, ஒரு புதுயுகம். 
https://www.youtube.com/watch?v=cz8aby5gsDo 

இங்கிருந்து ரஜினிக்கான tagging ஆரம்பிக்கிறது. இந்த வெற்றிக்கூட்டணியின் பாடல்கள் நூறு நூறென பின்னால் வர இருக்கிறது. மக்கள் மனதில் ரஜினி எளிதில் நுழைய வழிசெய்தது இந்தப்பாடல்

ராஜா என்பார்: SPB

சோகப்பாடல், அதற்கான குறிப்புகள் அருமையாக குழலில் பதிவு செய்து ஆரம்பிக்கிறார் ராஜா. இன்பச்சூழலில் ஆட்டம்போட வைக்கும் ராஜாவின் இசை, துன்பச்சூழலில் அழவைத்து ஆறுதல் தருகிறது. மனதை வருடி, இதமளிக்கிறது, ஒரு anti-depressent ஆக செயல்படுகிறது. இந்தக்குழலிசை அருமையான prelude. கேட்டவுடன் தெரியும் இது இந்தப்பாடலென்று. மிகவும் பிரபலமான பாடல்https://www.youtube.com/watch?v=uonKGhv-xAA

மூன்று முத்தான பாடல்கள். எனில், தொகுப்பே மிகவும் பிரபலமான தொகுப்பு, என்றென்றைக்குமான தொகுப்பு
முழுப்பட சுட்டி,   https://www.youtube.com/watch?v=MgHL0SCthrg 
படத்தை சிறிது நேரம் பார்த்ததில், பிண்ணனி இசை அருமையாக இருக்கிறது. கேட்டுப்பாருங்களேன். 

அண்ணே, நாகராஜ் அண்ணே வசனம் இந்தபடத்தில் இருந்து தான் நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்குள் சென்றிருக்கிறது. :) 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக