ஞாயிறு, 29 மார்ச், 2015

09 - பெண் ஜென்மம் | Pen Jenmam - 1977


ஒரு படைப்பாளியாக, ராஜா, ஒரு சூழலை எப்படி அனுகுகிறார் என்பது, அந்த இயக்குநர் தரும் களம், அதை முன்வைத்து பாடல்களை வாங்கும் திறனை பொறுத்தது. 77ல் ராஜா அந்த தளத்தில் தான் இருந்திருப்பார். தீராப்பசி, கனவு அதே நேரம், அது சரியான திசையில் பயணிக்க தேவையான கதை, முற்போக்கு உணர்வுடன் வேறுபட்ட மெட்டுக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மிக்க இயக்குநர்கள் என அவரின் தேவைகள் விரிந்துகொண்டே இருந்தது. He was growing into an all encompassing hungry man, musically.  

அப்படியான ஒரு சூழலை இந்தப்படத்தில் கவனிக்கலாம். பெரிதாக வெளியில் தெரியாத திரைப்படம். பாடல்கள் பொதுநினைவில் இல்லை. இருந்தும், தேடிச்சென்று கேட்கையில், ராஜா’வின் மனவோட்டம், முயற்சி, வளர்சிதைவு மிகவும் தெளிவாக தெரிகிறது. பத்திரகாளிக்கு பிறகு ராஜா, திருலோகச்சந்தர் இணைந்த இரண்டாவது படம். பத்திரகாளி தந்த அசூர வெற்றியை இந்தப்படம் தக்கவைத்ததா எனத் தெரியவில்லை. ஆனால் விதவிதமான நான்கு பாடல்கள். 

பெண் ஜென்மம், AUG-19,1977 அன்று வெளியாகியிருக்கிறது. பாடல்கள் அனைத்தும் வாலி. முத்துராமன் அவர்களின் முதல்படம், ராஜா’வுடன். பத்ரகாளியைப்போலவே, இப்படத்திலும் சுசிலம்மா அதிகம் பாடல்களை பாடியிருக்கிறார். ஆனாலும் சானகி பாடிய பாடல் versatile one. :) 

செல்லப்பிள்ளை சரவணன்
KJY, PSuseela
வாலி
ஓய் மாமா
SPB, SJ
வாலி
வண்ணக்கருங்குழல்
PSuseela
வாலி
ஒரு கோவிலின் இரு தீபங்கள்
PSuseela
வாலி

செல்லப்பிள்ளை சரவணன்:

முருகனின் புகழ்பாடும் முதல் பாடல், முருகன் வள்ளியாகவும் நாயகன் நாயகி தம்மை உருவகித்து பாடும் பாடல். திருலோகச்சந்தர், பத்ரகாளியில் கண்ணனை, காளியை  முதன்மைப்படுத்தி பாடல்கள் வாங்கியிருந்தார். இங்கு, முருகன். அழகான, அமைதியான பாடல். https://www.youtube.com/watch?v=QXAN2eyuy6k

https://soundcloud.com/balaji-sankara-saravanan-v/chella-pillai

ஓய்மாமா:  

 SPB + SJ இணையின் கொண்டாட்டமான பாடல். முதன்முறையாக இந்துஸ்தானி பாடல் போன்று தோற்றமளிக்கும் பாடலை அமைத்துள்ளார் ராஜா. வரிகளிலும் இந்தி வரிகள் வருகிறது. இடையிசையை கவனித்தால் மலைவாழ்மக்களின் இசை சேர்ந்திசையாக முதல்முறையாக தந்திருக்கிறார் ராஜா, அழகு என்னவென்றால், அந்த சேர்ந்திசை தாளம் முடியும் நொடி, கிடாரின் சீண்டல், அடுத்து குழலின், செனாயின் இசை என அருமையான பொதி.  https://www.youtube.com/watch?v=X2csdZ9ZuGA

வண்ணக்கருங்குழல்.. : 
இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சமீபத்தில் இந்த பாடலின் இயங்கியல்(dynamics) குறித்து கீச்சியிருந்தேன். எடுத்தவுடன் அதிவேகத்தில் செல்கிறது பாடல். அற்புதமான மேடைக்கச்சேரிக்கான தாளக்கட்டு மட்டும் மெட்டமைப்புடன் மனதை கொள்ளை கொள்கிறது பாடல். முருகனை பாடிய முதல் பாடல், இங்கு வள்ளியை பாடுகிறது. மேயாத மான் புள்ளிமேவாத மான் வரிகளை தொட்டுச்சென்றிருக்கிறார்(sampling). :) 

ஒரு கோயிலின் இரு தீபங்கள்: 

மண உறவின் சிக்கல்களை பாடும் இப்பாடல், சுசிலம்மா’வின் குரலில் இனிமையாக இருக்கிறது. நீரோட்ட பன்னியம், அமைதியான மெட்டமைவு. கேட்க்க இனிக்கும் வீணை.  https://www.youtube.com/watch?v=NzEDhUvja1o

இத்தொகுப்பு, Varietyக்காக தனித்து நிற்கிறது. முதல் இந்தி வரிகள், மலைவாழ் மக்களின் இசை பண்புகளை இடையிசையில் பயன்படுத்தியமை என நல்ல ஒரு முயற்சி, இனிமையான பாடல்கள். :) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக