புதன், 25 மார்ச், 2015

03 - 1976 - பாலூட்டி வளர்த்த கிளி


பாலூட்டி வளர்த்த கிளி- அன்னக்கிளிக்கு பின்பு, தேவராஜ் மோகனும், ராஜாவும் இணைந்த அடுத்த கிளி. இரண்டு காரணங்களுக்காக இந்த படம் முக்கியத்துவம் பெறுகிறது. கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியது மற்றும் SPB ராஜாவுக்கு பாடிய முதல் படம். இந்த வெற்றிக்கூட்டணி இன்று வரை தொடர்கிறது. 

SJ, PS - இருவருடனும் SPB இணைந்து பாடியிருக்கிறார். ராஜா இசையில் இதுவும் ஒரு முதல் நிகழ்வு. :) 
நான் பேச வந்தேன் S.P.Balasubramaniam / S.Janaki கண்ணதாசன்
அடி ஆத்திரத்தில் P.Susheela / Chorus கண்ணதாசன்
கொலகொலயா முந்திரிக்கா S.Janaki / Chorus கண்ணதாசன்
கொலகொலயா முநந்திரிக்கா சோகம் S.Janaki / Chorus கண்ணதாசன்
வாடியம்மா பொன்மகளே S.P.Balasubramaniam / P.Susheela கண்ணதாசன்

நான் பேச வந்தேன்: 
SPB + SJ இணையின் முதல்பாடல். பாடகராக SPB அடைந்த தூரங்கள் ராஜாவின் வருகைக்கு பின்பே நிகழ்ந்தது, அதன் ஒத்திகையான இப்பாடல், மிகவும் மென்மையான அளவையில் ஒலிக்கிறது. PBS பாடுவது போன்ற உணர்வு. சானகியும் இழைந்து பாடுகிறார். எச்சூழலிலும் ஒரு அருமையான மெலடியை கேட்கும் விருப்பத்தை நிவர்த்தி செய்யும். Orchestration sticks to the melodic structure and aids the vocals aptly.  இந்த இடுகையை நான் துவங்கும் முன்பு கைக்கொண்ட கருத்தியல் இது தான். இதுபோன்ற அதிகம் கேட்டிராத பாடல்களை அறிமுகப்படுத்துவது. https://www.youtube.com/watch?v=9ZNJncW2220

அடி ஆத்திரத்தில்: 
பெண்ணுக்கு அறிவுரைகள் சொல்லும் பாடல், கண்ணதாசன் காலத்திற்கு ஏற்ற பிற்போக்கு அறிவுரைகளை அள்ளி வீசியிருக்கிறார். சுசிலம்மாவின் குரலில் அப்போதைய பெண்களை எரிச்சலூட்டும் பாடலாக அமைந்திருக்கும். :)

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=wi3vyYCOPyY

கொலகொலயா முந்திரிக்கா: 

குழந்தைகளுடன் பாடும் பாடல், சானகியின் versatility மெதுவாய் எட்டிப்பார்க்கிறது. இதுவே சோகமாகவும் ஒரு முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குரலினிமை, வேகம் மற்றும் orchestrationனில் தன் பாணியை தேடும் ராஜாவின் முயற்சி இதில் தெரிகிறது. கேட்கும் எவரும் MSV பாடல் என சொல்லிவிடும் வாய்ப்புள்ள பாடல். இந்தப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவிய பாடல் என 70களின் ரசிகர்கள் கருத்தளித்துள்ளனர். :)   https://www.youtube.com/watch?v=ylfCsR4GMx4

Pathos version - https://www.youtube.com/watch?feature=player_embedded&v=pTKtJIHa5jU

வாடியம்மா பொன்மகளே: 
இந்த தொகுப்பின் சிறந்த பாடல் இது தான் என்பேன். திருமணமாகி வீட்டிற்கு வரும் பெண்ணை, வீட்டிலிருக்கும் கூட்டம் வரவேற்கும் பாடல். மணமகளே வா அமைப்பில் இல்லாமல், ஒரு பாப் பாடலை ஒத்திருக்கிறது. Orchestration also Jazzy and Hip. SPB tries his carefree singing style here.. very premature but the impetus is there. தவறவிடக்கூடாத பாடல். https://www.youtube.com/watch?v=wKBFpO1mL1A 

இது வெற்றிகரமான தொகுப்பா என்றால்.. மய்யமாக தலையசைக்கலாம். SPB, Kannadasan, and ஒரு பாப் முயற்சியின் துவக்கம் எனுமளவில் கேட்டகவேண்டிய தொகுப்பு. PS வாடியம்மா’வில் பெரிதும் கவர்கிறார்.

https://www.youtube.com/watch?v=3i_x2DTWp2A முழுதிரைப்பட சுட்டி.

பின்னூட்டங்களின் வழி நான் பயின்ற ஒரு செய்தி: 2015லிருந்து 1976ன் படைப்புகளை அனுகும் போது, நமக்கு அக்காலத்திய களநிலவரம் பெரிதும் தெரிவதில்லை. அக்காலத்தில், இது மிகவும் பிரபலமான இசைத்தொகுப்பு என கருத்துக்கள் வருகிறது. மிக்க மகிழ்ச்சி. ராஜா இன்னமும் ஒரு அறிமுக இசையமைப்பாளர் எனும் நிலையில், 3வது தொகுப்பும் வெற்றியென்பது கவனிக்கத்தக்கது. :)


5 கருத்துகள்:

  1. நான் பேச வந்தேன், கொலா கொலய முந்திரிக்க பாடல்கள் மட்டும் விரும்பி கேட்டுள்ளேன். மற்ற பாடல்கள் நீங்கள் கூறிய படி கேட்டு, பார்த்து தெரிந்து கொண்டேன். எல்லாமே அருமை என்பது என் எண்ணம். கடைசி பதிவில் வாடியம்மா பாடலை SJ என்று இருக்கிறது. அந்த பாடலில் இன்னொருவரும் பாடியது போல படத்தில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், எனது பிழை தான். அது சுசிலாம்மா மற்றும் SPB. எல்லாமே அருமை தான் :)

      நீக்கு
  2. அக்காலத்தில் பள்ளிச்சிறுவன் என்ற அளவில் நான் அறிந்தவை :
    'குலை குலையா' பட்டி தொட்டி ஹிட் பாடல். (ஹார்ன் ஸ்பீக்கர் அளவில்).
    'நான் பேச வந்தேன்' மற்றும் 'வாடியம்மா பொன்மகளே' ரேடியோவில் அடிக்கடி ஒலித்த பாடல்கள்.
    அதிலும் குறிப்பாக இலங்கை வானொலியில் 'நான் பேச வந்தேன்' பிரபலம்.

    'வாடியம்மா' சுசீலா என்று நினவு (எஸ்.ஜானகி இல்லையே?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், திருத்திவிட்டேன். அது சுசிலா தான். இதுபோன்ற செய்திகளை பகிர்வது அனைவருக்கும் பயனளிக்கும். :)

      நீக்கு
    2. :-)
      போன ஞாயிற்றுக்கிழமை கங்கை அமரன் 'நான் பேச வந்தேன்' பாடிக்கொண்டு தான் புதிய "சன் சிங்கர்" சீசனைத் தொடங்கினார் என்பது கவனிக்கத்தக்கது.
      http://www.youtube.com/watch?v=Zw5BNIvE8mo&t=185s
      மற்றபடி, இந்தப்பாட்டு ரேடியோவில் ஒலித்த காலத்தில் 'ராசா பாட்டு' என்றெல்லாம் கவனித்துக்கேட்க ஆரம்பித்திருக்கவில்லை. சொல்லப்போனால், பலருக்கும் 'வாடியம்மா' அவர் பாட்டு என்று தெரிந்திருக்காது.

      நீக்கு