செவ்வாய், 24 மார்ச், 2015

01 - அன்னக்கிளி | Annakkili - 1976







1976 மே 14 அன்று அன்னக்கிளி வெளியானது. 196 நாட்கள் ஓடியது. இளையராஜாவுடன் இந்த திரைப்படமும் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது. பாடல்கள் இன்று வரை கேட்கப்படுகிறது. திரைப்படங்களில் எடுத்தாளப்படுகிறது. இளையராஜா குறித்த கட்டுரைகளில் தவறாது இடம்பெறுகிறது. இளையராஜாவின் முதல்படம் என்பதால் மட்டுமின்றி, பாடல்கள் தன்னளவில் மிகவும் இனிமையானவை, இனிவரும் காலங்களின் ஆளுமைக்கான உரைகல்லாகவும் அமைந்தது. அன்னக்கிளியின் பெருமையை, ராஜா சொல்ல கேட்க்கலாம் கீழுள்ள இணைப்பில். https://www.youtube.com/watch?v=iZqWFe1-kqo
படத்தில் 4 பாடல்கள். 1 பாடல் சோகப்பாடலாக  மீளுருவாக்கம் கண்டு மொத்தம் 5 பாடல்கள். துண்டுப்பாடல் ஒன்று.

அன்னக்கிளி   உன்னை
S.Janaki
பஞ்சு அருணாச்சலம்
அன்னக்கிளி உன்னை
T.M.Soundarajan
பஞ்சு அருணாச்சலம்
மச்சானை பாத்தீங்களா
S.Janaki
பஞ்சு     அருணாச்சலம்
அடி ராக்காயி
S.Janaki/Chorus
பஞ்சு அருணாச்சலம்
சொந்தமில்லை
P.Suseela
பஞ்சு அருணாச்சலம்
கல்யாணம் பேசி
S Janaki
பஞ்சு அருணாச்சலம்



இன்றும் அந்த தலைப்பிசை(TitleMusic) கேட்க அருமையாக இருக்கிறது. மச்சானை பாத்தீங்களா கருவியிசை sampling செய்திருக்கிறார். இளையராஜாவுக்கு அன்னக்கிளி ஒரு அருமையான துவக்கம் என்பேன், பெண்மையின் பெருமை பேசும் படம். அனைத்து பாடல்களும் பெண்களுக்கானது. இளையராஜா’வின் களத்தை ஒருவாறு கோடிட்டு காட்டுகிறது. தன் காலம் முழுக்க பெண்மையின் பன்முகத்தை இசையின் மூலம் பேசிச்செல்வதற்கான அச்சாரம்-முன்னறிவிப்பு-harbinger இந்த படத்தின் பாடல்கள். அனைத்து பாடல்களையும் எழுதியவர், பஞ்சு அருணாச்சலம். 


1. அன்னக்கிளி உன்னத் தேடுதே - S Janaki இனி சுருக்கமாக SJ. 















இன்றும் இனிக்கும் பாடல். ஆஆஆஆ என SJ' ராகமெடுத்த நொடி நாம் அந்தப்பாடலின் பிடியில் விழுந்தாயிற்று. அதற்குபின் நிகழ்வதெல்லாம் ரசவாதம். இதற்கான Musical Motif குறித்து மொட்டை சமீபத்தில் விளக்கியிருந்தார். நதியோடுவதன் இயக்கத்தை ஒத்த இடையிசை(Interlude). நாயகியும் நதியின் இயக்கத்தை ஒத்த விடுதலையுணர்வானவள். பெண்மையின் ஏக்கம், காதல், காத்திருப்பு என கலவையான உணர்வுகளை கட்டவித்துவிட்டிருப்பார் ராஜா. உறங்காத.. என SJ உச்சத்தில் பாட.. நாம் அதற்கும் அப்பாலான வெளியில் உலவும் வகையில் சேர்ந்திசை(chorus). இந்த பாடலை முதன்முதலில் கேட்டவர்களின் உணர்வுநிலை எப்படி இருந்திருக்குமென உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். IR+SJ ஒரு வெற்றிக்கூட்டணி. https://www.youtube.com/watch?v=v7H8rq8PEOA (RajVideo Vision HD தரத்தில்  வெளியிட்டிருக்கும் இந்த பிரதி அருமையாக ஒலிக்கிறது)

2. அன்னக்கிளி உன்னத்தேடுதே - TMS 
அதே பாடல், சோகமான சூழலில் ஒலிக்கிறது. அழுதுகொண்டே பாடுவதில் வல்லவரான TMSன் குரலில் கம்பீரமாக கேட்கிறது. புல்லாங்குழல் கசிய, அதே நதிநடக்கும் இடையிசை அளவு குறைந்து மெதுவாக வாசிக்கப்படுகிறது. அதே வரிகள். பல்லவி+ஒரு சரணத்துடன் முடிகிறது. 
https://www.youtube.com/watch?v=L06Szi262n8


3. சுத்தச்சம்பா(ராக்காயி) - SJ
திருமணச்சூழலில், விறுவிறுப்பாக ஆரம்பித்து, அதே உணர்வு பாடல் முழுவதும் நிறைந்து நிற்கிறது. அரிசி குத்தும் ஓசையுடன் சேர்ந்திசை, தாளக்கருவிகள் மற்றும் SJவின் தளராத பிடியில், செனாய் + வீணை இடையிசையென அருமையான பாடல். இன்றும் கிராமங்களில் திருமண நேரத்தில் ஒலிக்கும் பாடல். https://www.youtube.com/watch?v=K_ftUBqeZR0

4. மச்சானப் பாத்தீங்களா - SJ
லலிலாலிலலோ... எம்மச்சான எம்மச்சான பாத்தீங்களா.. பட்டிதொட்டியெங்கும் இந்தப்படத்தை எடுத்துக்கொண்டு சேர்த்த பாடல். Rythm section ஒரு குதியாட்டம் போடும் பாடல். SJ இந்தப்பாடலிலும் ஒரு உச்சம்.. நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள என SJ முடிக்க.. நம் நெஞ்சை அள்ளிவிடுகிறது பாடல். கற்பனையில் திருமணம் வரை செல்லும் நாயகியின் துள்ளல் ஜானகியின் குரலில் ஒளிர செனாய் முத்திரை பதித்து முடிக்கிறது பாடலை. https://www.youtube.com/watch?v=0YH7H6PH11E

5. சொந்தமில்லை பந்தமில்லை - பி.சுசிலா PS
மனதைப்பிழியும் சோகப்பாடல். சசிலம்மா அருமையாக பாடியிருப்பார். இரயில் பிச்சைக்காரர்கள் இன்றும் பாடும் பாடல் இது, ஆதரவற்றவர்களின் கையறுநிலையை ஆழமாக பதியவைக்கும் இடையிசை. சுசிலம்மாவின் குரல் வெளிப்படுத்தும் சோகம் எவரையும் ஆட்கொள்ளும். https://www.youtube.com/watch?v=4uOE0taThQU

6. கல்யாணம் பேசி - SJ
மச்சானப்பாத்தீங்களா மெட்டில், துண்டுப்பாடல். பெண்ணின் மனநிலையை சோகமாக பதிவுசெய்கிறது.

https://soundcloud.com/balaji-sankara-saravanan-v/kalyaanam-pesi

இது ஒரு புதுவகை இசை, மண்ணின் குரல், பெண்மையின் உணர்வுகளை 5 பாடல்களில் பதிவுசெய்து, தமிழ்திரையிசையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம். தனித்த குரலிசை, ஆலாபனை, இடையிசையின் ஆழம், துள்ளல், texture, சேர்ந்திசையின் நேர்த்தி என ரசிகர்களை தன் முதல் படத்திலேயே கட்டிப்போட்டார் ராஜா.

https://www.youtube.com/watch?v=oTgHFurs7ks


3 கருத்துகள்:

  1. அன்னக்கிளியே உன்னைத்தேடுது... சிந்துபைரவி ராகம். பல அருமையான பாடல்கள் இந்த ராகத்தில். உதா:மணியே மணிக்குயிலே... ஹீரோயின் இன்ட்ரோ பாடல் , துள்ளிசை எனினும் ஒரு மென்சோகம் இழையோடும் , அதுதான் ராஜாவின் ஜீனியஸ். Unrequited love . அவள் இறக்கும்தருவாயிலும் இந்த பாடலின் ஒலித்துணுக்கு பிஜிஎம்மாக வரும். அழகான முயற்சிக்கு அழகான துவக்கம். வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  2. இசைஞானியின் ஆண்டுவாரியான படப்பாடல் தொகுப்பொன்றை தயாரிக்கும் பணியில் உள்ள எனக்கு உங்கள் பதிவுகள் ஒரு வரப்பிரசாதம். நன்றி.

    பதிலளிநீக்கு