தீபம், வெற்றிக்கூட்டணியின்
அடுத்த முயற்சி. நடிகர் திலகம், இயக்குநர் K விஜயன் மற்றும் ராஜா இணைந்த, தியாகம் மார்ச் 4, 1978 அன்றி
வெளியானது. பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன். டிஎமெஸ் பாடினாலே ராஜாவுக்கு முந்தைய காலகட்ட பாடல்கள்
என்று நினைக்குமளவுக்கு, அவரின் முத்திரைக்குரல் மக்களுக்கு பழக்கமான ஒன்று. நடிகர்
திலகத்துக்கு அவர் குரல் தான் சரிவரும் என இப்படத்திலும், அனைத்து பாடல்களும் அவரே
பாடியுள்ளார்.
தேன்மல்லிப்
பூவே
|
TMS
– S Janaki
|
Kannadasan
|
உலகம்
வெறும் இருட்டு
|
TMS
– Kovai Murali
|
Kannadasan
|
வசந்தகால
கோலங்கள்
|
S
Janaki
|
Kannadasan
|
வருக
எங்கள் தெய்வங்கள்
|
TMS
– LR Anjali
|
Kannadasan
|
நல்லவர்க்கொல்லாம்
|
TMS
|
Kannadasan
|
தேன்மல்லிப் பூவே | TheanMalli Poove – TMS – SJ
அரைநிமிட
துவக்க இசை, வரவிருக்கும் காதல் பாடலுக்கான அனைத்து குறிப்புகளையும் உள்ளடக்கிய துவக்க
இசை. TMS, SJ அருமையாக பாடியுள்ள மிகவும் பிரபலமான பாடல். வீணை interlude வயலினுடன்
கலந்து அருமையாக ஒலிக்க சரணத்துக்கு போகும் அந்த transition அழகாக இருக்கிறது. இன்றும்
சிவாஜி அவர்களின் சிறந்த டுயட் வரிசைகளில் இப்பாடலும் ஒன்று. இரண்டாம் இடையிசை மிகவும்
சிறப்பு, அரை நிமிடத்தில் எத்தனை மாறுதல்! https://www.youtube.com/watch?v=XypEy5aOLHA
உலகம் வெறும் இருட்டு | Ulagam Verum Iruttu - TMS – Kovai Murali
நண்பர்கள் கூட்டம், மதுவின் துணையுடன் கொண்டாட்டமாக பாடும் பாடல். சமுதாயத்தை பகடி செய்து பாடுகிறார்கள் நண்பர்கள்.
வசந்தகால கோலங்கள் | Vasantha Kaala Kolangal – SJ
இந்தப்பாடலின்
பிண்ணனியில் பல கதைகள் உண்டு. அதிலொன்று, உடல்நலமின்றி கவியரசர் மருத்துவமனையில் இருந்த
நேரம், தனக்கு அளிக்கப்பட்ட treatment saline wires, connections, O2 Mask, அனைத்தையும்
பாடலில் எடுத்து வந்தார் என்பது. வானில் விழுந்த கோடுகள் – அனைத்து வயர் மட்டும் ட்யூப்கள்.
இந்த
தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தான். பலநேரங்களில் மனம் தானாகவே இப்பாடலை
பாட ஆரம்பித்துவிடும். வாழ்வின் நிலையற்ற போக்கில், பருவங்களைப்போல் எப்பொழுதும் இன்பம்
துன்பமென மாறி மாறி வருவது இயற்கை. கலைந்திடும் கனவுகள்.. கண்ணீர் சிந்தும் நினைவுகள்..
ஒவ்வொரு சொல்லும் செதுக்கியது போல பொருந்தி, எக்காலத்திற்குமான ஒரு சோகப்பாடல். பெண்களின்
மனவுலகை அப்படியே உருக்கிவார்க்கும் ரசவாதன் ராஜா.
கிடார்
அவ்வளவு மென்மையாக, சோகத்தை கூட்டுகிறது. காற்றில் ஆடும் சுடரென சானகியின் குரலிலே
அவ்வளவு தெளிவு, சோகம், ஒளி அதே வேளை அந்த ஒளியைச்சுற்றிய இருள். கிடாரிலிரிந்து வீணை,
மீண்டும் கிடார் என இடையிசை நம் மனதில் எதோ ஒரு நரம்பை, சுண்டி வலிக்கச்செய்கிறது.
இரண்டாம் இடையிசையை கேளுங்கள், the plucking of the strings are targeted at our
hearts. https://www.youtube.com/watch?v=W4Rv6VPV8-E
வருக எங்கள் தெய்வங்களே | Varuga engal Deivangale – TMS – L R Anjali
மங்கல
வாழ்த்துப்பாடல். வாழ்த்துக்களை வேண்டி பாடப்படும் கொண்டாட்டமான ஆடிப்பாடும் சூழல்.
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் | Nallavarkellam Satchigal – TMS
வாழ்வில்
எல்லோருக்குமே ஒரு கட்டத்தில், உள்ளத்தில் ஒரு தெளிவு பிறந்து, மனம் மென்மையாகி, எண்ணங்கள்
சீராகும். எப்போது நிகழுமென்பது அவரவர் தேடல் சார்ந்தது. நடிகர் திலகம் எண்ணற்ற தத்துவத்
தேடல் பாடல்களில் நடித்துள்ளார், அவருக்கு கவியரசரும் பக்க துணையாக, தேடலின், ஆன்மிகத்தின்
கூறுகளை சொற்களில் செதுக்கி, நல்லதொரு பாடலாக அளித்துள்ளார். இந்தப்பாடல், அந்த இணையின்
பிற்காலத்திய தத்துவ வரிசையில் மிகவும் முக்கியமான ஒன்று.
பாடலின்
துவக்கமே ஒரு தெளிவான மனநிலையை, ஒளிகொண்ட மனதினை வாய்க்கப்பெற்ற ஒருவரின் குரல், அதை
தொடரும் குழல், பின்பு தாளம், பாடல் என மென்மையாக துவங்குகிறது பாடல். இத்தகைய பாடல்களில்
வரிகளின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும், எனவே ராஜா, மிகவும் குறைந்த கருவியிசையுடன்,
TMS குரல் நம் மனதில் நேரடியாக இறங்கும் வகையில் இசையமைத்துள்ளார். இருந்தும் இரண்டாம்
இடையிசையில் அவ்வளவு அற்புதமாப வயலின் சோகத்தை கூட்டுகிறது.
தவறுக்கு
துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே.. கவியரசரின் ஆட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக