சூன் 9, 1978 அன்று வெளியான இரண்டு ராஜா படங்களில் ஒன்று, சிட்டுக்குருவி.
தேவராஜ்-மோகனின் அடுத்த படைப்பு, ராஜாவுடன். வழமையாக நாயகன் சிவக்குமார். பாடல்கள், வாலி. தேவராஜ்-மோகனுக்கு ராஜாவின் முதல் இயக்குநர் எனும் சிறப்பிடம்
எப்பொழுதும் உண்டு. அவர்களுக்கு அமைந்த பாடல்களும் அருமை.
என் கண்மணி
|
S.P.Balasubramaniam / P.Susheela /
R.D.Baskar / Kovai Balu
|
Vaali
|
காவேரிக்கரை
|
S.P.Balasubramaniam / Chorus
|
Vaali
|
அடட மாமரக்கிளியே
|
S.Janaki
|
Vaali
|
உன்ன நம்பி
|
P.Susheela
|
Vaali
|
என் கண்மணி | En Kanmani – SPB SJ
இந்தப்பாடல் ஒரு textbook
reference for Counterpoint. தமிழில் எதிர்பாட்டு என்று சொல்லாமா எனத்தெரியவில்லை.
இசையமைப்பாளர்கள், ஒரு மெட்டை அமைக்கும்போது, ஒரு மெலடி என வைத்துக்கொள்வார்கள்.
அந்த மெலடியை எப்படி மெருகேற்றுவது என்பதை வாத்திய இசை, குரல் செறிவு, குரல் தளம்
இதெல்லாம் பார்த்துக்கொள்ளும். மெயின் மெலடியின் ஆன்மா பாடல் முழுவதும் ஊடுபாவும்.
அந்த மெலடி-மெட்டு வெளிப்படுத்தும் உணர்வு, காட்டிசியின் தேவைக்கேற்ப விரியும்,
சுருங்கும், சிரிக்கும், அழும்.. J இப்படி ஒரு மெலடியை சுற்றி அனைத்தும் ஒழுங்கமைவில் செல்வது
ஒத்திசைவு/harmony எனப்படும். Chorus, orchestration எல்லாமே அந்த பிரதான மெலடியை
ஒத்து, செழுமைப்படுத்தி வரும். 99 சதவித பாடல்கள் இவ்விதம் தான் அமையும். ஒரு
நாயகன், அவைச்சுற்றி அமையும் கதையை போன்றது இந்த harmony. அவ்வப்போது நகைச்சுவை,
குணச்சித்திரம் என வந்தாலும், நாயகன் என்னவோ அந்த மெயின் மெலடி தான்.
இதுவே இரண்டு மெலடிக்கள்
ஒரு sine waveன் எதிர் இயக்கம் போல பொருந்தி, ஒரே பாடலாக அமைவது counterpoint.
Western Classical Music’ல் இது ஒரு உத்தி, ஐடியா.
தனித்தனியாக பாடினாலும்
இந்த மெலடிக்கள், ரிதம் பொருந்திவர, தனிப்பாடலாக நிற்கும், சேர்ந்து பாடினாலும்
ஒன்றை ஒன்று அழுத்தாமல், ஒரு நதியின் எதிர்கரைகள் போல வளைந்து, அழகாக இணைந்து
செல்லும். இது குறித்து மேலதிகமா western music theory’ல் தேடிப்படிக்கலாம்.
அந்த தொல்லையின்றி, இந்த
பாடலில் நமக்கு எளிமையாக விளக்குகிறார். இப்போது பாடலை கேளுங்கள..
என் கண்மணி உன் காதலி
இளமாங்கனி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு
நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ
இது தான் பாடல். நாயகனும்
நாயகனும் பேருந்தில் பயணிக்கின்றனர். அவர்களின் எண்ண அலைகள் தனியே அவர்களி சீண்டி
அவர்களுடன் பாடுகிறது. இப்பொழுது நாயகன், அவன் நினைவுகள்/மனசாட்சி/alterego என
இரண்டு பேர். நாயகிக்கும் அதே. மொத்தம் இரண்டு பேர். இரண்டு மெலடி உத்தியை
முதன்முதலாக எடுத்து வருகிறார் ராஜா. எப்படி?
என் கண்மனி
1
|
இளமாங்கனி
3
|
சிரிக்கின்றதே
5
|
நான் சொன்ன ஜோக்கை
கேட்டு நாணமோ
7
|
|||
உன் காதலி
2
|
உனைபார்த்ததும்
4
|
சிரிக்கின்றதே
6
|
நீ நகைச்சுவை
மன்னனில்லையோ 8
|
1-2-3 வரிசையில் கீழிறங்கி மேலேறி, ஒரு
அலையின் நகர்வை ஒத்திருக்கும் இரண்டு மெலடிக்களின் ஒத்திசைவு, இது தான் எதிர்ப்பாட்டு அல்லது Counterpoint. எவ்வளவு அழகாக அமைகிறது
பாருங்கள். இரண்டு பாடல்கள்
பா1: என் கண்மணி
இளமாங்கனி சிரிக்கின்றதே நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
பா2: உன் காதலி உனைப்பார்த்ததும்
சிரிக்கின்றதே நீ நகைச்சுவை மன்னனில்லையோ
இரண்டு பாடல்களும்
இசைந்து, ஒரே பாடலாகி… தன் குருவான பாக்’கிற்கு சிறப்பு செய்திருக்கிறார் ராஜா. இரண்டு
மெலடிக்கும் ஆதாரம், ரிதம். தனியே பாடினாலும் அந்த ரிதம் அப்படியே துணை புரியும். இத்துணை
கடினமான, சிக்கலான பாடலில் அந்த பேருந்தின் சூழலை அப்படியே பதிவு செய்திருப்பார்.. நன்னா சொன்னேள் போங்கோ, கருவாட்டு கூட முன்னாடி போம்மா.. தேனாம்போட்டை சூப்பர் மார்க்கெட் எறங்கு.. அதான் ராஜா..
அந்த துவக்க இசை அப்படியே பேருந்தின் ஆரனுக்கு, டியூன் போட்டது போல அவ்வளவு அருமை J
வரிகளின்
கவித்துவம் சொல்லி மாளாது. ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவன்றி வேறு இல்லை
கவனங்களில்.. வாழ்வின் சாரத்தை இரண்டு வரிகளில் முடித்துவிட்டார் வாலி!! இது தான் காலத்தால்
அழியாத இசை.
நமக்காக ராஜாவே வகுப்பெடுக்கிறார். எவ்வளவு எளிதாக இருக்கிறது. :)) https://www.youtube.com/watch?v=iZqWFe1-kqo
காவேரிக்கரை ஓரத்திலே | Kaverikarai Oorathiley – SPB
Westernனிலிருந்து
அப்படியே நாட்டார் இசைக்கு ஒரு தாவல், ஏலாரம்ப ஏலாரம்ப ஏலா.. Genre எதுவானாலும் இவர்
ராஜா என்பதை நிறுவுகிறார். பாடலை விட எனக்கு அந்த folkish ஏலாரம்ப ஏலாரம்ப மிகவும்
பிடித்திருக்கிறது..
அடட மாமரக்கிளியே | Adada MaamaraKiliye – SJ
Prelude
ம்ட்டும் கேளுங்கள். வயலின் பரபரவென ஆரம்பிக்க, அப்படியே கிடார் அணைபோட குழல் மேலெழுகிறது
திரும்ப கிடார், அப்புறம் தபேலா ரிதம் பிடிக்க.. பாடல் அதற்கு மேல் நம்மை எங்கோ எடுத்துச்
செல்கிறது.
உன்ன நம்பி நெத்தியில | Unna Nambi Nethiyile – P Suseela
அருமையான
சோகப்பாடல், ஆனாலும் சுசிலம்மாவின் உச்சரிப்பு ஒரு அப்பாவித்தனத்தை, குழந்தைமையை வெளிப்படுத்துவதை
கவனியுங்கள். பெண்களின் விருப்பப்பாடல். J மச்சான் பொட்டே வெச்சேன்
மத்தியிலே.. போதையேற்றும் குரல்.
Full Movie: https://www.youtube.com/watch?v=3GjJjW_vZzM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக