மே 5, 1978 அன்று வெளியான படம். இயக்கம் சந்திரபோஸ்.பாடல்கள் கண்ணதாசன், புலமைப்பித்தன். ஸ்ரீகாந்த் நாயகன். நாயகிகளை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. பாடலை பார்த்து சொல்லுங்கள்.
வானத்து பூங்கிளி
|
SJ,
Jency
|
Kannadasan
|
என் கண்கள்
|
SJ
|
Kannadasan
|
ஓடம் ஒன்று
|
Ilayaraja
|
Pulamaipithan
|
கட்டழகு மாமா
|
S
Janaki
|
Pulamaipithan
|
வானத்து
பூங்கிளி
இரு
பெண்கள் தங்களின் மனத்துயரை பாடித்தீர்க்கும், ஆற்றுப்படுத்தும் பாடல். ஜென்சி அவர்கள்
சானகியம்மாவுடன் இணைந்து பாடிய பாடல். கேட்டவுடன் ஈர்க்கிறது. வரிகளின் எளிமையும் காரணமாக
இருக்கலாம்.
கட்டழகு
மாமா
தனக்கு
பிடித்தவனை சீண்டிப்பாடும் பாடல், இதுவும் கேட்டவுடன் பிடிக்கும் வகையிலான மெட்டமைப்பு.
பாடல் வரிகளும், அவளின் ஏக்கங்களை எளிதில் நமக்கு சொல்கிறது, விரசமில்லாமல், ஒரு குழந்தைத்தன
எதிர்பார்ப்பில் பாடுகிறார் நாயகி.
ஓடம்
ஒன்று
இந்த
தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அமைதியாக, ஆழமான குரலில் ராஜா பாட, ஒருவனின்
சோகமனநிலை தெளிவாக பிடிபடுகிறது. சோகமும் தத்துவமும் இணைந்தால் கிடைக்கும் குழப்பவெளி,
பாட்டில் கரைந்து, பாடுபவருக்கும், கேட்பவருக்கும் ஒரு தெளிவை அளிக்கும் பாடல்.
https://www.youtube.com/watch?v=RxeABmHM7NE
ஓடம் ஒன்று
என்
கண்கள் என்றும் உன்மீது |
பழிவாங்கும்
பாடல், அல்லது, உளவுபார்க்கும் பாடல். துவக்கயிசை ஒருவிதமான உளவுச்சூழலையே சொல்கிறது.
வீடியோ கிடைக்கவில்லை, CludDance genreஆகவும் இருக்கலாம். படம் பார்த்தவர்கள் தெளிவுபடுத்தவும். பாடலின் ஒலித்தரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. :(
கதாநாயகிகள் ஒருவர் ஜெயப்ரபா, இன்னொருவர் சுமதி நு நினைக்கிறேன். ஜெயப்ரபா அவன் இவன் படத்துல ஆர்யாவின் அம்மாவாக வருபவர்.
பதிலளிநீக்குஇன்னொரு நாயகி மீரா, சிட்டுக்குருவி படத்தில் சிவகுமாருடன் 'என் கண்மணி' பாடலில் தோன்றுவார். சிந்துபைரவி படத்தில் சிவகுமார் பாடும் 'தண்ணீர் தொட்டி' பாடலிலும் காட்சியளிப்பார்.
பதிலளிநீக்கு