இப்படி ஒரு படம் வந்ததற்கான எந்த குறிப்புகளும் இணையத்தில் இல்லை, இந்தப்பாடல்களைத் தவிர. ராஜா’வின் பாடல்களில் மட்டுமே இப்படம் உயிர்த்திருப்பது, நினைக்கவே சிலிர்க்கிறது. இப்படியான பல படங்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். காயத்ரி வெளியான அன்றே வெளியான படம். அது ரஜினி படம் என்பதால் இன்றும் நிலைத்து நிற்கிறது. இம்மாதிரியான படங்கள், மக்களின் நினைவில் இருந்தும் மறைந்திருக்கும், அந்த இயக்குநர் உட்பட, ஆனாலும் பாடல்களின் வழி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அவ்வகையில் இப்படம் ஒரு கலைஞருக்கு இன்றும் மறக்கமுடியாத படம், அவர் யாரென்பது பாடல் பகுதியில்.
அக் 07, 1977 அன்று வெளியான திரைப்படம். T.N.Balu என்பவர் இயக்கம். பாடல்கள் கண்ணதாசன், காமகோடியன் மற்றும் வாலி. ஸ்ரீப்ரியா, மனோரமா, VK ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர். காமெடிப்படமாக இருக்கலாம்.
ஓல்டெல்லாம் கோல்டு
|
P Suseela
|
Kannadasan
|
ஒரு கோடி
|
L.R Anajali, IR, AL
Ragavan
|
Kamakodiyan
|
காதல் மலர் தோட்டம் பார்
|
L R Easwari
|
Vaali
|
சின்ன நாக்கு
|
TMS
|
Kamakodiyan
|
சுசிலம்மா பாடிய பாடல். கிண்டல் பாடல், நன்றாக இருக்கிறது. நல்ல பதிவில் கிடைத்தால் கேட்க நன்றாக இருக்கும். Percussion and Sax interludes நன்றாக இருக்கு.
ஒரு கோடி:
இது மனோரமா ஆச்சி பாடி ஆடுவதாக அமைந்துள்லது படத்தில். பாடியவர் L.R.Anjali (L R Easwari’s sister?!) and MVDevan. இரு கூட்டம், தங்கள் கட்சியின் பெருமையை பேசிவதாக அமைந்த பாடல். கிடார் இடையிசையை கேளுங்கள், அருமை. www.youtube.com/watch?v=gtr0REcvdq4
இது மனோரமா ஆச்சி பாடி ஆடுவதாக அமைந்துள்லது படத்தில். பாடியவர் L.R.Anjali (L R Easwari’s sister?!) and MVDevan. இரு கூட்டம், தங்கள் கட்சியின் பெருமையை பேசிவதாக அமைந்த பாடல். கிடார் இடையிசையை கேளுங்கள், அருமை. www.youtube.com/watch?v=gtr0REcvdq4
காதல் மலர் தோட்டம் பார்:
இந்தப்பாடல் ஒரு கலைஞருக்கு மிகவும் மறக்கமுடியாத பாடலாக இருக்கும் என்றேன். L.R Easwari, அவர்களின் முதல் பாடல், ராஜா’வுக்கு. அவருக்கு ஏற்றப்பாடல், மெதுவாக அழுத்தமாக, க்ளப் குயின் வகையான பாடல். சரணம் சமீபத்தில் கேட்ட பாடலைப்போல இருக்கிறது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். www.youtube.com/watch?v=2aao_EN9udM Club Disco Genre'க்கு தேவையான அத்தனை கருவிகளும் ஒலிக்க இனிமையான பாடல்.
இந்தப்பாடல் ஒரு கலைஞருக்கு மிகவும் மறக்கமுடியாத பாடலாக இருக்கும் என்றேன். L.R Easwari, அவர்களின் முதல் பாடல், ராஜா’வுக்கு. அவருக்கு ஏற்றப்பாடல், மெதுவாக அழுத்தமாக, க்ளப் குயின் வகையான பாடல். சரணம் சமீபத்தில் கேட்ட பாடலைப்போல இருக்கிறது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
சின்ன நாக்கு சிமிழி
மூக்கு:
TMS, SPB, MVD பாடியிருக்கிறார்கள், ஆண்கள் குழந்தையை கையாளும் விதத்தை கேலியும் கிண்டலுமா சொல்கிறது பாடல். கேட்க நகைச்சுவையாக இருக்கிறது. ஆராரோ தாலேலோ வகை பாடல். www.youtube.com/watch?v=ZF6y5hInK94
TMS, SPB, MVD பாடியிருக்கிறார்கள், ஆண்கள் குழந்தையை கையாளும் விதத்தை கேலியும் கிண்டலுமா சொல்கிறது பாடல். கேட்க நகைச்சுவையாக இருக்கிறது. ஆராரோ தாலேலோ வகை பாடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக