அவர்
எனக்கே சொந்தம்.
77ல்
வெளிவந்த முதல் படம் இதுதான். வெளியான தேதி கிடைக்கவில்லை, அதனால தீபம் முந்திக்கொண்டது.
அவர் எனக்கே சொந்தம் 1.1.1977ல் வெளியான, ஜெய்சங்கர் நாயகனாக நடித்த, ராஜா’வின் 5வது
படம். இயக்கம், பட்டு. இது ஒரு மாறுதலான இசைத்தொகுப்பு ராஜாவுக்கு. தனித்து தெரியும் பாடல்கள், புதிய
முயற்சிகள் என இந்த தொகுப்பில் இடம்பிடித்த 6 பாடல்களை எழுதியது பஞ்சு.
தேவன்திருச்சபை மலர்களே
|
KJY
|
ப.அருணாச்சலம்
|
தேவன்திருச்சபை மலர்களே
|
Poorani
/ Indra
|
ப.அருணாச்சலம்
|
சுராங்கனி
சுராங்கனி
|
MVD,
Renuka
|
ப.அருணாச்சலம்
|
ஒரு
வீடு இரு உள்ளம்
|
SPB
|
ப.அருணாச்சலம்
|
தேனில்
ஆடும் ரோஜா
|
P.Suseela
|
ப.அருணாச்சலம்
|
குதிரையிலேநான் அமர்ந்தே
|
TMS
|
ப.அருணாச்சலம்
|
ராஜாவின்
முதல் பாடல், கிருத்துவ பிண்ணனியில் கிடார் strumming உடன் ஆலயமணி ஒலிக்க, அமைதியான
நடையில் குழந்தைகளின் பெருமையை அழகான வரிகளில் ப.அ எழுதியிருக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகள்
என சற்றே மேலெழும் பாடல் மீண்டும் அமைதியான நதியென நடந்துபோகிறது. ஆலயமணியும் கிடாரும்,
சீட்டியொலியும் அருமையான ஒரு சூழலை பதிவு செய்கிறது. தேவை கருதிய அமைதியும், குழந்தைகளுக்கான
தெளிவான சூழலும் மெட்டில் அமர்ந்து இனிமை சேர்க்கிறது. இதே மெட்டு, KJY பாடும் பாடலில்,
கிடார் முன்வந்து ஒலிக்கிறது. KJY குரலினிமையில் இரண்டு பிரதிகளும் அருமையான மெல்லிசை.
குழந்தைக்கு
பாடப்படும் மிகவும் இனிமையான பாடல். சுசிலம்மா குரலில் இன்றும் இனியாக ஒலிக்கிறது.
குழலும்(நரம்புக்கருவிகள்) யாழும் அருமையாக ஒலிக்கிறது, பாடல் முழுவதும். J பஞ்சுவின் எளிமையான வரிகளில் பாடல் உண்மையாகவே
தேன் தான். குழந்தைகளின் குதியாட்டத்தை ஒத்திருக்கிறது Prelude string works. :)
இதுவும்
குழந்தையிடம் பாடப்படும் பாடல், தத்துவ, சோகப்பாடலாக வருகிறது. நாயகன் தன் கையறுநிலை
வாழ்வின் வலிகளை குழந்தையிடம் முறையிட்டு பாடுகிறார். நினைப்பதொன்று நடப்பதொன்றென செல்லும்
வாழ்க்கையை படம் பிடிக்கிறது வரிகள். TMSக்கு இதெல்லாம் இயல்பான பாடல்.
இந்தியில்
பிரபலமான கபி கபி மேரே தில்மே பாடலை காமெடியான ஒரு சூழலில் VKRamasamy பாடுவது போல்
அமைந்திருக்கிறது. TMS பாடியிருக்கிறார். முதல் கேலிப்பாடல், காமெடிப்பாடல் எனும் வகையில்
முக்கியத்துவம் பெருகிறது. எப்பொழுது கேட்டாலும் மனம்விட்டு சிரிக்கலாம். J
SPBயின்
குரலில் இனிமையான பாடல். குடும்பச் சிக்கலை விவரித்துப்போகிறது வரிகள். படத்தில் மிகவும்
இன்றியமையாத பாடலாக இருக்கலாம். கதையோட்டத்தை பார்வையாளனுக்கு நகர்த்தும் வகையான பாடல்,
குழந்தைக்கு தந்தையால் பாடப்படுகிறது. நல்ல பாடல்.
சுராங்கனி
சுராங்கனி
குழந்தைகளுக்கான
படமோ என எண்ணவைக்கும் அளவிற்கு குழந்தைகளை முன்வைத்து பாடலும் அதற்கான சூழலும். அதற்குச்
சமனாக சுராங்கனி சுராங்கனி பாடல் கொண்டாட்டமாக ஒலிக்கிறது. 77ல் மிகவும் பிரபலமான பாடல்
என்றே கூட சொல்லலாம். மலேசியா விளையாடியிருக்கிறார். நமக்கு நன்கு அறிமுகமான மலேசியா’வின்
குரல்செறிவு இந்தப்பாடலில் தான் தெளிவாக இருக்கிறது. உடன் ரேனுகா பாடியிருக்கிறார்.
A.E Manoharan அவர்கள் தமிழ்/சிங்களத்தில் இசையமைத்து பாடிய பாடல், தமிழில் சுராங்கனி
சுராங்கனி மெட்டு மட்டும் ராஜா எடுத்தாண்டு தன் போக்கில் இசையமைத்தாராம். வரிகளும்,
மெட்டும் பட்டிதொட்டியெல்லாம் பரவி, பள்ளி கல்லூரிகளில் மிகவும் பிரபலமான பாடலாக
77 முழுவதும் வலம் வந்த பாடல். பல்லியம் அச்சொட்டாக அமைய, இப்பொழுது கேட்டாலும் எழுந்து
ஆடவைக்கிறது. https://www.youtube.com/watch?v=5lUFTMXNzPM
http://www.radiospathy.com/2010/09/ae.html கானா பிரபாவின் நேர்காணல், திரு மனோகரன் அவர்களுடன். :)
http://www.radiospathy.com/2010/09/ae.html கானா பிரபாவின் நேர்காணல், திரு மனோகரன் அவர்களுடன். :)
https://www.youtube.com/watch?v=UHh9cULl_10 முழுப்பட சுட்டி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக