படங்களை அறிமுகப்படுத்துவது
எளிது, படம் அறிமுகமான வரிசையில் இசைத்தொகுப்பை
அறிமுகப்படுத்தினால், வெளியான ஆண்டு ஒன்றெனில், படம் வெளியான ஆண்டு வேறாக இருக்கிறது. அவ்வகையில் இப்படப் பாடலில் சிறுகுழப்பம். சுஜாதா மேனன் பாடிய முதல் பாடல் இந்தப்படத்தில் தான், படம் திரைக்கு வர தாமதம். இப்படம் வெளியான போது ஸ்ரீதேவிக்கு வயது 14, பாடிய சுஜாதாவுக்கு 12 வயது என விக்கி சொல்கிறது. பாடல்களை பார்ப்போம்.
பட்டாபிராமன், இயக்குநர், முதன் முறையாக ராஜா’வுடன் கைகோர்க்க, நான்கு பாடல்கள்-எழுதியது பஞ்சு. இசைத்தொகுப்பின் சிறப்பு என்னவென்றால், தலைப்பிற்கேற்ப, இது நாயகியை முன்னிறுத்திய படம், அனைத்து பாட்களும் பெண்கள் பாடுவது. :)
காலைப் பனியில்
|
Sujatha M
|
PAC
|
ஆட்டம் கொண்டாட்டம்
|
P Suseela
|
PAC
|
உன்னத்தான் அழைக்கிறேன்
|
S Janaki / A.L Raghavan
|
PAC
|
வாழ்வே மாயமா
|
BS Sasireka
|
PAC
|
காலைப் பனியில்: Sujatha M
காலைத் பனிபோன்று குளுமையான, இளமையான, புதுமையான குரல். துவக்க குரலிசை (இதை கேட்கும்போது ஒரு பாடல் உங்கள் மனதில் அலைமோதும், என்னவென்று கருத்துரையில் சொல்லவும்) மெதுவாக ஆரம்பித்து, சட்டென நனநனநனநன்னா.. என ஒரு பெண்ணின் குறும்பை அருமையாக பதிவு செய்கிறது. நாயகியின் அறிமுக பாடல், பாடகிக்கு முதல் பாடல், அழகாக பாடியிருக்கிறார். குரலில் குழந்தைத்தனம் தெரிகிறது, நாயகியின் வயதை மனதில் கொண்டு இப்பாடலை பதிவுசெய்திருக்கலாம். வயலின் அருமையாக குரலை மேலுயர்த்தி, விரையும் குரலுக்கு வலுசேர்க்கிறது. இடையிசை வீணையும் வயலினும் அருமை.
வீட்டில நடக்கும் பார்ட்டியில்
பாடப்படும் பாடல், வாழ்வின் இன்பங்களை ஒரு பெண் மகிழ்ந்து பாடுவதான பாடல்.
Saxaphone மிகவும் அருமையாக ஒலிக்கும் முதல் இடையிசை. சுசிலம்மா பாடியிருக்கிறார்.
இவ்வகையான பாடல்களுக்கென ராஜா தனிமுத்திரை சேர்த்தார் பின்னாட்களில். இரண்டாவது
இடையிசையும் அருமையாக அமைய, இப்பாடல் நன்றாக இருக்கிறது.
இதுதான்
பார்ட்டி பாடலின் அனைத்து முத்திரைகளுடன் அமைந்திருக்கிறது. ஏன் ராஜா, ஜானகியம்மாவுக்கு
இவ்வகை பாடல்களை ஒதுக்கிவைத்தார் என்பதற்கு, இந்த பாடல்களையும் ஒருசோறு பதம். ஓட்டலில்
பாடப்படும் பாடல், மொத்த Jazz கருவிகளும் அலறியடித்து குத்தாட்டம் போடுகிறது. முதல்
இடையிசையை கேட்டு ஆடாமல் இருப்பது கடினம். மெட்டு நம்மை கொத்தாக கவர்ந்திழுக்க, சானகியும்,
ராஜாவும் நம்மை ஒரு குத்தாட்டும் போடும் வரை விடமாட்டார்கள் போல.
இங்கிருந்து
தான் அந்த படத்தின் பெயர் சென்றிருக்க வேண்டும். பாடல் சோகமான, ஏமாற்றப்பட்ட நாயகி,
மனமுடைந்து பாடும் பாடல். அம்மம்மா பசிக்குதம்மாவிற்கு அடுத்து சசிரேகவுக்கு இந்த சோகப்பாடல்.
நன்றாக பாடியிருக்கிறார். சட்டென நாவில் நிற்கும் சொற்கள், ஆழமான குரல் என சோகப்பாடலின்
தேவைகள் அச்சொட்டாக பொருந்திவந்திருக்கிறது இந்தப்பாடலில். அவளின் தனித்த மனவோட்டம்,
குறைவான இசைக்கருவிகளின் மூலம் வெளிப்படுகிறது.
சுஜாதாவின்
முதல் பாடல், அருமையான ஒரு Club Disco, ஒரு Pathos and நாயகியின் Solo Intro Song என
மாறுபட்ட சூழல் அமைந்த பாடல்கள், ராஜாவுக்கு வெற்றித்தொகுப்பாக அமைந்துவிட்டது. இந்தப்படத்தின் கதை சுஜாதா ரங்கராஜன்.
முழுப்பட சுட்டி: www.youtube.com/watch?v=wvRtaOoRm2o
Kalaipaniyil is one of my all time favorite song
பதிலளிநீக்கு