துணையிருப்பாள் மீனாட்சி
ராஜா’வின் குரல் முதன்முதலாக தமிழ்திரையிசையில், இடம்பெற்றபடம். தலைப்பிசையில் விநாயகனை புகழ்ந்து ஒரு குறுப்பாடல் பாடியுள்ளார். அற்புதம் என்ற கற்பகக் கனியே எனத்துவங்கும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான பாடல். மீண்டும் சிவக்குமார், சுஜாதா. வலம்புரி சேமனாதன் இயக்கம். பாடல்கள் அனைத்தும் பஞ்சு. பஞ்சுவின் பன்முக எழுத்தின் வீரியம் இந்த படத்தில் வெளிவந்திருக்கிறது. முதல் ஒரு நிமிடம், ராஜா’வின் குரலுக்காக. https://www.youtube.com/watch?v=OhdOhdBQARI
சேற்றில் ஒரு செங்கழுநீர்
|
TMS
/ SJ
|
PAC
|
அம்மம்மா
பசிக்குதம்மா
|
B
S Sasireka
|
PAC
|
சுகமோ
ஆயிரம்
|
P
Susheela
|
PAC
|
வார்த்தை
இல்லாமல்
|
P
Susheela
|
PAC
|
உண்மைக்கே
பிறப்பெடுத்தேன்
|
MVDevan
|
PAC
|
மிகவும் எளிமையான நடையில், இனிமையான
சந்தங்களுடன் TMS-SJ பாடிய இணைப்பாடல், செங்கழுநீர் – பாடலில் இடம்பெறுவது இதுதான்
முதன்முறை என நினைக்கிறேன்.
BS சசிரேகா அவர்களின் முதல்பாடல், ராஜாவுக்கு. குழந்தைகள் பசியில் பாடுவதாக அமைந்த பாடல். இணையத்தில் எங்கும் கிடைக்கவில்லை, சத்தமேகத்தில் ஏற்றி, சுட்டி இணைத்துள்ளேன்.
சுசிலம்மாவின் குரலில், தன் குழந்தைகளுடன்
நாயகி பாடுவதாக அமைந்த பாடல். குறைந்த அளவிலான கருவியிசை. நீரோட்டம் போல அமைதியாக செல்கிறது
பாடல்.
அம்மம்மா பசிக்குதம்மா: B S
Sasireka அவர்களின் முதல் பாடல். எங்குதேடியும் கிடைக்கவில்லை. அதனால் சத்தமேகத்தில்
ஏற்றியிருக்கிறேன். குழந்தைகள் பசித்துயரத்தில் பாடுவதாக அமைந்திருக்கிறது.
இசைத்தொகுப்பில் மிகவும் இனிமையான
பாடல். முதலிசையின் வீணை, உங்களுக்கு எந்த பாடலை நினைவுபடுத்துகிறது என கருத்துப்பெட்டியில்
சொல்லுங்கள். அருமையான Prelude, முன்பே சொன்னதுபோல், ராஜா’வின் பிடி இறுகுகிறது, துவக்கயிசையின்
மீது. சுசிலம்மாவின் குரலும் மிக அருமை. குழலும் வீணையும் இழைந்து இழைந்து பாடலை செழுமைபடுத்துகிறது.
உண்மைக்கே பிறப்பெடுத்தேன்:
அரிச்சந்திரன் வாழ்க்கையை படம் பிடிக்கிறது பாடல். மேடை நாடகத்திற்கான பாடல். வாசு மிக அருமையாக பாடியிருக்கிறார். மாறுபட்ட பாடல். தவறாமல் கேளுங்கள். https://www.youtube.com/watch?v=r1OxmoxwtAY
அரிச்சந்திரன் வாழ்க்கையை படம் பிடிக்கிறது பாடல். மேடை நாடகத்திற்கான பாடல். வாசு மிக அருமையாக பாடியிருக்கிறார். மாறுபட்ட பாடல். தவறாமல் கேளுங்கள்.
ராஜா’வின் குரலில் முதல் பாடல்,
மற்றும் BS Sarireka அவர்களின் முதல் பாடல் ராஜா’வுக்கு எனுமளவில் முக்கியமான படம்.
பாடல்களும் அருமை தான். ஆனால் இன்று நினைவில் இல்லாத பாடல்கள். இனி, சுகமோ ஆயிரம், சேற்றில் ஒரு செங்கழுநீர், அம்மம்மா பசிக்குதம்மா மற்றும் உண்மைக்கே பிறப்பெடுத்தேன் உங்கள்
நினைவில் இருக்கும். :)
"வார்த்தை இல்லாமல்" பாடல் மிகவும் பிடித்து விட்டுது :) நல்ல தரத்தில் ஆடியோ கிடைக்குமா ?
பதிலளிநீக்குShare your mail Id. I'll send it across. 😊
நீக்குWonderful work! My heartiest congrats and thanks
பதிலளிநீக்குநன்றி. :)
நீக்கு