1976- புதிய இசை, புதிய திசை, புது வரலாற்றின் வித்து தூவப்பட்ட ஆண்டு. இளையராஜா இசையமைத்த படங்கள் வெளியான தேதி வரிசையில்.
அன்னக்கிளி - மே 14, 1976
பாடல்கள் - 6
பாடகர்கள் - 3 - சானகி, சுசிலா, டி.எம்.சவுந்தரராஜன்
பாடல்கள் - பஞ்சு அருணாச்சலம்
இயக்குநர் - தேவராஜ் மோகன்
பாலூட்டி வளர்த்த கிளி - ஆக 20 1976
பாடல்கள் - 5
பாடகர்கள் - சானகி, சுசிலா, பாலு,
பாடல்கள் - கண்ணதாசன்
இயக்குநர் - ஏ.சி. திருலோகச்சந்தர்
உறவாடும் நெஞ்சம் - நவ 27 1976
பாடல்கள் - 4
பாடகர்கள் - 5 - மலேசியா வாசுதேவன், சானகி, பாலு, சுந்தரேச தேசிகர், லால்குடி சுவாமிநாதன், பேபி அனிதா
இயக்குநர் - தேவராஜ் மோகன்
பத்ரகாளி - டிச 10 1976
பாடல்கள் - 6
பாடகர்கள் - சானகி, சுசிலா, சீர்காழி கோவிந்தராஜன், ஏசுதாசு, மலேசியா வா, M R விசயா
பாடல்கள் - வாலி
இயக்குநர் - தேவராஜ் மோகன்
1976
படங்கள் - 4
பாடல்கள் - 17
பாடகர்கள் - 11
பாடலாசிரியர்கள் - 3
இயக்குநர்கள் - 2
அறிமுக இசையமைப்பாளருக்கு 4 படங்கள், அதுவும் ஆண்டின் பிற்பாதியில் வெளியானது அவர் மீது இயக்குநர்கள் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. பாடல்களின் தரத்திலும் வேறுபாட்டிலும் இளையராஜா, தன் வருகையை அழுத்தமாக பதிவு செய்த ஆண்டு. நாட்டார் வழக்கியல் இசை, கருநாடக மரபிசை, மேற்கத்திய செவ்வியல் இசையென பலதரப்பட்ட கூறுகளை கையாண்டு கேட்பவர்களின் மனதில் எளிதில் படியும் மெட்டுக்களில் அருமையான 17 பாடல்களை நமக்கு தந்து, அடுத்த எந்தப்படப் பாடல்கள் வெளியாகும் என ரசிகர்களை எதிரிபார்க்கவைத்திருக்கிறார். முதல் ஆண்டே வெற்றிகரமான ஆண்டு.
http://isaignanibakthan.blogspot.in/2013/05/1976.html இளையராஜா’வின் பேட்டி, 1976, பேசும் படம்.
http://isaignanibakthan.blogspot.in/2013/05/1976.html இளையராஜா’வின் பேட்டி, 1976, பேசும் படம்.
செம:-)) புதிய இசை ரசிகர்களும் அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.பாராட்டுக்கள்
பதிலளிநீக்குநன்றி, உங்கள் ட்விட்டர் பகிர்வு, பலரை சென்றடைந்திருக்கிறது. :))
நீக்கு