முதல் வெற்றியை தக்கவைக்கத் தவறிய இசைக்குழுக்களை ஆங்கிலத்தில் One Hit Wonders என்பர். அப்படியான ஒரு சூழல் கலைத்துறையில் மிகவும் அதிகம். ஆயிரமாயிரம் கனவுகளுடன் மின்னி, நொடிப்பொழுதில் மறைந்தும் போகின்றனர். அவ்வாறன்றி, ராஜா தன் இரண்டாவது படத்தில் வெற்றிகரமான, அனைத்து தரப்பினரையும் கவரும் பாடல்களை வழங்கி, Variety is also his forte என்று நிறுவினார்.
பத்திரக்காளி A.C.திருலோகச்சந்தர் அவர்களின் சொந்த தயாரிப்பு. மிகப்பெரிய இயக்குனர், ராஜாவை நம்பி இந்த படத்தை அளித்தது, பொருளாதார காரணங்களுக்காக இருக்கலாம். அன்னக்கிளி பாடல்கள் வெற்றி, அதே வேளையில் ராஜா புது இசை அமைப்பாளர். குறைந்த ஊதியம். ஆனால் பாடல்களோ, இன்றளவும் கேட்கப்படும் செவ்வியல்(Classics) வகையில் சேர்ந்துவிட்டது.
பத்திரகாளி ஒரு referential thematic subjectஆக இருக்க வேண்டும். ஏனெனில் பத்திரகாளியின் இயல்புகள் பாடல்களில் பதியப்பட்டிருக்கு. இந்த தொகுப்பும், பெண்மையின் இயல்புகளை எடுத்துரைக்கிறது, மேலும் கதைக்களன் பிராமண குடும்பம். நாட்டுப்புற செவ்வியலில் இருந்து ஒரே பாய்ச்சலில் கருநாடக செவ்வியலுக்கு வந்து அதிலும் வெற்றிகண்டு இனிமையான பாடல்களை வழங்கியிருக்கிறார். வாலியின் முதல் படம் ராஜாவுடன். IR+Vaali வெற்றிக்கூட்டணியின் துவக்கம் இப்படம். :)
கண்ணன் ஒரு கைக்குழந்தை | K.J.Yesudas / P.Susheela | வாலி |
கேட்டேளே அங்கே | P.Susheela / Gayathri | வாலி |
ஆனந்தபைரவி அகிலாண்ட நாயகி | M.R.Vijaya / Chorus | வாலி |
ஓடுகின்றாள் | Seerkaazhi Govindarajan | வாலி |
ஒத்த ரூபா உனக்கு தாரேன் | Malaysia Vasudevan / S.Janaki | வாலி |
மய்ய இசை (Theme Music) | Instrumental |
கண்ணன் ஒரு கைக்குழந்தை:
அழகான தந்தியிசையுடன் மகிழ்ச்சியான சூழலை துவக்கி, சுசிலாம்மா கண்ணன் ஒரு கைக்குழந்தை என ஆரம்பிக்க, ராஜாவின் புல்லாங்குழல் இங்கு சற்றே செழுமையடைந்து முதல் இடையிசையை நீட்டிக்க KJY இணைகிறார். கணவன்+மனைவி வாழ்வியல் இன்பத்தில் குழந்தையை முன்னிறுத்தி பாட, இரண்டாம் இடையிசை அழகான வீணையிசையில் லயிக்க வைக்கிறது. ஆராரோ ஆராரிரோ என இருவரும் குழந்தையை தூங்கவைத்து முடிக்க.. இன்றும் இல்லற வாழ்வின் இன்பச்சூழலுக்கு இப்பாடல் அழகாக பொருந்துகிறது.
குழலிசையின் தெளிவு எனக்கு இந்தப்பாடலில் மிகவும் பிடித்த ஒரு கூறு. மற்றும் KJY+IRன் முதல் தமிழ் பாடல். :) https://www.youtube.com/watch?v=IRMy50RggbY
கேட்டேளே அங்கே:
தாள அமைப்பிலும் மெட்டமைப்பிலும் மச்சானை பாத்தீங்களாவை எட்டிப்பிடித்து அதே நேரத்தில் மடிசார் மாமியின் எல்லைக்குள் sophesticated'ஆக ஒலிக்கிறது. கிடார் மெலிதாக கைகோர்க்க, செனாய் இடையிசையில் பின்னுகிறது. பிராமண வீட்டில் பறை அதிர்வுடன் ஆரம்பிக்கிறது பாடல். பாடல் முழுவதும் அதே தாளக்கட்டு. கலகக்காரன். https://www.youtube.com/watch?v=fRFWLGJtD9o
ராஜா’வின் எண்ணவோட்டம் இங்கு பிரமிப்பை தருகிறது. அன்னக்கிளியில் அனைத்தும் பாடல்களும் SJவின் ஆட்சி, இங்கோ, சுசிலாம்மா. அந்த நாட்டுப்புற சாயலை கவனமாக தவிர்த்து, ஒரோ பாடலை மட்டும் சானகிக்கு அளித்திருக்கிறார். சுசிலாம்மா குரலில் ரெக்கார்ட்டேன்சே நடக்கிறது. :) தெலுகில் ஜெயப்ரதா ஆடும் அழகு!!
https://www.youtube.com/watch?v=FMrbWp5bLo4
https://www.youtube.com/watch?v=FMrbWp5bLo4
ஆனந்தபைரவி அகிலாண்டநாயகி:
கதகலாட்சேப மேடையிசை வடிவம். பைரவியின் பெருமைகளை பாடுகிறது. ஆரம்பிக்கும் வேகமும், பாடல் முழுவதும் நிறைந்து நிற்கும் தாளக்கட்டும், பெண் பாட, ஆண் சேர்ந்திதை வழங்கும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். களத்துமேட்டில் இருந்து கச்சேரி மேடைக்கு தாவல், இரண்டாம் படத்திலேயே. இனிவரும் கருநாடகயிசை அமைப்பிலான பாடல்களின் முதல் முயற்சி இது தான். அதானாலோ என்னமோ அதிகம் பிடித்துப்போனது. MR Vijaya, மேடையிசையின் நுணுக்கங்களை தெளியா எடுத்தாண்டு, பிராமண முத்திரைகளை பதிக்கிறார்.
நமக்கு வெளியில் தெரியும் பாடல்களை விட இவ்வகையான பாடல்கள் தான் இயக்குநர்களுக்கு படத்தை முன்னெடுத்து செல்ல மிகவும் பயன்படுகிறது. இவ்வகையான fillers வகையாறாவில் கொட்டிக்கிடக்கும் முத்துக்கள் தான் ஒரு தேர்ந்த இசையமைப்பாளரை நமக்கு அடையாளம் காட்டுகிறது.
https://www.youtube.com/watch?v=gjEyT0lG5BM
https://www.youtube.com/watch?v=gjEyT0lG5BM
ஓடுகின்றாள்:
சீர்காழியாரின் முதல் பாடல், ராஜாவுக்கு. ஒரு விரக்தியான சூழலில் பாடப்படுகிறது. எப்படி ஒரு அமைதியான பெண் பத்திரகாளியாகிறாள்.. பித்துபிடித்து ஆடுகிறாள் என விரிவான வரிகளில் வாலி எழுதியிருக்கிறார். சீர்காழியாரின் குரல் மிகவும் பிடித்தமான ஒன்று. சூழலுக்கு தேவையான அழுத்தத்தை வழங்குகிறது. பின்னாளில் மலேசியா வாசுதேவனுக்கான பாடல்களை இப்பொழுது பாடிவைக்கிறார். இப்பாடலில் வரும் பெண் ஜென்மம் எனும் சொல் பின்னாளில் படத்தலைப்பாக அமைந்தது. அதற்கும் இசை ராஜா தான்.
https://www.youtube.com/watch?v=kjkKYmlGKB4
https://www.youtube.com/watch?v=kjkKYmlGKB4
ஒத்தரூபா:
நையாண்டி நாட்டுப்புற மெட்டில் மலேசியாவின் முதல் பாடல், ராஜாவுக்கு. சானகி சேர்ந்து கொள்ள, துள்ளலான பாடல். ஒத்தரூபா தாரேன் என பின்னாளில் ஒரு பாடலும் வந்தது. சரணங்களின் melodic signature moves away from the folkish pallavi. பாவங்களில் மலேசியா நாடகமே நடத்துகிறார், TMS சாயலும் இருக்கிறது. இவ்வகை பாடல்கள் பின்னாளில் வேறுவகையான செறிவில் வந்தது, முக்கிய காரணம் தனித்துவத்தை தக்கவைப்பதும், 70களின் வாடையற்று இருக்க அவரெடுத்த முயற்சிகளும் தான்.
https://www.youtube.com/watch?v=k-DVzWX8RAY
https://www.youtube.com/watch?v=IKD6NicmB5E Check out the Prelude, the drum that mimicing her walking style and the flute joins the party. :)))
https://www.youtube.com/watch?v=k-DVzWX8RAY
https://www.youtube.com/watch?v=IKD6NicmB5E Check out the Prelude, the drum that mimicing her walking style and the flute joins the party. :)))
இரண்டாவது இசை தொகுப்பும் மிகப்பெரிய வெற்றி. பாடல்கள் இன்றளவும் மக்களின் நினைவில் இருக்கும்வகையில் அமைந்தவை. நாட்டுப்புற கூட்டிசையில்(folk fusion) ஆரம்ப்பித்து, இந்த படத்தில் கருநாடக இசையை consolidate செய்து, தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இசைத்தொகுப்பு எனும் வகையில் இது ஒரு முக்கியமான படம் ராஜாவுக்கு.
https://www.youtube.com/watch?v=rlgD_FH97DM தலைப்பிசை / மய்ய இசை.
https://www.youtube.com/watch?v=rlgD_FH97DM தலைப்பிசை / மய்ய இசை.
Just a slight rejoinder. The Otha Rooba song has an outstanding prelude in flute to boot. Pristine Desh ragam uncovering Tamil folk https://www.youtube.com/watch?v=IKD6NicmB5E
பதிலளிநீக்குThanks Venkat. Moving it to the blog. :)
பதிலளிநீக்கு