இதுவரை வெளியான ஆறு படங்களின் இசையை கேட்கும் பலருக்கும் ராஜா ஒரு மாற்றத்தை முன்னெடுக்க முயல்வது, அதற்கான தடத்தை பதிக்க எத்தனிப்பது புரியும். இதோடு ராஜா’வின் இசை நின்றுபோயிருந்தாலும், வரும்காலம் அவரை, தனித்து தெரிந்த ஓரிரு முயற்சிகளுக்காக பாராட்டியிருக்கலாம். அல்லது மறந்தும் போயிருக்கலாம்.
ஆனால் ராஜா ஒரு தீவிரமான மாணவர். அவர் கர்நாடக மரபிசை பயின்ற தீவிரம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். நள்ளிரவு வரை பாடல் பதிவுகளை முடித்துவிட்டு காலை 4மணிக்கு T V Gopalakirshnan http://en.wikipedia.org/wiki/T._V._Gopalakrishnan அவர்களின் வீட்டில் இருப்பாராம். காலையில் தவறவிட்டால் மாலையில் ஆரம்பித்து அதிகாலை 1மணி வரை வகுப்பு நடைபெறுமாம். இதை இங்கு சொல்லும் தேவை என்னவென்றால், கர்நாடக மரபிசை ராஜா’வின் தனித்த அடையாளமாகியது. ராகத்தின் எந்தஒரு பகுதியையும் எடுத்து அற்புதமான பாடல்களை உருவாக்கும் ரசவாதியாகிப்போனார். அதோடு, கர்நாடக இசை விற்பன்னர்களுக்கும், ராஜா’வுக்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு உருவாகிப்போனது, இந்த படத்திலிருந்து.
சில ராகங்கள் பொதுவெளியில் அனைவருக்கும் தெரியும் வண்ணம், பாடலோடு சேர்த்து ராகமும் அறியப்படும் வகையிலான பாடல்களை நமக்களித்திருக்கிறார். அதன் துவக்கம்- கவிக்குயில். இந்த பாடலை அறியாத கடந்த தலைமுறையே இருக்காது எனலாம். இந்த படம் தான் ராஜா’வின் இடத்தை தமிழ்த்திரையிசை உலகில் உறுதிப்படுத்தியது. நாம் இன்று வியந்து ரசிக்கும் ராஜா has arrived in this movie.
இசையமைப்பில் ராஜா’வின் முத்திரையென நாம் கருதும் பல கூறுகளை இந்த படத்தின் பாடல்களில் கையாண்டார். இன்றும் இனிமையாக அவை நம்மை மகிழ்விக்கும் காரணம், அதன் உயிர்ப்பு. நம் உள்ளே ஆடும் இசையுடன் அவர் ஏற்படுத்தும் தொடர்பு, நாமும் அந்த இசையனுபவத்தின் அங்கமாகிறோம். ராஜா அடிக்கடி சொல்லும் alpharythm, எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கும் இசைதுடிப்புடன் அவர் ஏற்படுத்தும் தொடர்பு தான், நம்மை அந்த இசையை வெகுவாக ரசிக்க வைக்கிறது.
அவ்வாறான ஒரு பாடல், ஒரு கருத்தியல் இந்த படத்தில் பாடலாக பரிணமிக்கிறது. நாயகியின் மனதிலிருக்கும் இசையை, ராகத்தை, மெட்டை, நாயகன் உள்ளுணர்ந்து, அதை குழலிசையாக வழியவிடுகிறான். அந்த நாயகன் தான் ராஜா, நாம் தான் அந்த நாயகி. நம்மிருவரின்(ராஜா+நாம்) நெஞ்சின் உள்ளாடும் ராகம் தான் ராஜாவின் இசை. இந்த AlphaRythm கருத்தியலை ராஜா பலமேடைகளில் சொல்லியிருக்கிறார். எல்லோருள்ளும் ஒரு இசை ஓடிக்கொண்டே இருக்கிறாது, நான் அந்த இசையை தொடுகிறேன், பேசுகிறேன், அழுகிறேன், அழவைக்கிறேன் என்று.
_____________________
கவிக்குயில் July 29, 1977 அன்று வெளியானது. தேவராஜ் மோகன், ராஜா இணைந்த மூன்றாவது படம். வழமையாக அனைத்து பாடல்களையும் பஞ்சு எழுத, படத்தில் 6 பாடல்கள். ராஜா இசையில் முதன்முறையாக M.Balamurali Krishna அவர்கள் பாடினார். காலத்தால் அழியாத பாடல். கவிக்குயில் நடிகை Srideviன் இரண்டாம் படம். நடிகர் சிவக்குமாரின் மூன்றாவது படம், ராஜா இசையில்.
சின்னக்கண்ணன்
அழைக்கிறான்
|
M.BalaMuraliKrishna
|
PANJU ARUNACHALAM
|
சின்னகண்ணன்
அழைக்கிறான்
|
S Janaki
|
PAC
|
குயிலே
கவிக்குயிலே
|
S Janaki
|
PAC
|
காதல்
ஓவியம் கண்டேன்
|
Sujatha
|
PAC
|
ஆயிரம்
கோடி
|
M.BalaMuraliKrishna
|
PAC
|
மானோடும்
பாதையிலே
|
P.Susheela
|
PAC
|
உதயம் வருகின்றதே
|
SJ
|
PAC
|
சின்னக்கண்ணன் அழைக்கிறான்:
ராஜா’வின் முதல் முத்திரை Instrumental Prelude, இதற்கும் முன்பான பாடல்களில் தனித்து நிற்கும் துவக்கயிசை அதிகமில்லை. அந்த போக்கை, இப்பாடல் மாற்றியது. அந்தக்குழலிசை நமை நேரடியாக இசைவெளிக்குள் இழுத்துக்கொள்ள, அடுத்து யாழ்(String section) நம் துள்ளலை கூட்டுகிறது, அந்த குழல் தரும் பரவசத்தை நிரவுகிறது, அதிசயிக்க நமக்கு ஒரு கணத்தை அளிக்கிறது, மீண்டும் குழல் நமை அணைக்கும் அந்நொடி, பாலமுரளி கிருஷ்ணாவின் குரல், கம்பீரமாக அந்த ராகத்தை வேறுதளத்திற்கு எடுத்துச்செல்கிறது. குழலும், யாழும் தீண்டிச், சீண்டி, ஒரு பெரும்விளையாட்டை நிகழ்த்துகிறது. குழலின் இனிமையை கேட்டு குதிக்கும் நாயகின் மகிழ்வான மனவோட்டத்தை நரம்பிசை சரியாக வெளிப்படுத்துகிறது! மகிழும் அவளை மீண்டும் கொண்டாட்டத்தில் தள்ளுகிறான் நாயகன், தன்குழலிசையில். குழல் - காற்று, நம் அடிப்படை. வேறெந்த கருவியையும் விட அது நமக்கு மிகநெருக்கமாக தோன்றும், அதை மய்யமாக கொண்ட பாடல்களும் நமை எளிதில் ஆட்கொள்ளும் தன்மையது. இந்தப்பாடல் அடுத்த நூற்றாண்டிலும் கேட்கப்படும். அதன் எளிமை, இனிமை, புதுமை என்றும் போற்றப்படும். உலகை மயக்கிய அந்தப்பாடல்: https://soundcloud.com/sudhakar-john/chinnakannan

பாடலின் எளிமையையும், மேன்மையையும்
இங்கே சொல்லியாக வேண்டும். பஞ்சு ஒரு அருமையான பாடலாசிரியர்.
சரணம்:1
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம்வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்கு
பெருமை
சரணம்:2
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா..
அழகே இளமை ரதமே
அந்த மாயனில் லீலையில் மயங்குது
உலகும்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!!!
ஆயிரம் படங்களுக்கு பின்பும் ராஜா’வின்
மரியாதை கலந்த அன்பும், பாலமுரளி ஐய்யாவின் குரலும் அப்படியே இருக்கிறது, ராஜா, அவரை
அழைக்கும் விதமே அதை நமக்கு உணர்த்துகிறது இந்தச்சுட்டியில், பார்த்து மகிழுங்கள்.
https://www.youtube.com/watch?v=EcUI2YTv5CM
இந்தப்பாடலை எழுதப்புகுந்தால்,
நேரம்போதாது. நான் சொல்வதை விட, நீங்களே மீண்டும் மீண்டும் கேட்டு மகிழுங்கள், காலம்
உறைந்து போகும், ராஜாவின் இசைவெளியில். எல்லோருக்கும் தெரிந்த செய்திதான், ரீதிகௌளை ராகத்தின் அமைந்த பாடல் இது. http://dhinakarrajaram.blogspot.in/2011/10/blog-post_23.html
சின்னக்கண்ணன் அழைக்கிறான்:
இது திருமண துவக்கயிசையுடன் ஆரம்பிக்கிறது,
SJயின் சோகம் ததும்பும் குரலில், ஒரே மெட்டு. எப்படி இருவேறு உணர்வுகளை நமக்களிக்கிறது
என இப்பாடலில் கண்டறியலாம். மகிழ்வான தருணங்களை நம்முடன் பகிர்ந்தவர்களின் பிரிவு,
அதே தருணங்களின் மீது ஒரு வலியை தீட்டுவது போன்று இப்பாடல், வயலினில் தீவிரத்தை கூட்டி,
வலியை உணர்த்துகிறது. அந்த அழகிய கனாக்காலத்தின் ஒரு நினைவிழையென குழலிசையை ஒருநொடி
இசைத்து, அவள் பிரிவின் வெறுமையை உணர்த்துகிறார் ராஜா.
குயிலே கவிக்குயிலே:
இயற்கையுடன், குயில்களுடன் பேசிப்பாடும்
நாயகி, தன் எண்ணவோட்டத்தை பகிர்ந்துகொள்ளும் பாடல். நாயகின் அறிமுகப்பாடலாக இருக்கலாம்.
சானகியின் இனிமையான குரலில்.. இந்தப்பாடலின் மிகவும் அதிசயத்தக்க ஒரு கூறென்றால்..
குயிலே… அவரை வரச்சொல்லடி… என சானகி முடிக்கும்பொழுது, சரணம் முடிந்ததென நாமும் இடையிசைக்கு
தாவத்துடிகும் கணத்தில், இதுமோகனம் பாடிடும் பெண்மை என மீண்டும் சானகி துவங்க.. இதுதான்
ராஜா’வின் இசையுலகம். அந்த golden glimpse or the ahaa moment. நம்பமுடியாமல் நாம்
தலையசைத்து அவரின் இசையாறு இழுத்துச்செல்லும் சிறுதுரும்பென மாறிவிடுகிறோம். https://www.youtube.com/watch?v=jPGddm9VBaQ
காதல் ஓவியம் கண்டேன்.:
பாடகி சுஜாதா அவர்களின் இரண்டாவது பாடல். இந்த இசைத்தொகுப்பில் இதுதான் மிகவும் பிடித்த பாடல் எனக்கூறும் நண்பர்கள் எனக்குண்டு. காதலில் விழுந்த ஒரு பெண், மிகவும் ஆற அமர பாடும் laidback, relaxed பாடல். இந்தப்பாடல் மிகவும் முக்கியமான ஒரு பாடல், ராஜா இசையில் நேர்ந்திசை, வந்த முதல்பாடல். முதல் இடையிசையில் அந்த அதிசயம் நிகழ்கிறது. வயலினா, குரலா என மயங்குமளவிற்கு மெல்லிதாக ஒலிக்கிறது, தாளவாத்தியங்கள் அருமையாக துணைக்கு வர, ஒரு 5seconds தான் வருகிறது அந்த குரலிசை. முதல் சரணம் முடிந்த பின்பும் அந்த குரலிசை வருகிறது. இதுதான் ராஜா ChoralMusic முதலில் பயன்படுத்திய பாடல். Very Primitive and momentary. ஆனாலும், harbinger, about the future ahead. https://www.youtube.com/watch?v=IZ0Nc1smXj0

ஆயிரம் கோடி:
பாலமுரளி அவர்கள் பாடிய மற்றொரு பாடல், பக்திப்பாடலின் கூறுகள் சரிவர அமைந்திருக்கிறது. அவரின் குரல் காந்தம். எப்பொழுதும் ரசிக்கலாம். https://www.youtube.com/watch?v=BIKggBnyIFk
பாலமுரளி அவர்கள் பாடிய மற்றொரு பாடல், பக்திப்பாடலின் கூறுகள் சரிவர அமைந்திருக்கிறது. அவரின் குரல் காந்தம். எப்பொழுதும் ரசிக்கலாம்.
இது ஒரு வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த பாடல். சுட்டியை சொடுக்கினால் உங்களுக்கு புரியும், ரஜினி’யின் முதல் படம்,
ராஜாவுடன். திரையில், ராஜா இசையில் ரஜினி தோன்றும் முதல் பாடல் இது. படாபட் அவர்கள்
பாடியாடும் பாடல். ரஜினியின் இணை அவர்தான் இந்தப்படத்தில். ரஜினிக்கு காலம் பின்னோக்கி
நகர்ந்திருக்கிறது வாழ்வில். மிகவும் ஈர்ப்பான மெட்டு. J
உதயம் வருகின்றதே:
இது ஒரு அடுக்குப்(Layered) பாடல்,
மாட்டுவண்டி ஓடும் பிண்ணனியில் நாட்டுப்புற பாடலாக துவங்குகிறது. மானத்திலே மீனிருக்க..
என ஆரம்பிக்கும் வரிகள், அதிகாலை சந்தைக்கு செல்லும் மாட்டுவண்டியை அறிமுகப்படுத்தி,
பின்பு நாயகியின் மனப்போக்கை சொல்கிறது. விடிகிறது, மலர்கள் மலர்கிறது.. நாயகன் வரவில்லை.
தனிமையின் வலியை சொல்லும் பாடலை சானகி பாடியிருக்கிறார். கருவியிசைக்கு அதிக வேலையின்றி,
மெட்டின் உணர்வில் கவனம் வைத்து பின்னப்பட்ட பாடல். https://www.youtube.com/watch?v=QpkScBknqyg
கவிக்குயில். பெயருக்கேற்ப, அருமையான
இசைத்தொகுப்பு. ராஜா’வின் ஆட்சியை நிலைநிறுத்திய தொகுப்பு. முழுப்படத்தையும் இங்கு
காணலாம்.
சூப்பர்,தொடர்ந்து கலக்குங்க-வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு"தபேலாவில் தவழும் விரல்கள் விடுபடும் இடைவெளிகளை, கிடாரால் கோர்த்து ஒரே சரமாக கொண்டு செல்வார் இளையராஜா" - சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடலுக்கான யுடியுப் காணொளியில் ஒரு பின்னூட்டம்.
பதிலளிநீக்குரசிகர்கள் மீதான ராஜாவின் நம்பிக்கை அசாத்தியமானது. என் இசையோடு அவர்களும் பயணிப்பார்கள் என்ற உரிமை தான் அவரது இசையின் தரம். :))
நீக்கு"காதல் ஓவியம் கண்டேன்" எனக்கு மிகவும் பிடித்த பாடல். :)
பதிலளிநீக்கு