உறவாடும் நெஞ்சம் - தேவராஜ் மோகன் + ராஜா கூட்டணியின் அடுத்த படம். 3 பாடல்களை ப.அருணாச்சலம் எழுத, ஆண்டாளின் திருப்பாவை தொகுப்பிலிருந்து, மார்கழித் திங்கள் மற்றும் பூமணி மாடத்தில் பாடல்களுக்கு இசைவடிவம் அளித்திருக்கிறார் ராஜா. இது ஒரு தொடர் முயற்சியாக பல படங்களில் இன்று வரை காண்கிறோம். பக்தி இலக்கியத்துடனான ராஜாவின் காதல் இங்கிருந்தே ஆரம்பித்துவிட்டது.
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
SPB/SJ ப. அருணாச்சலம்
நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே
SPB/SJ ப. அருணாச்சலம்
டியர் அங்கிள்
MV/Baby Anita ப. அருணாச்சலம்
மார்கழித் திங்கள்
Sundaresa Desikar / Lalgudi Swaminathan ஆண்டாள்
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்:
SJயின் குரலினிமையில் பல்லவி அப்படியே மனதில் அமர்கிறது. இடையிசையும் சிறிதுநேரம் தான், வயலின் மெல்ல எட்டிப்பார்க்கிறது உடனே SPB சேர்கிறார். ப.அ பாடல் வரிகள் ஏனோ மிகவும் எளிதில் மனதில் இறங்கும் தன்மையது. கவித்துவ ஆடம்பரங்களின்றி, அழகான எளிதான தமிழில் எழுதுவார். பாலுவின் குரல் தெளிவாக ஒலிக்க, டூயட்களின் இயங்குவிதிகள் பிடிபடுகிறது ராஜாவுக்கு. இன்னமும் அந்த மெல்லிய டூயட்டுகள் தான். SJ Contraltoவிலும் SPB- Countertenorலுமே இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்கிறார் ராஜா. அருமையான மெல்லடி..மெலடி :) https://www.youtube.com/watch?v=j1JZugklXNo
நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே:
இந்தப்பாடலின் dynamics எனக்கு மிகவும் விருப்பமாயிட்டு. ஏன்னு தெரியாத அந்த மாயவித்தையை இங்கே ஆரம்பித்து விட்டார் ராசா. இதை அலசவும் விருப்பமில்லை. அப்படியே கேட்டு கேட்டு ஆழ்ந்துபோவது வழக்கம். பல்லவியிலே அடித்து வீழ்த்தும் வித்தையை ராஜா ஆரம்பித்துவிட்டார். இன்னும் நீளாதோ எனுமளவுக்கு சிறிய பாடல். பாடலின் குதுகலம்.. சானகியின் லல்லலா...வாவ். SPB's grip is tightening on his form and the dramatics. :) Signature Smile. https://soundcloud.com/isai-s-d/nenachathellam-nadakapora
டியர் அங்கிள்:
குழந்தையின் ஆங்கிலப்பாடலை தொடந்து மலேசியா வா.தே பாடும் குறும்பாடல். குழந்தைகளின் பெருமையை பாடுது. மெல்லிய சோகத்தீற்றல்.
https://soundcloud.com/balaji-sankara-saravanan-v/dear-uncle
https://soundcloud.com/balaji-sankara-saravanan-v/dear-uncle
மார்கழித் திங்கள்:
ஆண்டாளின் பாடல், ஆண்களின் குரலில் ஒலிக்கிறது. பாடிவர்கள் ஓதுவார்களா, அரையர்களா என மெல்லிய சந்தேகம். பாரம்பரியமாக இந்த மெட்டில் தான் பாடப்படுகிறதா என்பதும் தெரியவில்லை. ஆனாலும் தெளிவான பதிவு.
https://soundcloud.com/balaji-sankara-saravanan-v/maargazhi-thingal
https://soundcloud.com/balaji-sankara-saravanan-v/maargazhi-thingal
இரண்டு பாடல்கள். என்றும் இனியவை பட்டியலில் சேர்ந்துவிட்டது. நான் நெனச்சதெல்லாம் நடக்கப்போற பாடலை சுழற்சியில் விடும் நேரமாயிற்று. என்ன ஒரு கொண்டாட்டமான பாடல்!! :))
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் - ராஜாவை ட்ரம்ஸ் மணி பேட்டி எடுக்கும்போது... ராஜாவே இந்தப்பாடலை நினைவுகூருவார். அட்டகாசமான் ட்ரம்ஸ் பீட் பின்னனியில் கொண்ட அருமையான டூயட் பாடல்!
பதிலளிநீக்கு