சூலை 14, 1978 அன்று வெளியான படம். இயக்கம் T Balu. பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன். அப்பொழுது மிகவும் பிரபலமான பாடல்கள், இன்றுவரை அதன் வீரியம் குறையவில்லை. கமல் தனி நாயகனாக நடித்து, ராஜா இசையில் வந்த முதல் படம். அந்த துள்ளல் பாடல்களில் தெளிவாக தெரிகிறது. :)
ஆழக்கடலில் தேடிய
|
Malaysia Vasudevan / S.Janaki
|
Kannadasan
|
ஒரே இடம்
|
P.Susheela
|
Kannadasan
|
சொர்கம் மதுவிலே
|
S.P.Balasubramaniam / Chorus
|
Kannadasan
|
கடைதேங்காயோ
|
Malaysia Vasudevan / Chorus
|
Kannadasan
|
மேரா நாமு அப்துல்லா
|
Malaysia Vasudevan / Kovai Murali / |
Kannadasan
|
ஆழக்கடலில் | Azhakadalil – MVD, SJ
ஆழக்கடலில்
தேடிய முத்து, முதல் வரியே சொல்லும், இது தாலாட்டு பாடல்.
அம்மாவும்
அப்பாவும் சேர்ந்து பாடுகின்றனர். அதற்கேற்ற மெல்லிய இசை. பாடல் கேட்க அமைதியாக, அருமையாக
இருக்கிறது. இரண்டாம் சரணத்தில் வாசு சேர, தாலாட்டு முழுமையடைகிறது.
ஒரே இடம் | Ore Idam – P Suseela
வேறுபாட்டிற்காக
சொல்லவில்லை, இந்த தொகுப்பில் மனதில் சொல்லவியலா ஒருவித உணர்வை கிளர்த்தியது இந்தப்பாடல்
தான். மகிழ்வான பாடல், இருந்தும் குளத்தின் ஆழத்தில் உறங்கும் இருளென ஒருவித சோகம்,
கருவிகளும் ஒரு withheld நிலையிலே வாசிக்கிறது. அந்த சோகம், மனதில் வெளிர்வெயிலென மெதுவாக
இறங்குகிறது. படத்தில் என்ன சூழலில் வருகிறது என தெரியவில்லை. சோகத்தை, சுசிலம்மா மிகச்சரியாக
பிரதிபலிக்கிறார். வரிகளின் வழியே சென்றால், காதலி, பெண் பித்தனான தன் காதலனை நோக்கி
பாடும் வகையில் அமைந்துள்ளது. சோகத்தைவிட சிறந்த போதை எது? 1:06minutes
சொர்கம் மதுவிலே | Sorgam Madhuvile SPB
இன்பம்
உறவுதான்.. இந்தப்பாடலை அறியாத இன்றைய தலைமுறை கூட இல்லை எனலாம். நல்லதரத்தில் கேட்டால்,
பாடல் முழுவதும் பின்னால் ஒலிக்கும் baseguitar கேட்க்கிறது. HD சுட்டியில் படத்தில்
41வது நிமிடத்தில் வருகிறது.
Raja
stoned himslelf before composing this one I think. என்னா வேலப்பாடு is the only word. J
Writing this on a Saturday night, could there be any better song for an
absolutely blasting weekend!! ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேனுக்கு அடுத்து, மக்களின் போதையை
கட்டவித்த பாடல் இதுதான் எனலாம். ஒரு நொடி தொய்வின்றி, அதகளம் செய்கிறார்.
கட தேங்காயோ | Kada Thengayo MVD
இயல்பான
குழுப்பாடல். கேட்க நன்றாக இருக்கிறது.
மேரா நாமு அப்துல்லா | Mera Namu MVD
ஒரே இடம்
பாடலுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பாடல். இத்தகைய மாறுபட்ட சூழலுக்கு மெட்டமைப்பதில்
தான் ஒரு இசையமைப்பாளரின் திறன் வெளிப்படும். குரல், சேர்ந்திசை, குறும்பு கொப்பளிக்கும் வரிகள் மொத்த கட்டமைப்பும் அருமை. காமெடி பாடல் தான், அதில் ராஜா நிகழ்த்தியிருக்கும்
கொண்டாட்டம் மிகவும் பிடித்தது. இன்றைய சூழலில், திருநங்கைகளை இழிவுபடுத்தும் பாடல்
என பல கோணங்களில் வசைபாட வாய்ப்புள்ள பாடல், வரிகளை மாற்றி எழுதினாலும், வேறுவிதமான
குறும்பு வெளிப்படும். கவியரசர் சொல்வது போல், மெட்டிலே வரி அமைந்துவிடும். யாரும்
அதிகமாக கேட்டிருக்க வாய்ப்பில்லாத பாடல். பதினாறு வயதினிலே சப்பாணி’யை கவியரசர் இங்கு
தூவியிருக்கிறார். J
The below link has a better quality movie and after the movie ends, the videos of four songs are uploaded. You can directly play the songs from 2:13:00
'ஆழக்கடலில் தேடிய முத்து' திரையில் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். (படம் பார்த்ததில்லை).
பதிலளிநீக்கு'சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்னத்தாமரையே' என்ற பாட்டும் இல்லை தான்.
கமல் - கடல் - முத்து ஒற்றுமை ;)
மற்றபடி, "ஆவோ பியா ரசகுல்லா" பாடலெல்லாம் டீக்கடை / பஸ் என்று பலமுறை கேட்டிருக்கிறேன். (வானொலியில் தடை கிடை செய்தார்களா தெரியாது, நிறைய ராசா பாட்டுக்களை அக்காலத்தில் AIR தடை செய்து விடுவார்கள்)
எனக்கும் படத்தில் கிடைக்கவில்லை. ஆனாலும் இசைத்தொகுப்பில் இருக்கு. எங்க தலைவர் முகமது அலி’ வரிகள் எல்லாம் இந்த காலத்தில் வெளியவே வராது. :)) கவியரசர் அழகா பலதையும் இணைத்து பாடல் எழுதியிருக்கார். :)) ஒரே இடம் பாடலில் soul எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு ஏகாந்தம்.. வலி.. ரொம்பவும் சோகமில்லை அதே நேரத்தில் ஆழமாக உள்ளே போகுது. :)
பதிலளிநீக்கு