வியாழன், 2 ஏப்ரல், 2015

18 - வாழ நினைத்தால் வாழலாம் | Vazha Ninaithaal Vazhalaam - 1978


தேவராஜ்-மோகன்,  ராஜா கூட்டணியின் அடுத்த படம். பாடல்கள் பஞ்சு மற்றும் கண்ணதாசன். இந்தப்படமும், காற்றினிலே வரும் கீதம் படத்துடன் வெளியாகியிருக்கு, சன 14,  1978. ராஜா இசைன்னு சொல்லியே தயாரிப்பாளரை பிடித்த முதல் இயக்குநர் இவராகத்தான் இருக்கனும். 

கானாங்குருவிக்கு
Manorama
PAC
கானாங்குருவிக்கு
Manorama
PAC
இயற்கை ரதங்களே
TMS – Psusheela
Kannadasan
வீணையை மீட்டும்
S Janaki
PAC
தனக்கொரு சொர்கத்தை
Vani Jayaram
Kannadasan

கானாங்குருவிக்கு கல்யாணமாம் | Kanang Kuruvikku – Manorama

காமெடிப்பாடல். ஆச்சியின் முதல் பாடல் ராஜாவுக்கு. அட்டக்காசமான குரல் ஆச்சிக்கு, கல்யாண சூழலுக்கேற்ற வாத்தியங்களுடன், காமெடியாக பாடி கலக்கியிருக்காங்க.
  இதே பாடலை, வாய்பேச முடியாதவர் போலவும் மனோரமா பாடிய சிறிய துணுக்கொன்று தேடினால் யூடியூபில் கிடைக்கும். 

இயற்கை ரதங்களே | Iyarkai Rathangale – TMS – Psusheela

செயசங்கரு – ஸ்ரீப்பிரியா டூயர் பாடல். யூடியூப் பாடலின் தரம் மிகவும் அடிமட்டத்தில் இருக்கு. நல்ல மெலடி தான். TMS பாடியிருப்பது, சிவாஜியை நினைவு படுத்துகிறது. தரமான பதிப்பில் கேட்கும்போது பாடலை ரசிக்க முடிகிறது.  https://www.youtube.com/watch watch?v=fOZ7LlOH7IY

தனக்கொரு சொர்கத்தை |Thankkoru Sorgathai - VaniJayaram

காதலின் தேவையை வலியுறுத்தி நாயகி பாடும் பாடல். அந்த உறுதி குரலில் தெரிகிறது. அரபிக் / இசுலாம் இசைக்குறிப்புகள் நிறைந்த பாடல். கவாலி மெட்டுக்கள் இடையில் வருகிறது. https://www.youtube.com/watch?v=Mz0U8b06WsA
  

வீணை மீட்டும் | Veenai Meetum – S Janaki

மென்மையான வீணைப்பாடல். பாடலை மட்டும் கேட்பது நல்லது, வீடியோ’வில் குரலும், படமும் ஒத்திசையவில்லை. வீட்டிற்குள் பாடப்படும் அமைதியான பாடல். வீணை மிக அழகாக கேட்கிறது, பாடல் முழுவதும் குரலுக்கு துணை வருகிறது.

இது 77களிலேயே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். டிஎமெசின் குரல் மேலையே ஒலிக்கிறது. கானாங்குருவிக்கு வீணை மீட்டும் கைகளே இரண்டும் கேட்க அருமை. இயற்கை ரதங்களே கேட்கலாம். J

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக