இயக்குநர்
ஸ்ரீதர் அவர்களின் முதல் படம், ராஜாவுடன். அவரின் இதற்கு முந்தைய படம், மீனவநண்பன்.
ஸ்ரீதர் MSV இணையின் மிகப்பெரும் ரசிகர் ராஜா. அதனால் முதலில் ஸ்ரீதர் இந்த படத்திற்கு
இசையமைக்க கேட்டபோது, ராஜா ஒத்துக்கொள்ளவில்லையாம். பல நாட்கள் இப்படியே செல்ல, மிகவும்
கோபத்துடன் ராஜாவிடம் சண்டை போட்டாரம் ஸ்ரீதர். ஒருவழியாக ராஜா காரணத்தை சொல்ல, அதன்பின்பு,
ஸ்ரீதர் MSVஐ ராஜாவிடம் பேசச்சொல்லி, அவர் சொன்ன பிறகு சம்மதித்தாராம் ராஜா. இது குருபக்தி.
ஸ்ரீதர், MSV இணை படங்களின் போது, ராஜா, MSVஇடம் உதவியாளராக இருந்தார். தமது குருவை
விட்டு இப்பொழுது நம்மை கேட்கிறாரே என்ற தயக்கம், குருவே சொன்ன பின்பு தான் இசையமைத்து
தந்தாராம். ஆனாலும் பாடல்களில் எந்த சுணக்கமும் இன்றி, 78ம் வருடத்தின் மிகப்பெரும்
வெற்றிப்படமாக அமைந்தது.
கமல்
ரஜினி இணைந்து நடித்த 16 வயதினிலே இசை மிகவும் பேசப்பட்டது, வெற்றிப்படம். இந்தப்படத்திலும்
அதே இணை, எனவே இளமையான இசைக்கு ராஜாவிடம் வந்திருக்கலாம் இயக்குநர்.
சிட்டுக்குருவி
வெளியான அன்றே வெளியானது இப்படம், ஒரு மைல் கல்லாக, இது ராஜாவின் 25வது படம். பெரிய
இயக்குநர். இளம் நாயகர்கள். பாடல்கள் அனைத்தும் வாலி.
தண்ணி கருத்துருச்சு
|
Malaysia Vasudevan
|
Vaali
|
கிண்ணத்தில் தேன்வடித்து
|
K.J.Yesudas / S.Janaki
|
Vaali
|
ஒரே நாள் உனை நான்
|
S.P.Balasubramaniam / Vani Jayaram
|
Vaali
|
என்னடி மீனாட்சி
|
S.P.Balasubramaniam
|
Vaali
|
நீ கேட்டால் நான்
|
Vani Jayaram
|
Vaali
|
தண்ணி கருத்துருச்சு | Thanni Karuthuruchu Malaysia Vasudevan
இது ஒரு ஏகாந்தமான பாடல். ராஜாவின்
எண்ண ஓட்டம் பிரமிக்கவைக்கும் பாடல். பாடலை எடுத்துக்கொள்வோம், மழைவரும் முன்பு மேகம்
கருத்து, தவளைகள் கத்துவதாக ஒருவன் பாடுகிறான். மழை வரும் முன்பு காற்று தான் முதலில் அடிக்கும்,
அந்த காற்று தான் துவக்கயிசையென வரும் வயலின் ஒலி. காற்றை இந்த ஒலிக்குறிப்பில் ஏற்றி,
Bach, “Air” என்று ஒரு இசைத்துணுக்கு செய்திருக்கிறார், எனக்கு மிகவும் பிடிக்கும்,
காற்று நம்மை தழுவிச்செல்லும். https://www.youtube.com/watch?v=rrVDATvUitA
மழைவருவதற்கு முன்பான காற்றை, ராஜா அருமையாக
13 நொடிகளில் பதிவு செய்கிறார். அதற்கு பின்பு, தாளம், பின்பு மெலடி. பாடலை
பார்த்தபொழுது மிகவும் ஏமாற்றம். பாட்டில் ஒரு துளி மழையில்லை. L
நாயகன் நாயகி மோகத்தில் தவிக்கையில் எங்கோ தூரத்தில் நடக்கும் ஆனந்தக்கூத்து அவர்களை
மேலும் அருகில் வரச்செய்யும், provoking song genreஇல் இது முதல் பாடல். மேலும், இந்த
ரிதம் பேட்டர்ன் ராஜா பாடல்களில் முதன்முதலாக வருகிறது. குரலும் மிகவும் உச்சத்தில்
ஒலிக்க, தாளம் அதை இழுத்து பிடித்து தரையில் ஆடவிட.. நடுவே நடுவே காற்றின் தழுவலை குறிப்பால்
உணர்த்தும் வயலின், இதெல்லாம் தாண்டி, காமத்தின் குறிப்புணர்த்தும் பாடலாக பலகாலம்,
பொதுவெளியில் கொண்டாடப்பட்ட பாடல். காற்று-மழை-மோகம்-காமம்.
கிண்ணத்தில் தேன்வடித்து | Kinnathil Thean Vadithu KJY, SJ
முதல்
அரேபிய பாடல் ராஜாவின் இசையில். பாடலெங்கும் அரேபிய இசைக்குறிப்புகள் நிறைந்து நிற்க,
அருமையான மெலடி. இன்பத்துப்பாலில் இரண்டாம் பாடல், இந்தப்படத்தில்.
ஒரே நாள் உனை நான் | Ore Naal Unai SPB VaniJayaram
Breezy
prelude and shifts to a melody. மெலடியும் காற்றில் பறக்கிறது. இடையிசை வயலின், குழல்
எல்லாம் சேர்ந்து படத்தின் மிகச்சிறந்த மெலடியை செய்திருக்கிறார். இரண்டாம் இடையிசையில்
வரும் கிடாருக்கு முன்பான baseline notesஜ கவனித்தால் மிகவும் subtelஆக ஒலிக்கும். https://www.youtube.com/watch?v=VqXoKehpFtw
என்னடி மீனாட்சி | Ennadi Meenatchi SPB
கமலுக்கு
பொருத்தமாக, இன்றைய குரலில் SPB பாடிய முதல் பாடல். பட்டிதொட்டியெல்லாம் பரவிய பாடல்.
ClubDisco தான், அதிலே காதலிக்கு குறிப்புணர்த்தும் பாடல். இந்தப்பாடலிலும்
baseline is very subtle across the song. Sax bit in the 2nd
interlude is so jazzy and sweet. The closing orchestra, before the pallavi is a
complete jamsession, 3.23 to 3.45
நீ கேட்டால் நான் | Nee Ketaal Naan Vani Jayaram
பாடலின்
முதல் சொல்லில் இருந்தே base guitar, chimes till the first interlude and sax..
amazing orchestration. Raja is spent. Goes all crazy with the instru and enjoys
himself there. எனக்கு மிகவும் பிடித்த இரண்டாம் பாடல் இந்த தொகுப்பில். Checkout
the guitar picking in the second interlude. I think its clawhammer picking
style – instead of strucking or sliding, they pick the strings, makes a
distinct sound or walks in a slower speed.
The english rhyme Kamal sings is down in the valley where the green grass grows.. :))
More than tunes (which is a cakewake for raja by now), I hold this album close to my heart for his shift in orchestration, fusion of more WCM and western genres 5star Album. :))
வந்த நாள் முதல் இந்த நாள் வரை எனக்கு மிகவும் பிடித்த ராசா ஆல்பம்!
பதிலளிநீக்குநான் பல முறை பல இடங்களில் சொன்னது போல, இது தான் பஸ் பயணங்களில் மற்றும் டீக்கடைகளில் ராசா பாட்டு நிரந்தம் ஆனதன் தொடக்க விழா! (டீக்கடையில் அதற்கு முன் பெரும்பாலும் ரேடியோ மட்டுமே. இந்தகாலத்தில் தான் எச் எம் வி ரெகார்ட் ப்ளேயர் ஃபியஸ்டா பிரபலமானது, கேசட் ப்ளேயர்கள் பிரபலமாகும் வரை இவற்றின் காலம் தான். பஸ்களில் சில மட்டுமே அப்போது இறக்குமதி செய்யப்பட்ட ப்ளேயர்கள் இடத்தொடங்கி இருந்தன. ஒரு வருடத்துக்குள்ளேயே அது கிட்டத்தட்ட பிசினஸ் அவசியம் ஆகி விட்டது).
'ஒரே நாள்' பாடல் தொடக்கக்காட்சி இதோடு சேர்ந்திருப்பது மிகப்பொருத்தம்!
இந்த ஆல்பத்தின் எல்லாப்பாடல்களுமே அழகான வரிகளும் கொண்டவை.
பதிலளிநீக்குபாடல் வரிகள் பற்றிய இழையில் நான் இவற்றை மிகவும் அனுபவித்து எழுதி இருக்கிறேன்.
எடுத்துக்காட்டாக, கிண்ணத்தில் தேன் வடித்து குறித்த பதிவு:
http://ilayaraja.forumms.net/t172-minimum-500-preferably-1000-rasa-songs-with-nice-lyrics-not-written-by-vm#14763
(ஆங்கிலம் / தமிழ் கலப்பு மொழி பிடிக்காதவர்கள் திட்ட வேண்டாம்)