தீபம், சனவரி 26, 1977ல் வெளியானது.
ராஜாவுடன்
நடிகர் திலகம் இணைந்த முதல் படம். கே. விஜயன் இயக்கம். படம் சனவரியில் வெளிவந்ததால்,
பாடல்கள் 76லேயே வந்திருக்க வேண்டும். இளையராஜா மீது திரைத்துறைக்கு, நடிகர்
திலகத்துக்கு இருந்த நம்பிக்கையை காட்டுகிறது. பாடல்கள் – புலமைப்பித்தன். ராஜா-புலமைப்பித்தன்
இணைந்த முதல் திரைப்படம்.
பூவிழிவாசலில் – KJY, SJ
: பாடல்
|
கங்கை அமரன் - பல்லவி புலமைப்பித்தன் சரணம்
|
ராஜா,
யுவராஜா – TMS
|
புலமைப்பித்தன்
|
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
– TMS, SJ
|
கங்கை அமரன் - பல்லவி, புலமைப்பித்தன் சரணம்
|
பேசாதே
– TMS
|
புலமைப்பித்தன்
|
சமீபத்திய
தந்திடிவி நேர்காணலில் கங்கை அமரன், அந்தப்புரத்தில் ஒரு மகராணி தான் எழுதிய பாடல என
சொன்னார். விக்கி மற்றும் மற்ற இளையராஜா தகவல் தளங்கள் புலமைப்பித்தன் என்கிறது. கங்கை -பல்லவி, புலமைப்பித்தன-சரணம் என அறிகிறேன். பூவிழி வாசலில் பாடலுக்கு இதே பொருந்தும்.
1. பூவிழிவாசலில்
– KJY, SJ
ராஜா,
மெல்ல preludeல் தடம் பதிக்கிறார். 76ல் வந்த பாடல்களில் Prelude இல்லாமல் தான் பெரும்பாலான
பாடல்கள் ஆரம்பிக்கும். இந்த பாடலில் அரை நிமிட Prelude. Interlude’ம் rhythm section’um
drums. சரணத்தில் தபலா, மற்றும் கிடார். KJY, இலம் கிலியே கிலியே’ன்னு தான் பாடறார்.
2nd interludeல் base guitar மற்றும் வயலின் அசத்துகிறது. ழ அழகாக அமரும்
KJYக்கு, ல,ள வேறுபாடு வரவில்லை. SJ நன்றாக துணைசேர, என்றைக்குமான ஒரு கொண்டாட்டமான
டூயட். https://www.youtube.com/watch?v=KWzRjNoIVY0 இனிமையான, பரபரப்பான பாடல். டூயட்டுகளை விரைவான தாளத்தில் அமைத்து, சிவாஜி பாடல்தானா என நம்மை யோசிக்கவைத்து விடுகிறார் ராஜா. :)
2. ராஜா
யுவராஜா: TMS
இங்கும்
Jazzy Prelude, வரப்போகும் பாடலின் மனப்போக்கை (mood), அரைநெடியில் படம்பிடிக்கிறது.
TMS இளமை பொங்க பாடியிருக்கிறார். இருந்தாலும் பாடலின் dynamics in saranam, MSV’ish
உணர்வை அளிக்கிறது. TMS பாடுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். Playboy Opening Act
song in the movie. இந்த Prelude, படத்தில் தலைப்பிசையாகவும் வருகிறது. https://www.youtube.com/watch?v=OyW_SPAbzRo
3. அந்தப்புரத்தில்
ஒரு மகராணி: TMS , SJ
இளையராஜாவின்
முத்திரை பாடல். TMSன் குரலை தாண்டி, ராஜாவின் முத்திரைகள் பாடலெங்கும் விரவியிருக்கிறது.
Prelude வயலினை கூர்த்து கேளுங்கள், பூமாலையே தேள்சேரவா வரை உங்களுக்கு நினைவில வரும்.
வீணை துணைக்கு வர, TMS கம்பீரமாக அந்தபுரத்தில்
ஒரு மகராணி என ஆரம்பிக்கிறார், பல்லவி முடிந்த நொடி சாமந்திப்பூக்கள் மலர்ந்தன என அனுபல்லவியில்
ஜானகி இணைய, பல்லவி ஏற்கனவே மாறிவிட்டது. J அப்பொழுதே விளையாட ஆரம்பித்து விட்டார்.
இந்த மாறுதல் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கூறு. பாடலின் Orchestrationஐ (பல்லியம் என
கூகுள் தமிழாக்குகிறது) கூர்ந்து கவனித்தால், இங்கிருந்து பல பாடல்களுக்குள் ஊடுபாயந்திருக்கிறது
பிற்காலத்தில். முதல் இடையிசையில் பல பாடல்கள் பொதிந்திருக்கிறது. பாடலின் வேகமும்
(tempo) பாய்ச்சலில் செல்கிறது. 4 நிமிடத்தில், பல்லவி, அநுபல்லவி, 2 சரணம், 2 இடையிசை..முடிவில்
பல்லவியில் ஆராரிரோ என முடிக்கின்றானர் இருவரும். டூயட்டின் இயக்கவியல் வெளியை (dynamics
scape) கச்சிதமாக பிடித்துவிட்டார் ராஜா. இது ஒரு திருப்புமுனை பாடல என்றே சொல்வேன்.
4. பேசாதே:
நடிகர் திலகத்திற்கென அளவெடுத்து அமைக்கப்பட்ட பாடல். நீயும் நானுமா கண்ணா வகையிலான சபதம்- சவால் பாடல். சத்தமாக பாடவிட்டதற்காக மகிழ்ந்து பாடியிருக்கிறார். இருந்தாலும் அந்த அளவை எட்டிப்பிடிக்காமல், கோவத்தையும் ஒரு கட்டுக்குள் இழுத்து நிறுத்தி இசையமைத்திருக்கிறார் ராஜா https://www.youtube.com/watch?v=AEMyErQBQT0
நடிகர் திலகத்திற்கென அளவெடுத்து அமைக்கப்பட்ட பாடல். நீயும் நானுமா கண்ணா வகையிலான சபதம்- சவால் பாடல். சத்தமாக பாடவிட்டதற்காக மகிழ்ந்து பாடியிருக்கிறார். இருந்தாலும் அந்த அளவை எட்டிப்பிடிக்காமல், கோவத்தையும் ஒரு கட்டுக்குள் இழுத்து நிறுத்தி இசையமைத்திருக்கிறார் ராஜா https://www.youtube.com/watch?v=AEMyErQBQT0
அனைத்து
பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும். குறிப்பாக, Orchestration மற்றும் Duet Dynamics’ல்
ராஜா பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். அந்த காலத்திற்கு இது ரகளையான இசைத்தொகுப்பு.
பெரிய நடிகர், வழக்கமாக MSVயின் பாடல்களில் பார்த்து பழக்கப்பட்ட ஒரு நடிகரை, தன் இசையில்
வேறு பிரதியில் உலவவிட்டிருக்கிறார். மலேசியா, ராஜாவின் மனதில் இருந்திருப்பார், எனினும்
சிவாஜி அந்த பரிசோதனைக்கு முன்வந்திருக்க மாட்டார் என்றே அவதானிக்க முடிகிறாது. அதில்லாமல்,
ராஜா இன்னமும் புதுப்பையன் தான், கோடம்பாக்கத்துக்கு. J நமக்குதான். ஆனாலும், he is going strong from movie to movie. முழுப்படமும் இங்கு. Just listen to that Title Music. :) https://www.youtube.com/watch?v=ri8k9hDLwjQ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக