S P முத்துராமன், ராஜா கூட்டணியின் அடுத்த படம். முத்துராமன் நாயகனாக நடிக்க, பாடல்கள் பஞ்சு மற்றும் கண்ணதாசன். ராஜாவின் தொகுப்புகள் இப்படித்தான் இருக்கும் என்ற வரையறைக்குள் அடங்காது. இயக்குநரின் களத்திற்கேற்ப,
வடிவங்கொள்வது என்பதை கடந்த 14 மாறுபட்ட படங்களின் மூலம் அறிந்தோம். அதனால், இந்த தொகுப்பை ஒரு திறந்த புத்தகமாக அணுகவேண்டியுள்ளது.
உங்களைப்போன்றே நானும் ஆவலாக உள்நுழைகிறேன்.
இதய
மழையில்
|
KJY
+ PSuseela
|
PAC
|
மஞ்சள்
அரைக்கும்போது
|
Vani
Jayaram
|
PAC
|
கணக்கு
பார்த்து காதல்
|
TMS
|
PAC
|
வாழ்வென்னும்
சொர்கத்தில்
|
SJ
|
Kannadasan
|
இதய
மழையில்:
அசந்துபோனேன். வேறென்ன சொல்ல. KJYன் குரலின் அடர்த்தி, சூழலை ராஜா அமைத்த விதம், படபடத்து துடிக்கும் இதயத்துடிப்பை ஒத்திருக்கும் தாளம், துவக்க இசையிலேயே இழையும் குரல்கள், அனைத்தும் கவிதை. Sax, Percussion, Violin and PS’s பாவங்கள்.. அடடா.. Very Romantic Duet, yet.

அரைக்கும்போது:
முதன்முறை கேட்டபொழுதே புரிந்தது, மிகவும் பிடித்த பாடல். பெண்ணின் மன ஆழத்தில் இருக்கும் உணர்வுகளை ராஜாவைப்போல் வெளிக்கொணர்ந்தவர் எவருமில்லை. துவக்க குரலிசை முடியும் நொடி அந்த கிடார், டிரம் பிணைப்பை கவனித்தீர்களா? Very Rustic. J 1ST prelude is more beautiful. ஏக்கம் குரலில் வழிகிறது, அதற்கேற்ற ஒருவிதமான சத்தக்குறிப்புகள், நரம்பிசை, குழல் என அருமையான பாடல். இணையத்தில் தேடினால் கிடைக்கவில்லை. சத்தமேகம் தான் ஒரே வழி. https://soundcloud.com/isai-s-d/manjal-aaraikkum

https://www.youtube.com/watch?v=Qs7A0RlAjbI&list=PLviYSX9LX22bTGDjkBxfLgmshVMQLK5Qw&index=3 பாதிப்பாடல் தான் இருக்கிறது இந்தப்பட்டியலில்.
கணக்கு
பார்த்து காதல்:
நாயகன் நாயகிக்கு காதல் வந்த விதத்தை நனவோடை (montage) உத்தியில் TMS பாடியிருக்கிறார். Orchestration – TMS குரலுக்கு ஒரு ஒத்திசைவு இருக்கிறது.

சொர்கத்தில்:
Rock and Roll, Rockabilly கிடார் அமைப்புகளுடன் rythms and blues வகையிலான Jazzy song. முதல் பாடல், இந்த வடிவத்தில். கேட்டவுடன் காதல் கொண்டேன் இந்தப்பாடலின் மீது. அந்த Preludeஐ கேளுங்கள், Chuck Berryன் திறன், rythem pattern and choral notes are அப்படியே பறக்கும் உணர்வை தருகிறது. ராஜா’வின் தீவிர Western Fusion இங்கு ஆரம்பித்தது. 2nd Prelude அப்படியே WCM Violinக்கு தாவுகிறார். ஆழமான குறிப்பு, அடுத்து குரலிசை, அதை அப்படியே எட்டிப்பிடிக்கும் R&R guitar எத்தனை காலகட்ட இசைக்குறிப்புகள்?! அதுவும் 77ல் இப்படி ஒரு பாடல்!!

மனதிற்கு
மிகவும் இதமளித்த தொகுப்பு. இதயமழையில், வாழ்வென்னும் இரண்டும் இரண்டு genre என்றால்,
மஞ்சள் அரைக்கும்போது கொடுக்கும் rustic feel is awesome. மூன்று பாடலுமே என்
evergreen classic’s பட்டியலுக்கு சென்றுவிட்டது. நீங்களும் கேட்டு மகிழுங்கள். இதுதான்
ராஜா. Variety, Fusion and yet rooted in melody.